20 வயதுக்குட்பட்ட ஒருவர் கர்ப்பமடைந்தால் அதை இளம் வயது கர்ப்பமாக கருதலாம்.

திருமணத்திற்கு சட்டபடியான வயது 18 ஆகும். ஆனால் முஸ்லிம் பெண்கள் அவர்களின் பாரம்பரிய முறைப்படி 12 வயதிலும் திருமணம் புரியலாம்.

அது சட்டப்படி ஒரு பாலியல் வல்லுறவாக கருதப்படும், எனவே அது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.

வளரிளம் பருவ வயதையுடைய ஒரு பெண் கர்ப்பமாவதென்பது இலகுவில் சமாளிக்கக்கூடிய ஒரு விடயமல்ல. பல்வேறு காரணங்களுக்காக அது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய விடயமாகும்.

குழந்தைக்கும் தாய்க்கும் அது உடல்நல ஆபத்துக்களை ஏற்படுத்தும்.

வயது வந்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைவிட இக் குழந்தைகள் ஆரோக்கிய, சமூக, மற்றும் உணர்வுபூர்வமான ஆரோக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

இளம் வயது கர்ப்பத்தின்போது மருத்துவ சிக்கல்களான, முதிர்வற்ற பிரசவம், தாய்வழி சிக்கல்கள், சமூக விளைவுகள் போன்ற ஆபத்துக்கள் உள்ளன.

எவ்வாறாயினும் பெண்கள் தங்கள் இளம் வயதில் கர்ப்பமாவதென்பது வயது வந்த கர்ப்பிணிப் பெண்களைவிட 5 மடங்கு ஆபத்தானது.

இளம் தாய்மாருக்கு பின்வரும் மருத்துவ நிலைகளில் அதிக ஆபத்து உள்ளது.

  • கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு அதிக அளவில் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
  • அவர்களுக்கு இரத்த சோகை ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
  • அவர்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படலாம் (குழந்தை முழு வளர்ச்சி அடைவதற்கு முன்னர் பிரசவமாதல்)
  • அவர்களுக்கு பிரசவத்தின்போது தேவையான அளவு நிறை அதிகரிப்பு இருக்காது.
  • அவர்கள் பிரசவத்தின்போது மேலும் பல ஆபத்துக்களைச் சந்திப்பர். குழந்தைப் பிறக்கும்போது இறப்பதற்கான வாய்ப்பும் அதிகம்.
  • இளம் தாய்மார்களுக்குப் பொதுவாகக் கோபம், குற்ற உணர்வு போன்ற எதிர் விளைவுகள் ஏற்படும்.
  • அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்.
  • கவலை, அச்ச உணர்வுகள் போன்றவை இளம் தாய்மாருக்கும், இளம் கர்ப்பிணிகளுக்கும் அதிகரிக்கும்.
  • இளம் தாய்மார்கள் உயர் கல்வியைக் கைவிடும் வாய்புகள் அதிகம். உலக அளவில் இளம் வயதினரில் 18 வயதிற்கு குறைந்தவர்கள் 41 வீதமே உயர்கல்விப் பாடசாலைக்கு செல்கிறார்கள். ஆனால் இவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் உயர்கல்விக்காக சென்றவர்களில் 61 வீதமானோர் அதே வகையான சமூக, பொருளாதார சூழலிலிருந்து வந்தவர்கள் என்பதுடன் குழந்தை பெறுவதை 20 - 21 வயது வரை பிற்போட்டவர்களாகும்.
  • கர்ப்பமான பெண்களில் பலர் பாடசாலைக் கல்வியைக் கைவிட வேண்டியவர்களாக இருக்கின்றனர். இது அவர்களுக்கு தனிப்பட்ட, குடும்ப, சமூக ரீதியாக நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • முழுமையான கல்வியைப் பெறாத ஒரு இளம் தாய்க்கு நல்ல தொழிலொன்று கிடைக்காது.
  • இளம் தாய்மார்கள் அனைவருக்கும், அவர்களது குழந்தைகளை வளர்க்க குடும்ப மற்றும் சமூக உதவி தேவைப்படுகிறது.
  • இளம் தாய்மார் பெரும்பாலும் பட்டினியுடனேயே வாழ்கின்றனர். உலகம் முழுவதிலும் 75 வீதமான திருமணமாகாத அனைத்து தாய்மார்களும் குழந்தை பிறந்த ஐந்து வருடங்களில் நலன்புரி நிலையங்களுக்குச் செல்கின்றனர். இது பட்டினி மற்றும் நலன்புரி சார்பான சுழற்சியை உண்டுபண்ணுகிறது.
  • இளம் தாய்மார்கள் குழந்தையொன்றை பெற்று வளர்க்கும்போது மன அழுத்தங்களையும் மகிழ்ச்சியையும் உளப் பக்குவமும், வாழ்க்கைத் திறன்களும் இல்லாமல் போகலாம்.
  • அவர்கள் பெருமளவில் வீட்டு வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக நேரிடும்.
  • இளவயது கர்ப்பம் பெரும்பாலும் இரண்டு வருடங்களில் மற்றுமொரு கர்ப்பத்திற்கு வழிவகுக்கும்.
  • இளம் தாய்மார்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு குறைவாகவே இருக்கின்றது.
  • இளம் தாய்மார்களுக்கு நிறை குறைந்த குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. 10 வீதமான இளம் தாய்மார்கள் குறைந்த நிறையுடைய குழந்தைகளைப் பெறும் வாய்ப்பு அதிகம். குறைந்த நிறையுடன் பிறக்கும் பிள்ளைகளுக்கு உடல் உறுப்புக்கள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. வளர்ச்சியடையாத உறுப்புக்கள் சுவாசப் பிரச்சினைகள், மூளையில் இரத்தக்கசிவு, பார்வை இழப்பு மற்றும் இன்னும் பல பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும். அவை அதிக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தையும் உண்டுபண்ணும்.
  • சாதாரண நிறையுடைய குழந்தைகளை விட நிறை குறைந்த குழந்தைகள் பிறந்த முதலாவது வருடத்தில் இறக்கும் வாய்ப்பு 20 வீதம் அதிகம்.
  • இக்குழந்தைகள் குறைந்த கவனத்தையே பெறுவர். வீடுகளில் இக்குழந்தைகளைப் புறக்கணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • எனவே அவர்களுக்கு தடுப்பூசி உட்பட சரியான ஆரோக்கியத் தேவைகள் நிறைவு செய்யப்படுவதில்லை.
  • அவர்களுக்கு பழக்க வழக்க பிரச்சினைகளில் ஆபத்து உள்ளது.
  • அவர்களின் மந்தமான வளர்சியினால் மற்றும் புறக்கணிப்பு காரணங்களால் அவர்களுக்கு கற்றல் குறைபாடுகள் ஏற்படும், இதனால் அவர்கள் மத்தியில் கற்கும் திறன் குறைய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
  • துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு.
  • இளம் தாய்மார்களுக்கு பிறக்கும் பெண் பிள்ளைகளில் 22 வீதமானவர்கள் இளம் வயதிலேயே தாய்மையடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • இளம் தாய்மார்களின் பிள்ளைகள் பாடசாலைகளில் அல்லது சட்டப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.
  • அவர்கள் வீட்டு வன்முறைகளுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
  • இளம் தாய்மார்களின் பிள்ளைகள் பொதுவாக குறைந்த அளவான கல்வித்திறமைகளையே வெளிப்படுத்துகின்றனர்.
  • இளம் தாய்மார்களின் பிள்ளைகள் சிறையில் தள்ளப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
  • திருமணம் செய்யும் வரை பாலியல் உறவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள.
  • பாலியல் சுகாதாரம் மற்றும் கருத்தடை முறைகள் பற்றி அறிந்து வைத்திருங்கள்.
  • பாலியலுக்கு மிக உறுதியாக “No” சொல்லுங்கள்.
  • சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட வளரிளம் பருவ மற்றும் இளைய சமுதாயத்திற்கு ஆதரவளிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களில் இணையுங்கள்.
FaLang translation system by Faboba