கவலை, ஊக்கமின்மை, மனக்கசப்பு மற்றும் கோபம் போன்ற உணர்வுகள் அனைத்தும் சில நேரங்களில் இயல்பான மனித உணர்வுகளே. நாம் ஒவ்வொருவரும் பல்வேறு பிரச்சினைகளை வெவ்வேறு வழிகளில் எதிர்நோக்குகின்றோம். நாம் அனைவருக்கும் என்றாவது ஒருநாள் இதுபோன்ற உணர்வுகள் ஏற்பட்டிருக்கும். நீங்கள் சில நேரங்களில் ஒரு நல்ல நண்பரிடம் சண்டையிட்டதன் பின்னர் கவலையடையலாம் அல்லது பரீட்சையில் சித்தியடையாவிட்டால் கவலையடையலாம்.

மனச்சோர்வு சற்று வித்தியாசமானது. மனச்சோர்வு என்பது வலுவான உணர்வுகளின் ஒரு கூட்டாகும். கவலை, ஊக்கமின்மை, நம்பிக்கை இழந்தமை, நம்பிக்கையின்மை போன்ற உணர்வுகள் பல வாரங்களுக்கு, பல மாதங்களுக்கு அல்லது மிக நீண்ட காலத்திற்குக் கூட நீடிக்கலாம்.

இளவயது மனச்சோர்வு மிகவும் தீவிரமான ஒரு பிரச்சினையாகும். நீங்கள் எக்காரணமும் இல்லாமல் தொடர்ந்து மனச்சோர்வுடன் இருக்கலாம், அல்லது  அண்மையில் ஏற்பட்ட தொடர் நிகழ்வுகளால் கோப உணர்வுடன் இருக்கலாம். இவ்விரண்டையும் நீண்ட காலத்திற்கு உணர்வீர்களாயின், நீங்கள் அதை மறைக்கக்கூடாது. ஏனெனில் அது உங்கள் வாழ்க்கையை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கலாம்.

மனச் சோர்வு என்பது பயம், பதட்டம் போன்றவற்றினை கட்டுப்படுத்த முடியாத ஒரு தீவிர உணர்வாகும். அது உங்கள் அனைத்து உணர்வுகளையும் கவனத்தையும் உறிஞ்சுகிறது. சில நேரங்களில் உங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதே ஒரே வழி எனக்கூட நினைக்கலாம். சில நேரங்களில் உங்களுக்கு ஏற்படும் கட்டுக்கடங்காத கோபமானது உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகளுக்குக்கூட வழிவகுக்கலாம். எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத காரணங்களுக்காக உங்கள் கவலை அல்லது கோபம் இருப்பின், நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். அது வீட்டில், பாடசாலையில் அல்லது ஏனைய சமூக மட்டத்தில் உங்கள் வாழ்க்கைக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த முன்னர் நீங்கள் தகுந்த மனநல உதவியை நாடவேண்டியது அவசியமானதாகும்.

உங்கள் நண்பர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார் என சந்தேகம் கொள்வீர்களாயின், தயவுசெய்து எவ்வாறு மன அழுத்தத்தை கண்டுபிடிப்பது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். மன அழுத்தம் நீண்டநாட்களுக்கு நீடிக்கக்கூடாது. சரியான முறையில் கவனித்தால் அதை நிச்சயமாகக் குணப்படுத்த முடியும்.

ஆலோசனை: பின்வரும் இணையத்தளத்திலுள்ள சுய வினாக்களுக்கு விடையளிப்பதன் மூலம் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கின்றீர்களா அல்லது சாதாரண நிலையில் ஆரோக்கியமாக உள்ளீர்களா என்பதை இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

http://depressionteenshelp.com/depression-test-for-teenagers/

நீங்கள் அல்லது உங்கள் நண்பர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பின் அதை அறிந்துகொள்ள இதோ சில அறிகுறிகள்:

  • குறித்த விடயம் பற்றிப் பேசுவதற்கான தேவை அல்லது சில சந்தர்ப்பங்களில் உதவி கேட்டல்.
  • நடத்தையில் மாற்றம், கோபம் மற்றும் விரக்தி நிலை
  • தனக்குத் தானே தீங்கிழைக்கும் எண்ணங்கள்
  • போதைப்பொருள் பாவனையை ஆரம்பித்தல்
  • வீட்டை விட்டு ஓடும் எண்ணங்கள்
  • பாடசாலைக்கு செல்லாமை
  • மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கு செல்வதை தவிர்த்தல்.

முதலில் மன அழுத்த பிரச்சினைகளுக்கு என்ன செய்யலாம்,

  • பிரச்சினையை ஆரம்பத்திலேயே அறிந்துகொள்வது நல்லது
  • ஒருமுறை இனங்காணப்படின், ஒரு மனநல ஆலோசகர் அல்லது மனநல மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.
  • மருத்துவ மற்றும் பேச்சு சிகிச்சை ஆகிய இரண்டும் பல சந்தர்ப்பங்களில் உதவியாக அமையும்.

மக்களைக் கையாளும் விதமானது மன அழுத்தத்தை மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.இதோ நீங்கள் செய்ய வேண்டிய சில விடயங்கள்

  • குறித்த நபருக்கு தனது உணர்வுகளை கொட்டிவிட இடம்கொடுத்தல்.
  • அவர்களது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுங்கள்.
  • நண்பர்களின் பாதுகாப்பு வலையமைப்பொன்றை உருவாக்குங்கள், அவர்கள் எந்நேரமும் அங்கே இருப்பார்கள்.
  • அவர்களுக்கு தேவையானபோது உதவிகளை வழங்குங்கள்.

தற்கொலை எண்ணங்களை அறிந்துகொள்வது எந்நேரமும் சாத்தியமில்லை. சில நேரங்களில் உங்கள் அறிவுக்கு எட்டிய வகையில் அவர்கள் முன்னர் இவ்வாறான முயற்சிகளை எடுத்திருந்தமை உங்கள் நினைவுக்கு வந்தால், அது ஒரு சாட்சியாக இருக்கும்.

ஏனையவற்றில் தற்கொலை எண்ணங்களை கண்டுபிடிக்க சில வழிகளை நீங்கள் இங்கு காணலாம், அவை பின்வருமாறு:

  • சில சந்தர்ப்பங்களில் அவர்கள் நேரடியாக இந்த எண்ணங்களை வெளிப்படுத்தலாம்.
  • ஏனைய சந்தர்ப்பங்களில் மறைமுகமாக தங்கள் எண்ணங்களை நகைச்சுவை அல்லது யோசனை வடிவங்களாக வெளிப்படுத்தலாம்.
  • இவ்வெண்ணங்களை மேற்குறிப்பிட்ட ஏதாவது வடிவங்களில் வெளிப்படுமாயின், நீங்கள் மெதுவாக அது பற்றி விசாரிப்பதுடன் அவர்களின் வெளிப்பாடுகள் செயற்பாட்டு ரீதியான சாத்தியம் பற்றி ஆராயவேண்டும்.
  • அவர் சுயதீங்கு முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டமை உங்களுக்கு தெரிந்திருப்பின், நீங்கள் உங்கள் நண்பரைக் கண்காணிக்க அது ஒரு நல்ல குறிகாட்டியாகும்.
  • அவர்களின் அன்புக்குரிய பொருட்களை விட்டுக்கொடுப்பார்களாயின், அது ஒரு சுய மதிப்பை குறைத்து மதிப்பிடும் அல்லது தற்கொலை செய்யும் மரபுக்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
  • அத்துடன் அந்நபர் அளவுக்கு அதிகமான தாராள மனப்பான்மை உள்ளவராக அல்லது அக்கறையுள்ளவராகவும் இருக்க முடியும்.
  • அவர்கள் நம்மைவிட்டுச் செல்வதற்கும் குட்பை சொல்லுவதற்கும் திட்டமிட்டிருக்கலாம்.
  • முதலில் அவர் உங்களை உதவிக்காக அல்லது குறித்த பிரச்சினை பற்றிப் பேசுவதற்காக அழைத்தமைக்கு நன்றி சொல்லுங்கள்.
  • அச் சந்தர்ப்பத்தில் நீங்கள்தான் அவருக்கு மிக நெருங்கியவராகவும், உதவி செய்யக்கூடியவராகவும் இருப்பதை மறந்துவிடாதீர்கள்.
  • அந்நபரை பதட்டப்படவைக்கவோ, கேலி செய்யவோ வேண்டாம். அவரை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • உங்கள் உதவியைப் பெறுவதற்கு முன்வருகிறார்களா என்பதை அவர்களிடம் கேளுங்கள்.
  • சில நேரங்களில் அந்நபருடன் உரையாடும்போது அவர் தனது உணர்வுகளைக் கொட்டி விட உதவியாக அமையும்.
  • அந்த நபரைப்பற்றியோ அவர் சொல்வதைப்பற்றியோ ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.
  • ஒரு பொறுப்புள்ள நண்பன் என்ற வகையில் உங்கள் நண்பர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முக்கியமான உறவினர்களுக்கு அவரின் மன அழுத்த நிலைபற்றி நீங்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
  • அவர்களிடம் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான சம்மதத்தை பெறுவீர்களாயின் மிகவும் நல்லது.
  • நீங்கள் அவர்களுக்கு நேரடியாக உள்ளுர் மனநல வைத்திய நிலையம், அரச சார்பற்ற நிறுவனம் (சுமித்ரயோ), NIMH போன்றவற்றின் சேவைகளைப் பெற்றுக்கொடுக்கலாம்.
FaLang translation system by Faboba