உங்கள் தனித்தன்மையானது வாழ்க்கையின் மூன்று முக்கிய பாகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

  1. தோற்றமும் உடையும்
  2. ஒழுக்கமும் நடத்தையும்
  3. அறிவும் ஆற்றலும்

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சரியான உடையைத் தெரிவு செய்வதே. இப்போது என்ன பாணி (பெஷன்) இருக்கிறது என்பது அவசியமில்லை.

அடுத்த முறை நீங்கள் ஷொப்பிங் செல்லும்போது இவற்றைப்பற்றி சற்று சிந்தியுங்கள்:

  • உங்கள் தோற்றம்
  • உங்கள் வயது
  • உங்கள் உடல் அமைப்பு
  • நீங்கள் செல்ல வேண்டிய நிகழ்வு
  • உங்கள் சருமத்தின் நிறம்

முதல் பதிவு எப்போதும் சிறந்த பதிவாக இருக்கவேண்டும், அத்துடன் மக்கள் எப்போதும் உங்கள் வழி முறையைக் கவனிக்க வேண்டும். நீங்கள் என்ன அணிகின்றீர்கள், நீங்கள் எவ்வாறு உங்களை செயல்படுத்துகிறீர்கள் என்பதை கவனிக்க வேண்டும். நீங்கள் ஆடை அணியும் விதமானது உங்கள் ஆளுமையைப்பற்றி நிறையக் கூறுகின்றது.

ஒழுங்காக உடை அணிபவர்கள் சிறந்த அமைப்பாளர்களாக கருதப்படுவர்.

சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு ஆடை அணியுங்கள்

பரிந்துரைக்கப்பட்ட காற்சட்டை நிறங்கள்
  • கருப்பு
  • பிறவுன்
  • நேவி
  • ஆலிவ்
  • சாம்பல்
  • வெள்ளை
  • கெமல்
  • கிறீம்
வியாபாரத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட சேர்ட் நிறங்கள்
  • வெள்ளை
  • மென்மையான மஞ்சள் - கிறீம்
  • இள நீலம்
  • இளம் பச்சை
  • லெவென்டர்
  • இளஞ்சிவப்பு
நிற ஒற்றுமை
காற்சட்டைகள் சேர்ட்
கருப்பு வெள்ளை
பிறவுன் கிறீம்
நேவி இள நீளம்
சாம்பல் இள சாம்பல்
ஒலிவ் லைட் பின்க்

(குறிப்பு : குறிப்பிடப்பட்டுள்ள நிறங்களின் சேர்ட்களினதும் காற்சட்டைகளினதும் படங்கள்)

பொறுத்தமான கலவை தேர்வுகள்

கழுத்துப் பட்டிகளின் தேர்வுகள்
  • கழுத்துப் பட்டிகள் அலுவலக ஆடைகளுடன் அணியவேண்டும்.
  • குறைந்த பட்ச டிசைன்களைக் கொண்ட கழுத்துப் பட்டிகளைத் தேர்ந்தெடுங்கள்.
  • உங்கள் காற்சட்டை மற்றும் சேர்ட் நிறத்திற்குப் பொருந்தும் வகையிலான நிறங்களைக் கொண்ட கழுத்துப் பட்டிகளை அணியுங்கள்.
  • உங்கள் கழுத்துப் பட்டி சரியான நீளத்திலுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் - பொதுவாக அது இடுப்புப்பட்டியை தொடும்படியாக இருக்கவேண்டும்.

ஆண்களின் அணிகலன்கள்
  • சப்பாத்துக்கள்
  • இடுப்புப் பட்டி
  • மோதிரங்கள்
  • பிரேஸ்லெட்
  • கைக்கடிகாரம்
  • டை பின்
  • கப் லிங்க்
இடுப்புப் பட்டியும் சப்பாத்தும் பொறுத்தமாக இருக்கவேண்டும்
  • கருப்பு அல்லது பிரவுன்
  • ஸ்டட் (stud) பண்ணப்பட்ட அல்லது பக்கிள் வைத்த சப்பாத்துக்களை அணியக்கூடாது.
  • இறப்பர் பாதணி அல்லது ஸ்னீக்கர்ஸ்களை அலுவலகத்திற்கு அணியக்கூடாது.
  • பிரவுன் சப்பாத்து, பிரவுன் சொக்ஸ்கள், பிரவுன் காற்சட்டைகள், கருப்புடன் கருப்பு
  • சொக்ஸ்கள் கணுக்கால் வரை அணியவேண்டும்.
  • உங்கள் இடுப்புப்பட்டி உங்கள் சப்பாத்துக்கு பொறுத்தமாக இருக்கவேண்டும்.
கைக்கடிகாரங்கள்
  • தங்கம் அல்லது வெள்ளி நிறக் கைக்கடிகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
  • அவை சிம்பிள் டிசைன்களில் இருந்தால் நன்றாக இருக்கும்.
நகைகள்
  • நீங்கள் நகைகளை அணிய விரும்பினால், உங்கள் தெரிவு எளிமையானதாக இருக்கவேண்டும்.
  • ஒரு பிரேஸ்லட் மட்டும் அணியுங்கள்.
  • ஒரு சிறிய டை பின்னைத் தேர்ந்தெடுங்கள்.
  • உங்கள் விரல்களில் அதிகமான மோதிரங்களை அணியாதீர்கள்.
  • கழுத்தைச்சுற்றி பதக்கம் ஏதாவது அணிவீர்களாயின் அது சிறியதாக இருக்கவேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட காற்சட்டை மற்றும் பாவாடை நிறங்கள்
  • கருப்பு
  • பிறவுன்
  • நேவி
  • ஒலிவ்
  • சாம்பல்
  • வெள்ளை
  • கெமல்
  • கிறீம்
பரிந்துரைக்கப்பட்ட பிளவுஸ் மற்றும் சேர்ட் நிறங்கள்
  • வெள்ளை
  • மென்மையான மஞ்சள் - கிறீம்
  • இள நீலம்
  • இளம் பச்சை
  • லெவென்டர்
  • இளஞ்சிவப்பு
அலுவலகத்திற்காக/ வேலைக்காக பரிந்துரைக்கப்பட்ட சேலை வகைகள்
  • பகல் நேரத்தில் வெளிர் நிறங்கள் அணியுங்கள். இருண்ட வர்ணங்களை அணியாதிருக்க முயற்சி செய்யுங்கள்.
  • நீங்கள் அணியும் உள்ளாடைகளும் ஜாக்கெட்களும் பொருத்தமாக உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.
  • சேலையில் தொங்கும் பகுதியை உங்கள் தோள் பட்டையிலிருந்து நழுவி விடாமல் இருக்க ஊசிப்பின்னால் அழகாக குத்திக்கொள்ளுங்கள்.
  • உங்கள் உடலைச் சுற்றி முந்தானையை இழுக்காதீர்கள்.
  • உங்கள் உருவம், வயது மற்றும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சேலை நிறத்தை தெரிவு செய்யுங்கள்.
  • (குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறங்களுக்கு ஒத்த சேலைகள், டொப்ஸ் மற்றும் பொட்டம்கள் படங்களில் காட்டப்பட்டுள்ளது.)
பெண்களுக்கான அணிகலன்கள்

உங்கள் தோற்றத்தை முழுமைப்படுத்துவதற்கான அணிகலன்கள் மீது கவனம் செலுத்துவதற்காக பின்வரும் வழிகாட்டியை பின்பற்றுங்கள்:

  • நீங்கள் பாவாடை அல்லது காற்சட்டை அணியும்போது மூடப்பட்ட சப்பாத்து அல்லது சன்டில்ஸ் அணியுங்கள்.
  • நீங்கள் சேலை அணியும்போது பட்டைகள் கொண்ட சப்பாத்து அல்லது சன்டில்ஸ் அணியுங்கள்.
  • சிறிய 3 அங்குல குதியுயர்ந்த பாதணியும் பொருத்தமாக இருக்கும்.
  • உங்கள் அலுமாரியில் கருப்பு மற்றும் பிரவுன் பாதணிகள் இருப்பது அவசியம்
  • இரப்பர் செருப்பு வேண்டாம்.
பைகள் மற்றும் இடுப்புப்பட்டிகள்
  • கருப்பு மற்றும் பிரவுன் கட்டாயம் இருக்கவேண்டும்.
  • கருப்பு மற்றும் பிரவுன் சப்பாத்து ஜோடிகளை வைத்துக்கொள்ளுங்கள்.
  • அளவுக்கு அதிகமான பெரிய பைகள் மற்றும் பிடிகள் உடைந்த அல்லது மங்கிய பைகளை எடுத்துச்செல்லாதீர்கள்.
நகைகள்
  • எளிய, மெல்லிய சங்கிலிகளை அணியுங்கள்.
  • தோடுகள், காதணிகள், வளையல்கள் மற்றும் கைக்கடிகாரங்களை அணியுங்கள்
ஒப்பனை

சரியான ஒப்பனையை செய்து கொள்ளுதல்.

உங்கள் முகத்திற்கு ஒப்பனை செய்வதற்கு முன்னர் முகம் சுத்தப்படுத்தப்பட்டு ஈரப்பதனுடன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முகத்தையும் கழுத்தையும் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

முதல் படி - ஒப்பனை (பவுண்டேஷன்)

உங்கள் சருமத்திற்கு ஒத்த நிறத்தைத் தெரிவு செய்யுங்கள்.

  • இது கறைகள், புள்ளிகள், மற்றும் கோடுகளை மறைப்பதற்கு உதவும்.
  • நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கக்கூடிய ஒப்பனையை செய்யுங்கள்.

திரவம்

  • குறைபாடற்ற சருமத்தின் நேர்த்தியான நிறைவுக்கு
  • வயதான சருமக் கோடுகளை நிரப்ப

கிறீம்

ஒரு நல்ல ஆவரணத்திற்கு

கேக்/ பேன்கேக்

  • அதிக பயன்பாடு
  • புகைப்படம்/திரைப்படம் மற்றும் பேஷன் ஒப்பனை
இரண்டாம் படி - பௌடர்
  • பவுண்டேஷனுக்குப் பாவித்த அதே நிறத்தைப் பாவியுங்கள்.
  • இது உங்களுக்கு மிருதுவான நிறைவைக் கொடுக்கும்.
  • பவுண்டேஷனை காற்று உட்புகாத இடத்தில்/கொள்கலனில் களஞ்சியப்படுத்தி வைக்கவும்.
மூன்றாம் படி - கண் ஒப்பனை
  • கண் புருவ பென்சில்
  • கருப்பு அல்லது பிரவுன் ஷேட்

நோக்கம்

  • இயற்கையான வடிவத்துடனான கண் புருவத்திற்கு
  • புருவத்தை நிரப்ப சரியான வடிவத்தை வரையவும்
    • உயர் வளைவு
    • வட்ட வளைவு
    • வளைவு இல்லை
    • புருவ ஆரம்பம்
    • வளைவின் புள்ளி
    • புருவ முடிவு
    • வட்டமான கோணம்
    • எளிய கோணம்
    • கடினமான கோணம்
    • 'S'வடிவ கோணம்
    • தட்டையான கோணம்

கண் நிழல்

  • கண் நிழலை ஒரு சித்திரமாக வரைதல்.
  • நிறத்தை கலக்க கற்றுக்கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு பொருத்தமான நிறத்தை இனங்காணுங்கள்.

கண் லைனர் மற்றும் மஸ்காரா

உதடு மற்றும் கன்னம்

ப்ளஷர் (Blusher)

  • மிகக் குறைவாகவே பயன்படுத்தவும்.
  • பகல் நேரங்களில் தவிர்க்கவும்.
  • முக வடிவத்தை கருத்தில் கொள்ளவும்.

சிறந்த தோற்றம்

சிறந்த தோற்றமானது உங்களுக்கு சிறந்த அழகைத் தரும். தோற்றத்தின் வடிவங்கள் பற்றி சில விளக்கங்கள் கீழே தரப்படுகின்றன.

பெண்கள்

பார்ப்பதற்கு மெலிவானதும் நளினமானதுமாக உங்கள் தோற்றத்தை வைத்திருக்க முயலுங்கள்.

நேரான நடை
  • நளினமான நடை
  • உங்கள் நாடியை மேல் நோக்கி வைத்திருத்தல்
  • தோல்பட்டை நேராக இருத்தல்
  • தலை நிமிர்ந்து இருக்கவேண்டும்
  • மற்ற அடியை வைப்பதற்கு முன்னர் ஒரு அடி முன்னே வையுங்கள். 
அலுவலகத்தில் உட்காரும் முறை
  • நளினமாக உட்காருங்கள்.
  • உங்கள் முதுகுத் தோற்றத்தை 90 டிகிரிக்கு வைத்துக்கொள்ளுங்கள்.
  • உங்கள் பாதங்களை தரையில் படும்படி வைத்திருங்கள்.
  • தலை நேராக இருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள்.
வளைதல்
  • உங்கள் முழங்கால்களை மடித்து வளையுங்கள்.
  • உங்கள் முதுகை நேராக வைத்திருங்கள்.

சமூக மற்றும் வியாபார நடத்தை

நீங்கள் தனியார், பொது மற்றும் கூட்டுறவு இமேஜை புரிந்துகொள்ள வேண்டும்.

  • தனியார் இமேஜ் - உடைகளின் பாணி, நம்பிக்கை, உரையாடல் திறன்கள், அனுகுமுறை, மனப்பான்மை மற்றும் உடல்மொழி போன்ற உங்கள் நடத்தைகள் மற்றும் தோற்றத்தை குறிக்கும்.
  • பொது இமேஜ் - நீங்கள் ஆடை அணியும் விதம், நடத்தைகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கை மற்றும் சுய உத்தரவாதம் போன்ற வெளிப்படையான அனுபவங்களின் தரங்களைப் பயிற்சி செய்யுங்கள்.
  • வியாபார இமேஜ் - நீங்கள் மற்றவர்களுடன் தொடர்பு  கொள்ளும்போது உங்களுக்கு தொழிநுட்ப அனுகுமுறை வேண்டும். இது உங்கள் சகாக்களுடன் இருக்கலாம். திட்டமிடல் நிகழ்வின்போது அவற்றில் கலந்து கொண்டு மற்றவர்களுக்கு வாழ்த்துவதாக இருக்கலாம். நீங்கள் எவ்வாறு தனிப்பட்ட ரீதியாகவும் மற்றும் பொது ரீதியாகவும் நடந்துகொள்கிறீர்கள் என்பது முக்கியம்.

நடத்தை என்பது சமூகம், சமூக வர்க்கம் அல்லது குழுக்களுக்கிடையிலான ஒழுங்குமுறைகளைக் குறிக்கும்.

சமூக நடத்தை
  • சமூகத்தில் உங்களுக்குள்ள மரியாதையைக் கொண்டு அளவிடப்படும்.
  • உங்கள் பாலினம் ஒரு பங்கு வகிக்கின்றது.
வியாபார நடத்தை
  • பதவி நிலை மற்றும் சக்தியைக் கொண்டு அளவிடப்படும்.
  • இதில் உங்கள் பாலினம் ஒரு பங்கு வகிக்கின்றது.

அறிமுகங்கள்

  • ஒரு வணிக சந்திப்பின்போது மக்களை அறிமுகப்படுத்த தவறுவீர்களாயின் அது உங்களை தொழில்முறையற்றவர் போல் காட்டிவிடும்.
  • ஒருவர் அறையொன்றுக்குள் பிரவேசிக்கும் போது அல்லது ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளும்போது எப்பொழுதும் மரியாதை செலுத்துவது ஒரு குறியீடாக உயரும்.
  • மக்களுடன் பேசும்போது அல்லது சிரிக்கும்போது கண் தொடர்பு இருக்கவேண்டும்.
  • உறுதியுடன் கைகொடுங்கள்.

அறிமுகப்படுத்தும் விதிமுறைகள்

  • தராதரம் - பெருநிறுவனங்கள் துறை
  • பாலினம் - ஆண்களுக்கு முன்னர் பெண்கள்
  • வயது - ஒரு மூத்த நபரை மிகுந்த மரியாதையோடு
  • குறைந்த முக்கியம் வாய்ந்த நபரை, அதிக முக்கியத்துவம் வாய்ந்த நபருக்கு முதலில் அறிமுகப்படுத்தவேண்டும்.

கை குலுக்குதல்

  • கை குலுக்குதல் வரவேற்பதற்கும் ஏற்றுக்கொள்வதற்குமான ஒரு சைகையாகும்.
  • உங்கள் வலது கரத்தை நீட்டுங்கள்.
  • மற்ற நபரின் கையை நன்றாகவும், தன்னம்பிக்கையுடனும் பிடித்துக்கொள்ளுங்கள்.
  • மற்ற நபரின் கையை உறுதியாகவும் முழுமையாகவும் பற்றிக்கொள்ளுங்கள்
  • கண் தொடர்பை ஏற்படுத்திச் சிரியுங்கள்.
  • மூன்று செக்கன்களில் கைகளை விடுவியுங்கள்.
  • யாராவது கைகுலுக்க வரும்போது அது எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை ஏற்பதற்கு ஒருபோதும் மறுக்காதீர்கள்.
பல்வேறு வகையிலான கை குலுக்குதல்கள்
  • க்ளம்மி கைகுலுக்கல்
  • ஸ்குயீஸ்ட் கைகுலுக்கல்
சரியான மற்றும் பிழையான கைகுலுக்கல்களுக்கான உதாரணங்கள்
  • அதிகம் திறந்த
  • சரியானது
  • அதிக வலுவான

மின்னஞ்சல் நடத்தை

மின்னஞ்சல் நடத்தை ஒரு புதிய கருதுகோளாகும். நடத்தைகளுக்கான விதிமுறைகள் மாறுபடுகின்றன. எமது அதிகரித்த மின்னஞ்சல் பாவனையே இதற்குக் காரணமாகும். சில பொதுவான நடத்தை விதிமுறைகள் பின்வருமாறு அனுசரிக்கப்படவேண்டும்.

மின்னஞ்சல் நடத்தைக்கான தேவை
  • தொழில்
  • வினைத்திறன்
  • பொறுப்புக்களின் பாதுகாப்பு

மின்னஞ்சல் நடத்தையை பின்பற்ற சில குறிப்புக்கள்
  • உங்கள் மின்னஞ்சல் முகவரியின் கௌரவம் பேணப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • உங்கள் மின்னஞ்சல் முகவரியை, குறிக்கோளுடனும் அத்தியாவசியத் தேவைக்காகவும் பயன்படுத்தவும்.
  • ஜங்க் மெயில் மற்றும் செயின் மெயில்களை அனுப்பாதீர்கள். அது உங்களுக்கு மதிப்பைச் சேர்க்கவோ மரியாதையை ஏற்படுத்தவோ மாட்டாது.
  • அலுவலக உபயோகத்திற்கு உங்கள் தயாரிப்புகளை/ சேவையை சந்தைப்படுத்துவதற்கு தனியான மின்னஞ்சல் முகவரியை உபயோகிக்கவும். உங்கள் சொந்த மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தாதீர்கள்.
  • கொட்டை எழுத்துக்களையோ அல்லது கெபிட்டல் எழுத்துக்களையோ பயன்படுத்தாதீர்கள்.
  • விடய களத்தை வெற்றாக விடாதீர்கள். அப்படி வெற்றாக விடுவீர்களாயின், அதில் நீங்கள் உறுதியாக எதுவும் சொல்லவில்லை என்று தோன்றும்.
  • நீண்ட கடிதம்  எழுதப்பட்டிருப்பின் அதே தலைப்பை பயன்படுத்தாதீர்கள். உள்ளடக்கத்திற்கு ஏற்ப மாற்றவும்.
  • மூத்தவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது அல்லது அலுவலக அஞ்சல்களில் சுருக்கெழுத்துக்களைத் தவிர்க்கவும்.
  • நீங்க எழுதிய அஞ்சல் வரைபில் எழுத்துப்பிழை பார்க்கவும்.
  • அஞ்சல் ஒன்றை எழுதும்போது, நீங்கள் அமைதியாக இருக்கவேண்டும். எழுதும் மின்னஞ்சல் அளவுக்கு அதிகமாக உத்தியோகபூர்வமானதாக அல்லது வழமையானதாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் உங்கள் மின்னஞ்சலை ஒழுங்காக சரிபார்க்க வேண்டும். இணையத்தளத்தில் ஒரு பதில் அல்லது ஒரு உறுதிப்படுத்தலை எதிர்பார்த்திருப்பின் அது உடனடியாக வரும் என நம்பப்படுகிறது.
  • மின்னஞ்சல் ஒன்றை அனுப்புவதற்கு முன்னர், நீங்கள் தெரிவிக்க விரும்பும் விடயத்தை அது சரியாகத் தெரிவிக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தொலைபேசி நடத்தை

  • தொலைபேசி அழைப்பொன்றை எடுக்கும்போது நீங்களே உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • அழைப்பாளரை அவரது பெயரைக்கொண்டு அழைப்பீர்களாயின் மரியாதையுடன் அழையுங்கள்.
  • உரையாடலை சுருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.
  • பொறுமையை இழக்க வேண்டாம்.
  • கவனமாக காதுகொடுங்கள்.
  • இடையூறு விளைவிக்காதீர்கள்.
  • தொலைபேசியில் உரையாடும்போது எதையும் மெல்லவோ உண்ணவோ வேண்டாம்.
  • நீங்கள் அழைப்பாளரை நிறுத்தி வைக்க விரும்பினால், அவரது அனுமதியைப் பெறவேண்டும்.
  • ஒரு பொருத்தமான வாழ்த்துடன் உரையாடலை நிறைவு செய்யுங்கள்.
  • அழைப்பை முதலில் அழைப்பாளர் துண்டிப்பதற்கு இடம் கொடுங்கள்.
  • மிஸ்கோல் வரும் சந்தர்ப்பத்தில், நியாயமான நேரத்திற்குள் மீள் அழைப்பை மேற்கொள்ளுங்கள்.
  • யாராவது தவறாக உங்களுக்கு அழைப்பு விடுப்பார்களாயின், அது தவறான அழைப்பென்று அவருக்கு அமைதியாக சொல்லுங்கள்.
கோபங்கொண்ட அழைப்பாளரை சமாளித்தல்
  • அவரது புகாரையும் பிரச்சினையையும் கவனமாகக் கேளுங்கள்.
  • அவர் முழு விடயத்தையும் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாகக் கேளுங்கள். இடையூறு விளைவிக்காதீர்கள்.
  • "நீங்கள் செய்தது தவறு" என சொல்லாதீர்கள்.
  • அவரைப் புரிந்துகொள்ளுங்கள்.
  • உங்கள் பக்கத்தில் நீங்கள் நியாயமாக, திறமையாக இருந்து, நன்கு ஆராய்ந்து அவரது புகாரை அல்லது பிரச்சினையை தீர்த்து வையுங்கள்.
  • பிரச்சினைனைத் தீர்ப்பதற்கான படிமுறைகளை அவருக்குத் தெளிவுபடுத்துங்கள்.
  • பிழையாக வழிநடத்தாதீர்கள்.
  • பிரச்சினைக்கு தகுந்த தீர்வு கிடைத்ததும், அவருக்கு அழைப்பு எடுத்து அதுபற்றித் தெரிவியுங்கள்.

அலுவலக நடத்தை

  • அலுவலக நன்னடத்தையைப் பேணுபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சிறந்த வாய்ப்புகள் வழங்கப்படும்.
  • சுய விழிப்புடன் இருங்கள், பொது அறிவைப் பயன்படுத்துங்கள்.
  • உங்கள் சொந்த விடயத்தை கவனியுங்கள்.
  • ஒருபோதும் உங்கள் மேற்பார்வையாளர்களின் தலைக்கு மேல் போகாதீர்கள்.
  • உங்கள் நிறுவன சீறுடை விதிகளைப் பின்பற்றுங்கள்.
  • கோபமூட்டும் அல்லது நிறுவனத்திற்கு பாதகமான விடயங்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யாதீர்கள்.
  • சக ஊழியர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்திற்கு மரியாதையை செலுத்துங்கள்.
  • நேர்மறையான அணுகுமுறையையே கடைப்பிடியுங்கள். அத்துடன் உங்கள் அணிக்கு நீங்கள் செய்யக்கூடிய பங்கு என்ன என்பதை அறிந்து - எவ்வாறு சிறப்பாக உதவ முடியும் என்று சிந்தியுங்கள்.
  • உங்கள் சொந்த வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
  • உங்கள் சக ஊழியர்களிடம், மேற்பார்வையாளர்களிடம், வாடிக்கையாளர்களிடம், நலன் விசாரிக்கும் வழிமுறைகளைப் பற்றி சிந்தியுங்கள். (வணிக கடிதம், தொலைபேசி அழைப்பு போன்றவை)
அலுவலக பண்பாட்டுக் கூறுகள்
  • வாழ்த்துதல், இன்சொல் பேசுதல் மற்றும் மனங்கவர்தல் - எப்பொழுதும் காலை வாழ்த்துக்களைச் சொல்லி தொழிலை ஆரம்பியுங்கள். நன்றி அல்லது தயவு செய்து என்று சொல்லுதல் உங்களுக்கு முழுதான புதிய உலகத்தை உருவாக்கும். 
  • நேரம் தவறாமை - காலம் தவறாமையே ஆளுமை மற்றும் வணிகத்தின் ஆத்மா. மற்றொரு நபரின் நேரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். குறித்த நபருக்கு நீங்கள் நேரந்தவறி வருவதையிட்டு அறிவிக்க வேண்டும் என்பது முக்கியம்.
  • இடம் - தனிப்பட்ட மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கிடையில் உங்கள் இடம் என்ன என்பதை அடையாளம் காணுங்கள்.
  • உரையாடல் - வழக்கு மொழி பேசாதீர்கள், உங்கள் உடல்மொழியில் கவனத்தை குவியுங்கள், நன்கு தேர்ந்தெடுத்த சொற்களைப் பேசுங்கள், மரியாதையுடன் பேசுங்கள்.
  • தோற்றம் - ஏற்கனவே மேலே குறிப்பிட்டவைகளை வாசித்தறியவும்.
  • வசதிகளை உபயோகித்தல் - கழிவறைகள், உணவறைகள், மற்றும் லிப்ட்டுகள் போன்றவற்றை மற்றவர்களும் பயன்படுத்தவேண்டும் என்பதில் மனசாட்சியுடன் செயல்படுங்கள்.

கூட்டங்கள் தொடர்பான நடத்தை

  • சூளுரைகளையும், ஆபாச வசனங்களையும் தவிருங்கள்.
  • பலவீனமான தொடர்பாடல் திறன் நிபுணத்துவமாகாது.
  • முதலாவது கூட்டத்தின்போது தனிப்பட்ட கேள்விகளைத் தவிருங்கள்.
  • முதலில் கதவை அடைந்தவர் யாராக இருப்பினும், பின்தொடர்ந்து வரும் மற்றவர்கள் அனைவரும் உள்ளே வரும் வரை கதவை திறந்து வைத்திருக்க வேண்டும்.
  • உங்கள் செல்லிடத் தொலைபேசியை ஒலிப்பானை அணைத்து வைக்கவும்.
  • SMS செய்திகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளுங்கள்.

விசிட்டிங் காட் நடத்தை

  • எப்பொழுதும் விசிட்டிங் காட் ஒன்றை வைத்திருக்கவும்.
  • அதை தேவையான தகவல்களுடன் சிறந்த வடிவத்தில் வைத்திருங்கள்.
  • அதை பயனபடுத்தக்கூடிய விதத்தில் வைத்திருங்கள்.
  • அதைத் தேவையானவர்களுக்கு மட்டும் வழங்குங்கள்.
  • தகுந்த நேரத்தில், தகுந்த முறையில் அதை வழங்குங்கள்.

அலுவலக கியூபிகல் நடத்தை

  • ஒருவரின் அனுமதியின்றி அவரின் கியூபிகலுக்குள் ஒருபோதும் செல்லாதீர்கள்.
  • வாசலில் இருந்து அவரை அழையுங்கள் அல்லது மெதுவாகக் கதவைத் தட்டுங்கள்.
  • அவசியமான நேரத்தில் உங்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்ற ஒரு சமிக்ஞையை அல்லது கொடியை உங்கள் கியூபிகல் வாசலில் வைக்கலாம்.
  • நீங்கள் நடந்து செல்லும்போது ஒவ்வொரு கியூபிகலையும் எட்டிப்பார்க்காதீர்கள்.
  • ஒருவர் தொலைபேசி அழைப்பில் இருக்கும்போது அவரின் கியூபிகலுக்கு வெளியே அவர் தொலைபேசியில் பேசி முடியும் வரை திரிந்துகொண்டு இருக்காதீர்கள்.
  • வேறொருவரின் கியூபிகலில் உள்ள கணனித் திரையில் உள்ள விடயங்களை வாசிக்கவோ அல்லது காதில் விழும் உரையாடலுக்கு கருத்துச் சொல்லவோ வேண்டாம்.
  • ஏதாவது குறிப்புகளை எழுத மற்றவர்களின் மேசையில் உள்ள காகிதங்களை எடுக்காதீர்கள்.
  • கியூபிகல் உள்ளே உணவு உண்பதை தவிருங்கள்.

நீங்கள் வீட்டில் அல்லது ஓட்டலில்/ ரெஸ்டோரண்டில் மக்களை மகிழ்விப்பவராக இருப்பின் இவ்விடயங்கள் முக்கியமானவை:

  • விருந்தினர்களை வரவேற்கும் உங்கள் ஆற்றல்
  • சிறப்பாக பேசும் திறன்
  • மற்றவர்களை கையாளும் திறன்
  • உங்களதும், உங்கள் நிறுவனத்தினதும் நன்மதிப்பைப் பேணுதல்.

ஒரு உபசரிப்பாளராக உங்களின் கடமைகள்

  • உங்கள் விருந்தினரை நீங்கள் திருப்திகரமாக உபசரிக்கவேண்டுமாயின், நீங்கள் கட்டாயமாக சரியான உடையணிந்திருக்க வேண்டும்.
  • உணவு பரிமாறும் திட்டத்தில் தெளிவாய் இருக்கவேண்டும்.
  • முன்கூட்டியே குறிப்பிட்ட இடத்திற்கு வந்துவிட வேண்டும்.

ஒரு விருந்தினராக உங்கள் கடமைகள்

  • நீங்கள் அழைத்து கௌரவப்படுத்தும் அளவுக்கு மதிப்பானவர் என்பதை உங்கள் சரியான நடத்தைகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
  • சரியான நேரத்திற்கு வருகை தரவும் - அதிக நேரத்துடனேயோ அல்லது அதிக தாமதமாகவோ வரக்கூடாது.
  • பொருத்தமாக உடையணியவும்.
  • நிகழ்வில் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழக வேண்டும்.
  • உங்கள் கௌரவத்தைப் பேணவேண்டும்.
  • உபசரிப்பாளர்களின் கனிவான அழைப்பிற்கு நன்றி சொல்ல வேண்டும் .
  • நேரத்திற்கு இடத்தைவிட்டு அகன்றுவிட வேண்டும்.

மேசை ஒழுக்கம்

  • கரண்டிகள் மற்றும் பாத்திரங்கள்
  • சயிட் பிளேட் இடது பக்கம் இருக்கவேண்டும்
  • கிளாஸ்கள் அனைத்தும் வலது பக்கம்
  • நெப்கின்கள் உங்கள் முன்னால் அல்லது இடது பக்கம்
  • அனைத்து கரண்டிகளும் கத்திகளும் உங்கள் தட்டின் வலது பக்கம்
  • அனைத்து முள்ளுக் கரண்டிகளும் உங்கள் தட்டின் இடது பக்கம்
  • இனிப்புக் கரண்டி மற்றும் கேக் கரண்டி தட்டின் முன்னால்
  • கத்தி, முள்ளுக் கரண்டி அல்லது கரண்டி மூலம் உணவை நோத்தியாக உண்ணவும்
  • உங்கள் விருப்பப்படி மீண்டும் உணவுகளை எடுக்கும்போது புதிய தட்டுக்களைப் பாவிக்கவும்.
நெப்கின்கள்
  • உட்கார்ந்திருக்கும்போது உங்கள் மடிக்குக் குறுக்காக விரித்து வையுங்கள்.
  • உணவின்போது தேவையாயின் நெப்கினை மென்மையாகப் பயன்படுத்துங்கள்.
  • எழுந்திருக்கும்போது நெப்கினை மடிக்காதீர்கள். அதை தளர்வாக மேசை மீது வையுங்கள்.
  • உணவின் இறுதியில், நெப்கினை மடிக்காது மேசை மீது வையுங்கள்.
பாண் மற்றும் பட்டர்
  • சயிட் பிளேட் பாணுக்கும் பட்டருக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • பட்டர் கத்தியை - அல்லது உணவிற்காக கொடுத்த கத்தியை பயன்படுத்துங்கள்.
  • விரலால் பாணை உடைக்க - வெட்ட வேண்டாம்.
  • உங்களுக்கு உண்பதற்கு இலகுவான விதத்தில் வெட்டவும்.
  • பட்டரை அளவாகப் பயன்படுத்தவும்.
எப்படைசர்
  • வழங்கப்படும் முள்ளுக்கரண்டி மற்றும் கத்தியையே பயன்படுத்துங்கள்.
  • மீன் உணவுகளுக்காக Fish knife வழங்கப்படும்.
சூப்
  • கரண்டியை வலது கையில் பிடிக்கவும்.
  • பக்கவாட்டாக கரண்டியை வையுங்கள்.
  • கரண்டியின் பக்கமாக அருந்துங்கள்.
  • பாத்திரத்தை உங்களுக்கு தூரமாக வைத்துச் சாயுங்கள்.
  • கின்னத்தை நோக்கி வாயை கீழே கொண்டு செல்லாதீர்கள். வாயை நோக்கி கரண்டியைத் தூக்குங்கள்.
  • அருந்தும்போது சத்தம் செய்யாதீர்கள்.
  • இறுதியாக, கரண்டியை தட்டின் மேல் வைக்கவும்.

கத்தியையும் கரண்டியையும் பயன்படுத்துதல்
 
கத்திக்கும் கரண்டிக்கும் ஓய்வு கொடுத்தல்

நிறைவு செய்யப்பட்ட நிலை

மேசை நல்லொழுக்கம் விபரமாக

  • உணவு இடது பக்கத்திலிருந்து பரிமாறப்படும். பாத்திரங்கள் வலது பக்கத்திலிருந்து அகற்றப்படும்.
  • உப்பையும், மிளகையும் கேட்டு வாங்குங்கள். எடுக்க முயலாதீர்கள் - கொடுக்கும்போது இரண்டையும் சேர்த்து கொடுங்கள் உணவை இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு அனுப்புங்கள்.
  • ஏதாவது கேட்பதற்கு எப்பொழுதும் 'தயவுசெய்து' என்று சொல்லுங்கள். ஒரு உணவகத்தில், உங்களுக்குப் பரிமாறுபவர் பயன்படுத்திய பொருட்களை அகற்றிய பின்னர் நன்றி சொல்லுங்கள்.
  • பட்டர், ஸ்ப்ரெட், அல்லது டிப்ஸ் போன்றவற்றை பரிமாறும் பாத்திரத்திலிருந்து உங்கள் பாத்திரத்திற்கு நீங்கள் உண்பதற்கு அல்லது ஸ்ப்ரெட் பண்ணுவதற்கு முன்னர் மாற்றப்பட வேண்டும்.
  • அனைவருக்கும் பரிமாரிய பிறகுதான் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.
  • பாத்திரங்களின் பின் பக்கத்தை வெள்ளியா அல்லது சைனாவா எனப் பரிசோதிக்காதீர்கள்.
  • புதிய வகை உணவாயின், உங்கள் உபசரிப்பாளரிடம் அதை எவ்வாறு சாப்பிடுவது என்று பண்பாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
  • மெல்லும்போது வாயை மூடி உங்களால் முடிந்தவரை அமைதியாக மெல்லுங்கள்.
  • உங்கள் வாயில் உணவை வைத்துக்கொண்டு பேசாதீர்கள்! உங்கள் வாயிலுள்ள உணவை விழுங்கிய பின்னர் பேசுங்கள்.
  • எப்பொழுதும் சரியான பாத்திரத்தையே பயன்படுத்துங்கள்.
  • வாய்க்குள் போதுமானளவு உணவை மட்டும் வையுங்கள் (ஒரு தடவைக்கு இரண்டு கடி உணவை வைக்காதீர்கள்).
  • எப்பொழுதும் உணவை அளவாக வாயில் இட்டு மெதுவாக உண்ணுங்கள்.
  • பேசும்போது கரண்டியில் அல்லது முள்ளுக்கரண்டியில் உணவை வைத்துக்கொண்டு பேசவேண்டாம், தவிரவும் வெள்ளிக்கரண்டியை ஆட்டியபடி பேசவேண்டாம்.
  • ஊரையாடல் இனிமையானதும் சுவாரஸ்யமானதாக மட்டுமே இருக்க வேண்டும். சர்ச்சைக்குரியதாக ஒருபோதும் இருக்கக்கூடாது.
  • உணவு மேசையில் வைத்து மூக்கைச் சீறாதீர்கள். அனுமதி கேட்டுவிட்டு வொஷ் ரூம் சென்று வாருங்கள்.
  • சாப்பிட உட்காருவதற்கு முன்னர் உங்கள் கைத்தொலைபேசியை அமைதி அல்லது அதிர்வு வடிவத்தில் வைத்துவிட்டு உட்காருங்கள், அத்துடன் அதை உங்கள் சட்டைப்பையில் அல்லது காசுப்பையில் வையுங்கள்.
  • உணவு மேசையில் வைத்து பல்குத்தியை (டூத் பிக்) பயன்படுத்தாதீர்கள் மற்றும் ஒப்பனை செய்யாதீர்கள்.
  • மேசையை விட்டு செல்வதற்கு முன்னர் "Excuse me" என்று சொல்லிவிட்டு செல்வதுடன் "I'll be right back" என்று சொல்லிவிட்டு செல்லவும். நீங்கள் வொஷ் ரூம் செல்வதாக சொல்ல வேண்டாம்.
  • எப்பொழுதாவது ஒரு பெண் மேசையைவிட்டு செல்வதாயின் அல்லது திரும்பி வருவாராயின் அவருடன் மேசையில் அமர்ந்திருக்கும் ஆண்கள் அனைவரும் எழுந்திருக்கவேண்டும்.
  • வாயில் தேவையற்ற உணவு இருக்குமாயின் முள்ளுக்கரண்டி/கரண்டியில் அல்லது தட்டின் ஒரு பக்கத்தில் அலட்டிக்கொள்ளாமல் வைக்கவேண்டும்.
  • நெப்கினை உயர்த்தி உங்கள் வாயை விரல்களால் துடையுங்கள், அனைத்தும் சில விநாடிகளில் இடம்பெறவேண்டும்.
  • உங்களுக்கு சமிபாட்டுப் பிரச்சினை தோன்றின் அனுமதி கேட்டுவிட்டு வொஷ் ரூம் செல்லுங்கள்.
FaLang translation system by Faboba