பாதுகாப்பற்ற பாலியல் உறவினால் பரவும் சில நோய்களே பால்வினை நோய்கள் என்று அழைக்கப்படும். இவற்றில் சில நோய்கள் அறிகுறிகளைக் காட்டும். சில நோய்கள் அறிகுறிகளைக் காட்டாது.

ஆண்களுக்கு:

  • சிறுநீர் குழாய் கோளாறினால் நீர்க்கசிவு
  • சிறுநீர்கழிப்பில் வலி
  • விதைகள் வீங்குதல்

பெண்களுக்கு:

  • யோனியின் ஊடாக நீர்க்கசிவு
  • யோனிவழியில் அரிப்பு
  • யோனிவழியில் வலி அல்லது வேதனை
  • அடிவயிற்றின் கீழ் வலி

ஆண் பெண் இருபாலாருக்கும்:

  • பிறப்புறுப்பில் சீழ்ப்புண்
  • பிறப்புறுப்பில் பருக்கள் அல்லது கட்டிகள்

சிலநோய்கள் முற்றாகக் குணப்படுத்தக்கூடியவை. (சிப்பிலிஸ், கொனோரியா) சில நோய்களை தற்காலிகமாகக் குணப்படுத்தலாம். ஆனால் அவை மீண்டும் தோன்றும் சாத்தியக்கூறுகள் உள்ளன. (HSV, மனித HPV வைரஸ் தொற்று)

எல்லா நோய்களும் அல்ல, ஆனால் ஒருசில நோய்கள் தொற்றக்கூடும். சிப்பிலிஸ், கொனோரியா, பிறப்புறுப்புக்கட்டி ஹர்ப்பிஸ் என்பன பாலியல் உறவினால் பரவும் நோய்கள் ஆகும்.

  • சிப்பிலிஸ்
  • பிறப்புறுப்பில் ஹர்பிஸ்
  • கொனோரியா என அழைக்கப்படும் வெட்டை நோய்
  • கிளமைடியா தொற்று
  • பிறப்புறுப்பில் பருக்கள் தோன்றுதல்

ஆண்களாயின் மூத்திரக்குழாய் அழற்சி, அடிக்கடி சிறுநீர் வெளியாதல், ஆண்குறியில் வலி போன்றவைகளைக் கூறலாம். பெண்களாயின் யோனிக்குழாயில் கசிவு போன்றவைதான் முதல் அறிகுறிகளாகும். நீர்க்கசிவு மற்றும் சீழ் வடிவதல் ஆண் பெண் இருபாலாருக்கும் ஏற்படும்.

சரியாக சிகிச்சை அளிக்கவில்லையானால் சிக்கலான கோளாறுகள் தோன்றலாம். ஆண்களுக்கு விதை வீங்குதல், பெண்களாயின் இடுப்பு வீங்குதல் என்பன தோன்றும்.

சகலருக்கும் நோய்த்தொற்று அறிகுறிகள் காட்டாது. ஆனாலும் இந்நோயானது பெரும் பாதிப்புகளை உண்டு பண்ணக்கூடியது. பாதுகாப்பின்றி பாலியல் உறவில் ஈடுபடும் எவருக்கும் இந்நோய் இலகுவாகப் பரவும். பயனுள்ள சிகிச்சை அளிப்பதன் ஊடாக இந்நோயை முழுமையாகக் குணப்படுத்தலாம். குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இல்லாவிடினும் இந்நோய்க்கு உடடியாகச் சிகிச்சையளிக்க வேண்டும்.

பெண்களைப் பொறுத்தவரை கர்ப்ப காலத்தில் இந்நோய் தோன்றுமிடத்து இவற்றுக்கு சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் பிறக்கும் குழந்தையை இது பாதிக்கும்.

இது பக்டீரியா தாக்கத்தினால் ஏற்படும் நோய் ஆகும். ஆண்களுக்கு மூத்திரக்குழாய் அழற்சியும் பெண்களுக்கு கருப்பை வாயில் அழற்சியும் ஏற்படும். இதன் நோய்த்தன்மையானது கொனோரியாவுக்கு சமமானது. ஆனால் குறைந்தளவு சிறுநீர்க்கசிவு மற்றும் குறைந்தளவு சீழ் வடிதல் என்பன இருக்கும். நோய் எதிர்ப்பு மருந்து கொடுப்பதன் மூலம் இதனை குணப்படுத்தலாம்.

இது தவறான பாலியல் உறவினால் ஏற்படும் ஒருவித சமூக பால்வினை நோயாகும். ஆண்களுக்கு மூத்திரக்குழாயிலும் பெண்களுக்கு யோனிக்குழாயிலும் ஏற்படும். நுரையுடன் கூடிய மீன் நாற்றத்துடனான சிறுநீர் வெளியாகும். இதனை பூரணமாக குணமாக்குவதாயின் நோயை சரியான முறையில் கவணித்துச் சிகிச்சையளிக்க வேண்டும்.

பிறப்புறுப்பு ஹர்பிஸ் - இது பன்மடங்கு வலியுடன் கூடிய புண்களை பிறப்புறுப்பில் உருவாக்கும். இது ஊறல் நீருடன் கூடிய கொப்புளங்களை உண்டாக்கும்.

சிப்பிலிப்ஸ் - பொதுவாக வலியற்ற புண்களை பிறப்புறுப்பில் உண்டாக்கும்.

இந்த இரண்டு தொற்றுநோய்களில் சிப்பிலிப்ஸ் முற்றாக குணப்படுத்தக்கூடியது. இதற்கு முறையான சிகிச்சையளிக்காவிட்டால் இது படிப்படியாக வளர்ச்சியடையும். இதன் காரணமாக நிணச்சுரப்பித்தொற்று, தோல் பகுதியில் சினப்பு, பிறப்புறுப்பு சவ்வுப்பகுதியில் கோளாறு, பிறப்புறுப்பில் பருக்கள் தோன்றுதல் என்பனவற்றுடன் நோயைக் கவனிக்காவிடின் பிறப்புறுப்பை அரித்துத் துளை போன்ற பெரும் புண்களை உண்டாக்கும்.

இந்த நோயின் இறுதிக்கட்டங்களில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதுடன் இதயம் சம்பந்தமான நோய்களும் ஏற்படலாம். இதற்கான சிகிச்சை ஊசி மருந்து ஊடாகவும் வாய் மூலமாகவும் கொடுக்கப்படுகிறது. இந்த நோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டு பிடித்து சிகிச்சையளிப்பது மிக முக்கியமானது.

ஹர்ப்பிஸ் நோயின் தீவிரத்தன்மையை மருந்து மூலம் தற்காலிகமாக கட்டுப்படுத்தலாம். நோயின் சரியான போக்கை கண்டு பிடித்து சிகிச்சையளிப்பதால் பூரணமாக குணப்படுத்தலாம். ஆனால் மீண்டும் மீண்டும் தோன்றும் புண்கள் குறிப்பிடும்படியாக வலியை ஏற்படுத்தக் கூடியவை அல்ல.

சிப்பிலிஸ் மற்றும் ஹர்ப்பிஸ் நோய் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு தோன்றுமாயின் அது அவரின் வயிற்றிலுள்ள கருவை பாதிப்பதுடன் குறிப்பிட்டளவு உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தலாம். அத்துடன் குறைப்பிரசவம் மற்றும் அங்கவீனமான குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இதனை கண்டறிந்து தாய்க்கு சிகிச்சையளிப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து குழந்தையைக் காப்பாற்றலாம்.

  1. ஒருவர் தனது பாலியல் நடவடிக்கைகளைத் திருமணம் வரை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
  2. தனக்கு மிக நம்பிக்கையான துணையுடன் மட்டுமே பாலியல் உறவுகளை வைத்துக்கொள்ள வேண்டும்.
  3. ஆணுறை அணிவதை கட்டாயமாக மேற்கொள்ளவேண்டும். இதனை சரியாகவும் முறையாகவும் அணிய வேண்டும்.

STD எனப்படும் பாலியல் நோய் பரிசோதனை நிலையங்கள் சகல போதனா வைத்தியசாலைகளிலும் உள்ளன,

  • மத்திய பரிசோதனை மற்றும் பரிந்துரை ஆய்வு கூடம்
  • முழுநேர மருந்தகங்கள் -  31
  • மருந்தகக் கிளைகள் - 18
FaLang translation system by Faboba