இரு நண்பர்களுக்கிடையிலான ஓர் உரையாடல்

இரு சிறுவர்கள் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சந்திக்கிறார்கள்.

ஏன் சிவா கவலையா இருக்க? முகமும் வாடிப்போய் இருக்கு...
நாதன்
ஆமா நாதன். கிளாஸ்ல நான் தூங்கிட்டேன்னு சொல்லி டீச்சர் என்னை நல்லாத் திட்டினாங்க. அதோட நான் குரட்டை விட்டேன்னு சொல்லி பிரண்ட்ஸ் கேலி செஞ்சாங்க... எல்லாரும் என்னை குண்டுப் பையன், கும்பகர்ணன்னு கூப்பிடுறதை நெனைச்சா ரொம்பக் கவலையா இருக்கு...
சிவா
ஒன்னோட நிலமைய பாத்தா எனக்கும் கவலையா இருக்கு..
நாதன்
இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்யிறதுன்னே தெரியல்ல நாதன். எப்பவும் எனக்கு சோர்வாவே இருக்கு. காலையில எழும்பும்போதே தலை வலிக்குது. கிளாசுக்குப்போனா தூக்கம் வருது. நான் குரட்டை விடுறதால என் தம்பிக்கு எனக்குப் பக்கத்தில தூங்க முடியாதாம். ரொம்ப குண்டா இருக்கிறதால எனக்கு அளவான ட்ரெஸ் வாங்க கஸ்டமா இருக்கிறதா அம்மா சொல்றாங்க... எல்லாமே எனக்குத்தான் நடக்குது.
சிவா
கவலைப்படாத சிவா. இதுக்கொரு நல்ல தீர்வை நாங்க நிச்சயம் கண்டுபிடிக்கலாம்.
நாதன்
ஆனா சாப்பாட்டைக் குறைச்சுக்கோன்னு மட்டும் சொல்லிடாத நாதன். ஏன்னா எனக்கு சாப்பாடுன்னா ரொம்ப ஆசை. இந்த கோலா, பர்கர், பொரியல்னா எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுவேன். அதோட நான் கொஞ்சம் குண்டா இருக்கேன்னும் எனக்குத் தெரியும். ஆனா என்னோட வெயிட்டை நான் எப்பிடியாவது குறைச்சிடுவேன்.
சிவா
சிவா என்னோட அப்பா ஒரு மார்பு மருத்துவ நிபுணர். அவர் இது மாதிரி பிரச்சினைகள் பற்றி பேசுறதை நான் கேட்டிருக்கேன். நாங்க அவர்கிட்ட போய் நம்ம பிரச்சினைய சொன்னா, அவர் நிச்சயமா நல்ல ஆலோசனைகளைச் சொல்லுவார். அதனால ஒரு நாள் நீ கட்டாயம் வந்து என்னோட அப்பாவை மீட் பண்ணு.
நாதன்
உங்க அப்பா ஒரு பிசியான டாக்டர். அவரை எப்பிடி சந்திக்கிறது?
சிவா
அப்பா புதன்கிழமைகள்ல வேலை செய்யமாட்டார். அதனால நாங்க அவரை புதன்கிழமை சந்திக்கலாம்..
நாதன்

அடுத்த புதன்கிழமை சிவா அவனின் நண்பன் வீட்டிற்கு வருகிறான். நாதனின் அப்பா அவர்களை வரவேற்று உரையாடுகின்றார்.

வா சிவா, உக்காரு. உனக்குள்ள பிரச்சினைகள் பத்தி நாதன் சொன்னான். நாங்க அதைப் பத்திப் பேசுவோம். நிச்சயமா அதுக்கொரு நல்ல தீர்வு கிடைக்கும்.
அப்பா
தேங்ஸ் அங்கிள்!
சிவா
சரி உன்னோட பிரச்சினைய சொல்லேன்.
அப்பா
நான் நல்லா விளையாடுவேன் அங்கிள். ஆனா O/L டெஸ்ட்டுக்குப் படிக்கிறதால எனக்கு விளையாட நேரம் ஒதுக்க முடியல்ல. அதனால என்னோட வெயிட் கொஞ்சம் அதிகமாயிடுச்சு...
சிவா
சரி எப்பவாவது உனக்கு மூச்செடுக்கிறதில பிரச்சினை இருந்திருக்கா?
அப்பா
ஆமா எனக்கு ஆஸ்துமா நோய் இருந்திச்சு. இன்ஹேலர் பாவிச்சதும் அது சொகமாகிடுச்சு. அதுக்குப் பிறகு எப்பவும்போல நல்லா விளையாடினேன். அதோட படிக்கிறப்போ என் கவனம் சிதறாமல் இருக்க, ஏதாவது சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன். நிறைய பிஸ்கட், முறுக்கு, சொக்லட் சாப்பிடுவேன். படிக்கும்போது தூக்கம் வராம இருக்க கோப்பி குடிப்பேன். நிறைய கூல் ட்ரிங்சும் குடிப்பேன். இப்பிடியே போறப்போ எனக்குத் தெரியாமலே என் நிறை கூடிடுச்சு. அப்பதான் பிரச்சினைகளும் ஆரம்பிச்சுது அங்கிள்!
சிவா
அதுக்குப் பிறது உன்னோட ஆஸ்துமா நோயும் கூடிச்சா?
அப்பா
ஆமா அங்கிள். ஆஸ்துமா நோய் கூடிச்சு. நான் அடிக்கடி நெபுலைஸ் செய்யவேண்டியதாப் போச்சு. என்னோட ஆஸ்துமா நோயக் கட்டுப்படுத்த ஸ்டீராய்டு மாத்திரைகள் குடுத்தாங்க. அதனால என்னோட வெயிட் இன்னும் கூடிடுச்சு. அதோட எனக்கு இரைப்பை அழற்சியும் வந்தது. என் உடைகளைக்கூட என்னால போடமுடியல்ல. என்னோட கொலர் சைஸ் 17½, என்னோட வயிறும், மார்பும் ரொம்ப பெரிசா இருக்கு. அது எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு அங்கிள்.
சிவா
எனக்குப் புரியுது சிவா. உனக்கு சொல்ல இன்னும் நிறைய விசயங்கள் இருக்குன்னு எனக்குத் தெரியும். அதையும் சொல்லு கேட்போம்.
அப்பா
அங்கிள் நான் தூக்கத்தில் குறட்டை விடுவேன். படுக்கையில விழுந்ததுமே தூங்கிடுவேன். ஆனா இரவு 2 – 3 மணிக்கு டாய்லட் போக எழும்புவேன். சில நாட்களில் காலையில எழும்புறப்போ ரொம்ப தலைவலியா இருக்கும். ஆனா பகலாகும்போது அது சரியாகிடும். ஒரு புத்தகத்தை வாசிக்கவோ, TV பாக்கவோ உக்காந்தா உடன தூங்கிடுவேன். கிளாஸ்லயும் அடிக்கடி தூங்கி திட்டுவாங்குவேன். என்னோட வாழ்க்கையே சிக்கலாகிடுச்சு அங்கிள். ஆனா உணவுக் கட்டுப்பாடு செய்யணும்னு மட்டும் சொல்லிடாதீங்க. ஏன்னா அதை நான் ஏற்கனவே ட்ரை பண்ணிப் பாத்திட்டேன். அதால எந்தப் பயனும் கிடைக்கல்ல.
சிவா
சிவா நீ பகல்ல தூங்கிவழியிறதுக்கும், சோர்வா இருக்கிறதுக்கும் காரணம் நைட்ல உனக்கு ஒழுங்கான தூக்கமில்லாததுதான். நான் நினைக்கிறேன். OSA என்ற தூக்கத்தைக் குழப்புற மூச்சுத்திணறல் நிலை உனக்கு வந்திருக்கு...
அப்பா
அது ஒரு சீரியசான நோயா அங்கிள்?
சிவா
நான் அதை உனக்கு விளங்கப்படுத்துறேன். OSA என்பது நித்திரையைக் குழப்புற ஒரு சுவாசக் கோளாறு. இது தசைகள் ஒய்வெடுக்கும் நிலையில  ஏற்படும். அதனால தொண்டையின் பின்பகுதியில இருக்கிற தசைகளும், திசுக்களும் சரிவாக்கப்பட்டு மேல் காற்றுக்குழாயை அடைக்குது. இது (Hypnoses) போன்ற பகுதியின் குறைபாடுகளுக்கும் காரணமா இருக்கு. அதோட நித்திரை கொள்ளும்போது 10 விநாடிகளாவது மூச்சுத்திணறல் ஏற்பட வைக்கும். அதிகபட்சமா 10 இல் இருந்து 30 விநாடிகள் இந்த மூச்சுத் திணறல் இருக்கும். ஆனா சிலநேரங்கள்ல அது ஒரு நிமிடமோ அல்லது அதுக்கு மேலயும் நீடிக்கலாம். இது உங்க இரத்தத்தில் உள்ள ஒக்ஸிஜன் அளவை திடீர்னு குறைச்சிடும். ஒக்ஸிஜன் 40% க்கு மேல குறைஞ்சால் நிலைமை கடுமையாகும். இப்படி நடக்கும்போது உங்கள் மூலை ஒக்ஸிஜன் பற்றாக்குறை பற்றி உங்க உடலுக்கு எச்சரிக்கும். அப்பதான் நீங்க திடீர்னு தூக்கத்திலிருந்து எழும்புவீங்க. இது மாதிரியான மூச்சுத்திணறல் ஒரு நைட்ல பல நூறு தடவைகளும் ஏற்படலாம். இதனால உங்க தூக்கம் கெட்டுப்போகும். அடுத்த நாள் நீங்க ரொம்ப சோர்வா இருப்பீங்க. OSA உள்ள பெரும்பாலான மனிதர்கள் அமைதியா நித்திரை செய்யும் நேரங்கள்ல காற்றுக்குழாய் அடைக்கும்போதோ அல்லது தடைப்படும்போதோ அடிக்கடி சத்தமா குறட்டை விடுவாங்க. அதேமாதிரி காற்றுக்குழாய் திறக்கும்போது அவர்கள் மூக்கடைத்தல் அல்லது மூச்சுத்திணறல் போன்ற ஒலிகளை எழுப்புவாங்க.
அப்பா
சரியா சொன்னீங்க அங்கிள். நான் தூக்கத்தில ரொம்ப சத்தமா மூச்செடுப்பேன்னு என்னோட அம்மா பலதடவை சொல்லியிருக்காங்க. சில நேரங்கள்ல நான் மூச்செடுக்கிறத நிப்பாட்டிடுவேனாம். அப்பெல்லாம் மூச்சு நின்னு போச்சோன்னு பயந்து அம்மா என்னை எழுப்பிடுவாங்களாம்.
சிவா
எனக்குத் தெரியும் சிவா. அது ஒரு பயங்கரமான அனுபவம்.
அப்பா
அங்கிள் எனக்கு ஏன் OSA நோய் வந்தது?
சிவா
அதிக உடல் நிறை கொண்டவங்களுக்கு OSA வரக்கூடிய ஆபத்து இருக்கு. 17 அங்குலம் அல்லது அதுக்கு மேற்பட்ட கழுத்தளவு (கொலர் அளவு) கொண்ட ஆண்களுக்கும் அல்லது 16 அங்குலம் அல்லது அதுக்கு மேற்பட்ட கழுத்தளவு கொண்ட பெண்களுக்கும் OSA வாரதுக்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கு. அதோட குறுகிய கழுத்தை கொண்டவர்களுக்கும் இந்த நோய் வாரதுக்கான வாய்ப்புகள் அதிகம்.அதே மாதிரி பிறக்கும்போதே அசாதாரண முக அமைப்புடன் பிறந்த குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் அடிநாசி, மூக்கு அடிச்சதை, நாசி அடைப்பு கொண்ட பிள்ளைகள், தைரோ ஹோர்மோன் கோளாறு உள்ளவர்கள் மற்றும் புகை பிடிப்போர் இந்த நோய்க்கு ஆளாகலாம்.
அப்பா
இப்ப எனக்கு புரியுது அங்கிள். இது ஒரு தீவிரமான நோயா?
சிவா
நான் உன்னை பயமுறுத்த விரும்பல்ல. ஆனா OSA இரவு நேரங்களில் ஒக்ஸிஜன் குறைவிற்குக் காரணமா அமையிறதால உடலின் தூண்டுதலால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். இது தீவிரமாகவும் மாறலாம். உங்க இதயத்தின் மின்னியல் செயற்பாட்டுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதோட காலப்போக்கில் இதன் மூலம் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கவனம் சிதறுதல், மனநிலை மாற்றங்கள் மற்றும் மேலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டு உன்னோட படிப்பும் பாதிக்கப்படலாம். OSA உள்ள பெரியவர்கள் மோட்டார் வாகனம் ஓட்டும்போது நித்திரை வாரதால திடீர் விபத்துக்கள் ஏற்படக்கூடிய ஆபத்தும் இருக்கு.
அப்பா
FaLang translation system by Faboba