சூழல் மாசுபடுவதால், குறிப்பாக காற்றின் மூலம் உங்கள் நுரையீரலின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. கடந்த 10 வருட ஆராய்ச்சியின்படி நீண்ட கால வெளிப்பாடாக சூழல் மாசடைதலானது இருதய நோய், ஆஸ்த்மா மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. ஒரு வளரிளம் பிள்ளையாக, நீங்கள் சுவாசிக்கும் காற்றைப் பற்றி விசேட கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் இது உங்களுக்கு தற்போதைய வாழ்க்கையில் மட்டுமல்ல பிற்காலத்தில் கூட பிரச்சினையாக அமையலாம்.

நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்த்மா மற்றும் நாற்பட்ட நுரையீரல் அழற்சி (COPD) போன்றவை நுரையீரல் செயற்பாட்டை குறைக்கும் சில புதிய வகையிலான நோய்களாகும். இவை நேரடியாக வாகன நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகள் மற்றும் காற்றில் இரசாயன கலவைகள் அதிகம் கலந்திருக்கும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஆராய்ச்சிகளின்படி காற்றில் உள்ள சுவாசிக்கக்கூடிய துகள்கள் நுரையீரல் நோய்களுக்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது.

புகைப்பிடித்தல் நுரையீரல் மற்றும் COPD நோய்களுக்கு ஒரு பிரதான காரணமாக அமைந்துவிடுகின்றது. வெளிவிடப்படும் அழுக்குக் காற்றானது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துவதுடன் பிரச்சினையை மேலும்  மோசமாக்கும்.

பின்வருவன உடனடியான விளைவுகளாகும்:

  • மூக்கு, கண்கள் மற்றும் தொண்டை எரிவு
  • நெஞ்சு வலி
  • இருமல்
  • ஜீரணிப்பு பிரச்சினைகள்
  • தலைச்சுற்றல், காய்ச்சல்
  • சோர்வு
  • தும்மல்
  • மூச்செடுப்பதில் சிரமம்
  • தொண்டை எரிவு மற்றும் கண்களில் கண்ணீர் வடிதல்

இவை நோயாளிக்கு மருந்தெடுக்கவேண்டிய தேவையை ஏற்படுத்துவதுடன், வைத்தியரிடம் செல்வதற்கு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு அல்லது அகால மரணத்திற்குக்கூட வழிவகுக்கலாம்.

சுவாச பாதிப்பு மற்றும் காற்று மாசடைதல் பின்வருவனவற்றினால் ஏற்படுகிறது:

  • மாசுக்களின் வகை மற்றும் கலவை
  • காற்றின் செறிவு
  • மாசுக்களை வெளியேற்ற எடுக்கும் நேரம்
  • எந்தளவு மாசுக்களை நீங்கள் சுவாசித்துள்ளீர்கள்
  • மேலும் எந்தளவு மாசு உங்கள் நுரையீரலில் ஊடுருவியுள்ளது.

துகள்களின் அளவைப் பொறுத்து அவை மூக்கு மற்றும் தொண்டை மூலம் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளில் படிகின்றன. இவை படியும் அனைத்து இடங்களிலும் எரிச்சல், வீக்கம் போன்றவற்றை இத்துகள்கள் ஏற்படுத்துகின்றன. காற்று மாசுக்கள் போக்குவரத்து, கரி மற்றும் ஏனைய தொழிற்துறை மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், கப்பல்கள் மற்றும் விவசாய உற்பத்திகள் மற்றும் காட்டுத் தீ போன்ற இயற்கை காரணங்களாலும் ஏற்படுகின்றன. அத்துடன் காலநிலை மாற்றமும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இவற்றிற்கு மேலதிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய மகரந்தம் போன்றவை காற்றில் கலப்பதும் காற்று மாசடைவதற்கு காரணமாக அமைகிறது.

இதனால் யார் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்பதை ஊகிப்பது இலகுவானதல்ல. எவ்வாறாயினும் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் மற்றும் ஆஸ்த்மா, COPD இருதய நோய் உள்ளவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படலாம். மரபியல் காரணிகள், நோய் தொற்று, மற்றும் ஊட்டச்சத்தின்மை போன்றவையும் பிரதான பங்கு வகிக்கின்றன.

காற்று மாசடைதலுக்கு பிரதான காரணிகளாக வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை மற்றும் அதிலுள்ள சிறு துகள்கள் மற்றும் தரை மட்ட ஓசோன், வீதித் தூசு, தொழிற்சாலைகளிலிருந்தும், மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் இரசாயனங்கள் போன்றவை அமைகின்றன. மேலும் தாவரங்களிலிருந்து வெளியாகும் மகரந்தம், பயிர்கள் மற்றும் களைகள் போன்றவையும் காற்றின் தரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இயற்கை காரணிகளில் எரிமலை, காட்டுத் தீ, காற்றழுத்தங்கள் மற்றும் மரங்கள் ஆகியவையும் காற்று மாசடைவதற்குக் காரணமாக அமையலாம். வாகன நெரிசல் மிக்க வீதிகள், தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் பொருட்களை எரிக்கும் இடங்களில் மாசுக்கள் அதிகம் காணப்படும்.

இதோ 6 பிரதான காற்று மாசடைதல்கள்:

  • ஓசோன்
  • நுண் துகள்கள்
  • கார்பன் மொனோக்சைட்
  • நைட்ரஜன் ஒக்சைட்
  • சல்பர் டையொக்சைட்
  • ஈயம்

மாசடைந்த காற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்

  • காற்றின் தரத்தை உள்ளூர் காலநிலை அறிக்கை மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
  • எரிச்சல் மற்றும் ஒவ்வாமை அறிகுறிகள் தோன்றுமாயின் வீட்டினுள் வைக்கப்பட்டிருக்கும் தாவரங்களை அகற்றுங்கள்.
  • வாயு குளிரூட்டியினால் வீட்டிற்குள் வரும் காற்றை வடிகட்டுங்கள்.
  • உங்களுக்கு ஆஸ்த்மா நோய்க்கான அறிகுறிகள் தெரியுமாயின் வெளிப்புற செயற்பாடுகளைக் குறையுங்கள்.
  • மாசு மிக அதிக அளவில் இருப்பின் உங்கள் ஜன்னல்களை மூடிக்கொண்டு வீட்டினுள்ளே இருங்கள்.
  • வாகன நெரிசல் மிக்க நேரங்களில் வீதியில் செல்வதைக் குறையுங்கள்.
  • நடக்கும்போது, ஜொக்கிங் அல்லது வெளிப்புற உடற்பயிற்சி செய்யும்போது, மாசு குறைவான இடங்களைப் பயன்படுத்துங்கள்.

உள்ளக காற்று மாசடைதல் என்பது வீடுகள், பாடசாலைகள் மற்றும் ஏனைய கட்டிடங்கள் ஆகியவற்றிற்குள் உள்ள உட்புற காற்றின் பௌதீக, இரசாயன, மற்றும் உயிரியல் பண்புகளை குறிக்கிறது. கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் நிலவும் பல்வேறு நிலைமைகள் உள்ளக காற்று மாசடைதலுக்கு காரணமாக அமைகின்றன.

கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற சேரிகள்

இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற சேரிகளில் காற்று மாசடைதல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. உலக அளவில் 3.5 பில்லியன் மக்கள் பாரம்பரிய எரிப்பொருட்களான விறகு, கரி, வீடுகளில் கழிக்கப்பட்ட பொருட்கள், பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்கள் போன்றவற்றை சமைப்பதற்கும் உணவு தயாரிப்பதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்துகின்றனர். இவ்வாறான பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகையினால் வீட்டிற்குள் குறிப்பிட்ட இடங்களில் காற்று மாசடைதல் ஏற்படுகின்றது. இவ்வாறு வெளிப்படும் புகையினால் வீட்டில் அதிக நேரத்தைக் கழிக்கும் பெண்களும், பிள்ளைகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

1992 ஆம் ஆண்டு உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பூகோள ரீதியாக மிகவும் மோசமான நான்கு பிரதான சூழல் மாசடைதல் காரணிகளில் ஒன்றாக, உள்ளக காற்று மாசடைதலைக் குறிப்பிட்டுள்ளது. தினசரி சராசரியாக வெளியிடப்படும் மாசுக்களின் அளவு உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டியின்படி எதிர்பார்த்ததைவிட அதிகமாக உள்ளது.

இருப்பினும் விறகு, பலகைகள் போன்ற இயற்கை எரிபொருட்களினால் வெளியிடப்படும் புகையில் பல்லாயிரக்கணக்கான இரசாயனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நுண் துகள்கள், கார்பன் மொனொக்சைட், பொலிசைக்கிளிக் சேதனத்திணிவுகள்  மற்றும் போர்மலடிஹைட் ஆகியவை உள்ளக காற்றை மிக மோசமாக மாசுபடுத்துகின்றது.

நகர்ப்புறங்கள்

உள்ளக காற்று மாசடைதலில் ஏற்பட்ட அதிகரிப்புக்கு நெருக்கமான கட்டிட நிர்மாணம், குறைவான காற்றோட்டம், கட்டிடங்களை நிர்மாணிக்க செயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் இரசாயனப் பொருட்களை பயன்படுத்துதல், பூச்சிகொல்லிகள், வீட்டுப் பராமரிப்புப் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தல் போன்ற பல விடயங்கள் காரணமாக அமைகின்றன. உள்ளக காற்று மாசானது கட்டிடத்திற்குள் அல்லது வெளிப்புறங்களில் இருந்து இழுக்கப்படலாம். மூடப்பட்ட இடத்தில் நைட்ரஜன் டயொக்சைட், கார்பன் மொனொக்சைட் மற்றும் ஈயம் போன்றவை தவிர மேலும் பல வகையான மாசுக்களால் காற்றின் தரம் பாதிக்கப்படுகிறது. இதோ அவற்றில் சில:

ஆவியாகக்கூடிய கரிம சேர்மங்கள் (VOC)

ஆவியாகக்கூடிய கரிம சேர்மங்களானது, கரைசல்கள் மற்றும் இரசாயனங்கள் மூலமே உருவாகிறது. முக்கியமான உள்ளக காரணிகளாக வாசனைத் திரவியங்கள், தலை முடி ஸ்ப்ரேக்கள், மரத்தளபாட பொலிஷ்கள், பசைகள், எயார் பிரெஷ்னர்கள், பூச்சி மருந்துகள், மரத்தளபாட பாதுகாப்பு மருந்துகள் மற்றும் வீட்டில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றினால் முக்கிய ஆரோக்கிய பிரச்சினைகள் கண், மூக்கு, தொண்டை ஆகியவற்றில் ஏற்படுகின்றன. மேலும் கடுமையான மாசடைதலின்போது தலைவலி, குமட்டல் போன்றவையும் ஏற்படலாம். சில மாசுக்கள் நீண்ட காலத்தின் பின்னர் ஈரல் மற்றும் ஏனைய உடல் பாகங்களுக்கு சேதங்களை ஏற்படுத்தலாம்.

புகைபிடித்தல் (சிகரட்,சுருட்டு மற்றும் பீடி)

இந்த ஆபத்தான இரசாயனப் பொருட்கள் பரந்தளவில் புற்றுநோயை ஏற்படுத் தக்கூடியது. உதாசீனமான புகைப்பிடித்தலால் கண், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், மூச்சுக்குழாய் அழற்சி, கடும் ஆஸ்த்மா, நுரையீரலின் செயல்திறன் குறைவடைதல் மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய் போன்ற பாதிப்புக்கள் ஏற்படலாம்.

  • நுளம்புச் சுருள்கள் மற்றும் ஊதுபத்திகள் எரித்தல்
  • மண்ணெண்ணெய்
  • பூச்சிக்கொல்லிகள்
உயிரியல் மாசுக்கள்

தாவரங்களின் மகரந்தம், பூச்சிகள், செல்லப்பிராணிகளின் மயிர், பூஞ்சை மற்றும் பக்டீரியாக்கள் போன்றவற்றால் ஏற்படும் மாசுக்கள் உயிரியல் மாசுக்களில் அடங்கும். இவற்றில் பலவற்றால் அலர்ஜி அல்லது ஒவ்வாமை, ஆஸ்த்மா, சளிக்காய்ச்சல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படலாம்.

போர்மல்டிஹைட்

போர்மல்டிஹைட் என்பது ஒரு வாயுவாகும். இது பிரதானமாக காப்பட்ஸ் (carpets) மற்றும் particle boards ஆகியவற்றால் வருகின்றது. இது கண் மற்றும் மூக்கு ஆகிய வற்றில் எரிச்சலை உண்டுபண்ணும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

  • சலவைத் தூள்கள் மற்றும் சவர்க்காரங்கள்
  • அஸ்பெஸ்டஸ் - அஸ்பெஸ்டஸ் பற்றி முக்கிய கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் அது புற்றுநோய் ஏற்படக் காரணமாக அமைவதாக சந்தேகிக்கிப்படுகிறது.
  • ரேடன் - ரேடன் என்பது மண்ணிலிருந்து இயற்கையாகவே உமிழப்படும் ஒரு வாயுவாகும். காற்றோட்டம் இல்லாமல் கட்டப்படும் நவீன வீடுகளின் உள்ளே இவ்வாயு தங்கி அங்கு வசிப்பவர்களுக்கு தீங்கு உண்டாக்கும்.

சுவாச உறுப்புக்களில் தொற்று:

  • ஆஸ்த்மா - மேலதிக விபரங்களுக்கு பிரவேசியுங்கள் www.asthmapodiththo.com
  • நாட்பட்ட நுரையீரல் நோய்
  • நுரையீரல் புற்றுநோய்

(புறா வளர்த்தல் மற்றும் லவ் பேர்ட்ஸ் - பறவைகள் வளர்ப்பவர்களின் நுரையீரல்)

பறவை ஆர்வலர்களின் நுரையீரல் - ஹைபர்சென்சிட்டிவிட்டி நியூமோனிட்டிஸ் வகையைச் சேர்ந்தது. இது பறவை எச்சங்களினால் ஏற்படுகின்றது. நுரையீரலானது இவ்வாறான ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பொருட்களை இனங்கண்டு 'கிரனுலோமெடொஸ்' எனும் நுரையீரல் வீக்கத்தை ஏற்படுத்தி அதற்கெதிராக செயற்படுகிறது. இந்த நோய் பறவைகளின் காய்ந்த எச்சங்கள், சில நேரங்களில் புறாக்கள், பச்சைக்கிளிகள், கிளிகள், லவ்பேர்ட்ஸ் வகைகள், வான் கோழிகள், கோழிகள் போன்ற பறவைகளின் இறக்கைகளில் உள்ள மாசுக்களினாலும் ஏற்படுகின்றன. ஆனால் பறவைகள் வளர்க்கும் அனைவருக்கும் இந்த நோய் ஏற்படாது.

இத்தகைய பறவைகள் ஒரு விதமான தூசியை வெளிவிடுகின்றன. இதனால் ஹைபர்சென்சிட்டிவிட்டி  நியூமொனிட்டிஸ், ஒவ்வாமை, நாசியழற்சி மற்றும் சில வகையான ஆஸ்த்மா உட்பட ஒவ்வாமைகளைத் தூண்டும்  எதிர்விளைவுகள் ஏற்படக்கூடும். சில நேரங்களில் சிறிய அளவிலான ஒவ்வாமை உள்ளவர்களுக்கும், ஒவ்வாமை இல்லாதவர்களுக்கும் பறவைகளின் தூசியினால் ஒவ்வாமை எதிர்வினைகள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

இந்நோய் கடுமையாக அல்லது நாட்பட்ட ஆகிய இரண்டு வடிவங்களிலும் ஏற்படலாம். இதனால் 'பைப்ரோஸிஸ்’ அல்லது வாயு பரிமாற்றத்தினால் நுரையீரலின் மேற்பரப்பில் தழும்புகள் ஏற்படவும், நுரையீரலில் கடும் காயங்கள் ஏற்படவும் வழிவகுக்கின்றது. இதனால் சுவாச நோய்கள் மற்றும் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

FaLang translation system by Faboba