மலேரியா மிகவும் தீவிரமான மற்றும் எப்போதாவது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாகும். இந்நோய் பிளாஸ்மோடியம் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து வெவ்வேறு வகையான ஒட்டுண்ணிகளில் ஏதேனும் ஒன்றினால் ஏற்படுகிறது. அத்துடன் இவ்வொட்டுண்ணியை காவிச்செல்லும் தொற்று நுளம்பொன்று கடிப்பதனால் மனிதனுக்கு பரவுகிறது. நீங்கள் அதிகம் பிரயாணம் செய்யும் அல்லது வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் வரும் மக்களிடம் தொடர்பு உள்ள ஒரு இளம் வயதினராயின் நீங்கள் ஆபத்தை எதிர்நோக்கலாம்.

நம் நாட்டுக்குள் மலேரியா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாம் ஆண்டு முழுவதும் மலேரியா நோய் ஏற்படும் நாடுகளுக்கு செல்பவர்களாலும் வருபவர்களாலும் அதை இறக்குமதி செய்கின்றோம். நீங்கள் மலேரியா உள்ள நாடொன்றில் இருப்பீர்களாயின், சூரிய அஸ்தமனத்திற்கும் சூரிய உதயத்திற்கும்  இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் நுளம்புகள் மிக்க வெளியிடங்களுக்குச் செல்வீர்களாயின் இந்த நோயின் தாக்கத்திற்கு நீங்களும் ஆளாகலாம்.

நுளம்புக் கடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம்.

  1. நீண்ட காற்சட்டை, நீண்ட சட்டைகள் மற்றும் உங்கள் உடலை மறைக்கும் விதமாக பாவாடைகள் அணியுங்கள்.
  2. நுளம்புகளை விரட்டும் கிறீம்களை பாவியுங்கள்.
  3. இரவு நேரங்களில் மற்றும் விடியும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிருங்கள். (காடுகளுக்கு பிரயாணம் செய்வதில் கவனமாக இருங்கள்)
  4. நித்திரைகொள்ளும்போது சிறந்த நுளம்பு வலையொன்றைப் பயன்படுத்துங்கள் .
  5. ஒரு பொருத்தமான மலேரியா தடுப்பு மருந்தைப் பாவியுங்கள்.

மலேரியா ஒட்டுண்ணியை காவிச்செல்லும் தொற்றுக்கொண்ட நுளம்புகள் கடிப்பதால் இது மனிதர்களுக்குப் பரவுகிறது. மலேரியாவை பரப்பும் நுளம்புகள் சூரிய அஸ்தமனத்திற்கும் சூரியோதயத்திற்கும் இடைப்பட்ட நேரங்களிலேயே மலேரியாவை பரப்புகின்றன என்பதை மறவாதீர்கள்.

மலேரியா ஒட்டுண்ணியின் வகையைப் பொருத்து அறிகுறிகள் ஒரு வாரம் முதல் பல மாதங்களில் ஏற்படலாம். மேலும் தீவிரமான பிரச்சினைகள், வலிப்பு, கோமா, சிறுநீரகம் மற்றும் சுவாசம் செயலிழத்தல் மற்றும் அதிர்ச்சி போன்றவை சிலவேளைகளில் மரணத்தையும் ஏற்படுத்தலாம்.

பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

  • காய்ச்சல்
  • வியர்த்தல்
  • குளிர்
  • தலைவலி
  • வயிற்று வலி
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • வயிற்றோட்டம்
  • உடல் நிலை சரியில்லை என்ற எண்ணம்

மலேரியா பின்வரும் நாடுகளில் பரவுவதாகக் கூறப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான், அங்கோலா, பங்களாதேஷ், பெலிஷ், பெனின், பூட்டான், பொலிவியா, பொட்ஸ்வானா, பிரேஸில், பர்கினா பாசோ, புரூண்டி, கம்போடியா, கெமரூன், மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், சீனா, கொலம்பியா, கொமொரோஸ், கொங்கோ, கொஸ்டா ரிகா, கொடே டில்வொய்ரே, டிஜிபொவுடி, டொமினிகன் குடியரசு, ஈகுவடோர், ஈகுவாடோரியல் ஜினியா, எரிட்ரியா, எதியோப்பியா, பிரென்ஞ் ஜினியா, கபொன், கம்பியா, கானா, கவுத்தமாலா, ஜினியா, ஜினியா - பிஸ்ஸாவு, கயானா, ஹெய்ட்டி, ஹொன்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், கென்யா, லாஓ பிடிஆர், லைபீரியா, மடகஸ்கார், மாலாவி, மலேசியா, மாலி, மொரிடானியா, மயோட்டே, மொஸாம்பிக், மியன்மார், மெக்ஸிகோ, நமீபியா, நைஜர், நேபால், நிகரகுவா, பாகிஸ்தான், பனாமா, பபுவா நிவ் ஜினியா, பெரு, பிலிப்பைன்ஸ், பரகுவே, ருவான்டா, சாஓ டோம் அன்ட் பிரின்சைப், சவூதி அரேபியா, செனகல், சியேரா லியோன், சொலொமன் ஐலன்ட், சோமாலியா, தென் ஆபிரிக்கா, சூடான், சுவாஸிலாந்து, சுரிநேம், தாய்லாந்து, திமோர் லெஸ்டே, டொகோ, தஜிகிஸ்தான், துருக்கி, உகன்டா, டன்சானியா, வனுவாடு, வியட்நாம், வெனிசுவேலா, யேமன்,சோகொட்ராஐலன்ட்,சாம்பியா,சிம்பாப்வே.

உங்களுக்கு வெளிநாடுகளுக்கு, குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளுக்கு செல்லும் திட்டம் இருந்தால் குறைந்த பட்சம் செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நீங்கள் கட்டாயம் நாராஹேன்பிட்டவில் உள்ள மலேரியா எதிர்ப்பு பிரிவுடன் தொடர்பு கொண்டு மலேரியா எதிர்ப்பு மருந்துகளை எடுத்துச் செல்வதா இல்லையா, அப்படி கொண்டு செல்வதாயின் என்ன மருந்தைக் கொண்டு செல்வது என்பதைப்பற்றி கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது மலேரியா ஆபத்து அதிகம் இருப்பின், நீங்கள் மலேரியா தடுப்பு மருந்துகளை ஒரு வாரத்திற்கு முன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியிலும் இலங்கைக்கு திரும்பி வந்த பின் 4 வாரங்களுக்கும் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். திரும்பி வந்து 1 வருட காலத்திற்கு மலேரியா காய்ச்சல் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்துகொள்ள மறவாதீர்கள்.

மலேரியா ஒழிப்புத் திட்டத்துடன் தொடர்புகொள்ள:

தொலைபேசி: +94 117 626 626 அல்லது +94 112 588 408 அல்லது அவர்களது இணைய தளமான http://www.malariacampaign.gov.lk/precentation/ContactUs.aspx க்கு பிரவேசியுங்கள்.

உங்கள் வைத்தியரிடம் நீங்கள் மலேரியா பரவும் நாட்டுக்கு சென்று வந்ததைக் கூறுங்கள்.

FaLang translation system by Faboba