இளம் பருவ யுவதிகள் பூப்பெய்திய பின்னர் தொடர்ந்து வளர வளர பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியவர்களாக உள்ளனர். மகப்பேறு மருத்துவரை நாடி அவரது உதவியை பெறும் அளவுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் வளரிளம் பிள்ளைகளுக்கு ஒரு பொதுவான பிரச்சினையாக உருவெடுக்கும். அதேவேளை மாதவிடாய் ஏற்பட ஒரு வழக்கமான கால எல்லை உண்டு, அதன்படி சாதாரணமாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படும், அது சில நாட்கள் முன் பின் ஆகலாம், அப்படியானாலும் அது ஒரு சாதாரண மாதவிடாய் காலம்தான். சராசரியாக உங்கள் மாதவிடாய் காலத்தில் நீங்கள் 30 - 50 மி.லீ. இரத்தத்தை இழக்கலாம். நீங்கள் மாதவிடாய்க் காலத்தின்போது எத்தனை Pads களை பாவித்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்து இரத்த இழப்பு அளவைக் கணித்துக்கொள்ளலாம். 

அசாதாரண மாதவிடாய் சுழற்சி பெரும்பாலும் வளரிளம் பெண்களுக்கு பொதுவானது. இது பெரும்பாலும் மாதவிடாய் ஆரம்பத்தில் காணப்படும். மாதவிடாய் தொடர்ந்து அசாதாரண முறையில் தள்ளிப்போகுமாக இருந்தால் ஒரு மருத்துவரைப் பார்க்கும்படி ஆலோசனை வழங்கப்படும். அவர் வயிறு மற்றும் இடுப்பை ஒரு அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் (USS)  செய்து பார்த்து ஏதாவது நோய் இருக்கிறதா என்பதை கண்டறிவார்.

அசாதாரண மாதவிடாய்க்கு பின்வரும் ஏதேனும் ஒரு காரணி காரணமாக இருக்கலாம்.

அளவு

உங்கள் மாதவிடாய்க் காலத்தின்போது அதிகமான இரத்தப் போக்கு மெனோரேஜியா என அழைக்கப்படும். இரும்புச் சத்து குறைபாடு/ குருதிச்சோகை ஆகியவற்றுக்கு சரியான சிகிச்சைப் பெறாததன் விளைவாக அதிக இரத்தப் போக்கு ஏற்படும்.

காலம் அல்லது தடவைகள்

மாதவிடாய் சுழட்சிக் காலம் அடிக்கடி ஏற்படலாம். அதாவது கலண்டர் மாதமொன்றுக்கு இரண்டு முறை ஏற்படலாம் அல்லது இடைக்கிடை ஏற்படலாம்.

இரத்தப்போக்குக் காலம்

மாதவிடாய் சுழற்சியின்போது சாதாரண இரத்தப்போக்கு 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். இதற்கு மாறாக நீண்ட காலத்திற்கு இரத்தப்போக்கு ஏற்படுமாயின் அதை மெனோரேஜியா (menorrhagia) என அழைப்பர்.

வலி

மாதவிடாய்க் காலத்தின்போது அடி வயிற்று வலி ஏற்படுதல் அசாதாரணமானது அல்ல. சுழட்சிக் காலங்களில் ஏற்படும் வலியை சூதக வலி என்றழைப்பர். பெரும்பாலும் வலி மிகக் கடுமையாக இருப்பின் நீங்கள் அடிக்கடி பாடசாலைக்குச் செல்வதை தவிர்ப்பீர்கள்.  பெரும்பாலும் சுழட்சி ஆரம்பத்தில் தொடங்கி 24 - 48  மணித்தியாலங்களுக்கு வலி தொடரலாம். அதனுடன் சேர்ந்து குமட்டல், வாந்தி, முதுகு வலி மற்றும் தொடைகளில் வலி என்பனவும் ஏற்படலாம்.

ஒழுங்குமுறை

மாதவிடாய் என்பது ஒரு சுழட்சி முறையிலான நிகழ்வாகும். அது பொதுவாக மாதத்திற்கு ஒருமுறையே ஏற்படும். இருந்தும் சில பெண்களுக்கு முறை தவறிய சுழட்சி ஏற்படும்.

தொடங்கும் காலம்

வாழ்க்கையில் பூப்பு அல்லது முதல் மாதவிடாய்க் காலம் மிக சிறு வயதில் அதாவது 8 வயது அளவில் ஏற்படுமாயின், அது காலத்திற்கு முந்திய பருவமடைதல் என அழைக்கப்படும். அதேவேளை மாதவிடாய் ஏற்படாத அல்லது தாமதித்து 16 வயதளவில் பூப்பெய்துவார்களாயின் அது 'தாமதித்த பூப்பு' என அழைக்கப்படும்.

ஒலிகோமெனோறியா (Oligomenorrhoea)

ஒலிகோமெனோறியா என்றால் என்ன?

இடைக்கிடையான மாதவிடாய் 35 நாட்கள் அல்லது இடைவெளி விட்டு ஏற்படும். இவ்வாறான நிலை வருடத்திற்கு 4 - 9 மாதவிடாய் சுழற்சிகள் ஏற்படுவதுடன் இக்கால கட்டத்தில் ஏற்படும் மாதவிடாய் சாதாரணமானதாக அல்லது கடினமானதாக இருக்கும். முறைகேடான அல்லது இடைக்கிடையான மாதவிடாய் ஆனது தன்னிச்சையற்ற மாதவிடாய் சுழட்சியின் விளைவாக ஏற்படுவதாகும். அத்துடன் அது உடற் பருமன் அல்லது எடை குறைவின் வெளிப்பாடாகவும் அமையும்.

நோயை உறுதிப்படுத்தல்

வயிற்றை அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் பரிசோதனை செய்வதன் மூலம் அடிப்படை காரணம் என்னவென்று அறியலாம்.

சிகிச்சை

வளரிளம் பருவத்தின்போது முறைகேடான மாதவிடாய் என்பது வழக்கமாக சாதாரணமானது. இந்நிலைமை ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலம் தொடர்ந்தாலன்றி சிகிச்சை ஏதும் தேவைப்படாது.

சூதகவலி மாதவிடாய் (DYSmenorrhoea)

சூதகவலி மாதவிடாய் என்றால் என்ன?

அளவுக்கதிகமான மாதவிடாய் வலியானது உங்கள் அன்றாட வாழ்வில் பாதிப்பை உண்டு பண்ணக்கூடியது. இரண்டு வகையான சூதகவலி மாதவிடாய்கள் உள்ளன. இரண்டாம் நிலை சூதகவலி மாதவிடாயானது ஒரு நோயினால் ஏற்படும் முறைகேடு அல்லது கர்ப்பப்பைக்கு உள்ளே அல்லது வெளியே ஏற்படும் கட்டமைப்பு கோளாறினால் ஏற்படுகின்றது. முதன்மை நிலை சூதகவலிக்கு மேற்குறிப்பிட்டவை காரணமாக இருக்காது.

நோயை உறுதிப்படுத்தல்

வயிற்றை அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் செய்வதன் மூலம் நோய்க்கான காரணத்தை அறியலாம். இரண்டாம் நிலை சூதகவலி மாதவிடாயை லேபரொஸ்கொபி பரிசோதனை செய்து இடுப்பில் பிரச்சினை ஏதும் உள்ளதா என அறிந்துகொள்ளலாம்.

சிகிச்சை

ஆரம்ப சிகிச்சை மிபெனெமிக் அசிட் மூலம் மேற்கொள்ளப்படுவது. இது மாதவிடாயின்போது வலிக்கு மூல காரணமாக உள்ள புரோஸ்டாக்லான்டின்ஸ், இரசாயனங்கள் ஆகியவற்றின் உற்பத்தியை தவிர்க்கிறது. மிபெனெமிக் அசிட்டுக்கு வலி தாக்குபிடிக்காவிடின் அடுத்த கட்ட சிகிச்சையானது 'கொம்பைன் ஓரல் கொன்ட்ராசெப்டிவ் பில்ஸ்' (COCP) கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். இது வலியை குறைக்க உதவும்.

மெனோராஜியா (MENORRHAGIA)

மெனோராஜியா என்றால் என்ன?

மாதவிடாய் சுழட்சி சாதாரணமாகவும் அதேவேளை அதிகரித்த இரத்தபோக்கு மற்றும் நீண்ட காலத்திற்கு இரத்தப்போக்கு நீடித்தல் போன்றவைகளை இது குறிக்கும். இதற்கு சிகிச்சை அளிக்காவிடின் அதிக இரத்தப் போக்கு காரணமாக பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படலாம்.

நோயை உறுதிப்படுத்தல்

வயிற்றை அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் பரிசோதனை செய்வதன் மூலம் நோய்க்கான அடிப்படைக் காரணம் என்னவென்று அறியலாம்.

சிகிச்சை

மிபெனெமிக் அசிட் ஆரம்பகட்ட சிகிச்சையாகும்.

(மாதவிடாயின்போது அதிக இரத்தப்போக்கு ஏற்படும்போது அதை தடுக்கும் கர்ப்பப்பையின் நடவடிக்கைக்கு புரொஸ்டாக்லான்டின், இரசாயனங்கள் போன்றவை தடையாக இருக்கின்றன. இவற்றின் உற்பத்தியை தடுக்கும் ஒரு எதிர்ப்பு சக்தியாக மிபெனெமிக் அசிட் திகழ்கின்றது.)

மிபெனெமிக் அசிட் இரத்தபோக்கை தடுக்காவிடின் அடுத்த கட்ட சிகிச்சையாக ட்ரேனெக்ஸாமிக் அசிட் இருக்கும். (இது பைப்ரினொலைடிக் இற்கு எதிரானது, அது இரத்தப்போக்கு குறைக்க உதவுகிறது.)

பொதுவாக மிபெனெமிக் அசிட் மற்றும் டிரானெக்ஸாமிக் அசிட் ஆகிய இரண்டுமே இணைந்து அதிக மாதவிடாய் இரத்தப்போக்கை நிறுத்த திறம்பட செயற்படக்கூடியவை.

நோரிதிஸ்டெரோன் மூன்றாவது கட்ட சிகிச்சையாகும்.

(புரொஜெஸ்டெரோன் அனாலொங், நோநோரிதிஸ்டெரோன் ஆகியவை கர்ப்பப்பையின் உட்பகுதியை பராமரிப்பதுடன் அதை உறுதியான நிலையில் வைத்திருக்கும் இதன் மூலம் இரத்தப்போக்கு குறையும்.)

மாதவிலக்கின்மை - AMENORRHOEA

மாதவிலக்கின்மை என்றால் என்ன?

மாதவிலக்கின்மை இரண்டு வகைகளில் அடங்குகின்றது. முதலாவது வகை மாதவிடாய் நடைபெறாமை. ஒரு பெண்ணுக்கு இதற்கு முன்னர் எப்போதும் மாதவிடாய் ஏற்பட்டதில்லை எனும் நிலையை இது குறிக்கும். இரண்டாம் நிலை மாதவிலக்கின்மை ஆனது 6 மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்கும் நிலையைக் குறிக்கும்.

நோயை உறுதிப்படுத்தல்

இரண்டாம் நிலை பாலியல் பண்புகளான மடி மற்றும் அக்குள் மயிர், மார்பு வளர்ச்சி ஆகியவை நடைபெற்றும் 16 வயதுவரை மாதவிடாய் ஏற்படாமை.  இதற்கு மகப்பேற்று மருத்துவரின் மேலதிக ஆலோசனைகளைப் பெறுவது அவசியமாகின்றது.

இரண்டாம் நிலை மாதவிலக்கின்மை காரணமான பொலி சிஸ்டிக் கர்ப்பப்பை நோய் போன்றவை உள்ளதா என்பதை, வழக்கமான அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் பரிசோதனை வெளிப்படுத்தும்.

சிகிச்சை

நோய் ஆய்வு மற்றும் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய சிகிச்சை முறைகள் வேறுபடும்.

முன்கூட்டிய பூப்படைதல் - PRECOCIOUS PUBERTY

முன்கூட்டிய பூப்படைதல் என்றால் என்ன?

அடிப்படையில் வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே பூப்படைதலை இது குறிக்கும்.

நோயை உறுதிப்படுத்தல்

இதற்கு மகப்பேற்று வைத்தியரிடம் ஆலோசனைகளைப் பெறவேண்டும்.

சிகிச்சை

நோய் ஆய்வு மற்றும் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய சிகிச்சை முறைகள் வேறுபடும்.

FaLang translation system by Faboba