இளம் வயதினர் என்ற வகையில், உங்கள் உடலில் அதிக சக்தி நிறைந்திருக்கும். அதை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இலங்கையின் சிறப்பு யாதெனில், பாடசாலை பிள்ளைகள் என்ற வகையில் நாம் அதிகமான நேரத்தை வெளிப்புறத்தில் கழிக்கின்றோம், அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் கிரிக்கட் விளையாடுகின்றோம், மதிய உணவு நேரத்தில் பாடசாலை மைதானத்தைச் சுற்றி ஓடுகின்றோம் அல்லது விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றோம். அதாவது எமது உடலிலுள்ள அனைத்து சக்தியையும் பயன்படுத்தி, எமது உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்கின்றோம் என்பதே இதன் பொருளாகும். இளம் வயதினர் தினமும் குறைந்தது 60 நிமிடங்களாவது நன்கு உடலை வளைத்து வேலை செய்யவேண்டும் அல்லது உடற்பயிற்சி செய்யவேண்டும் என உடற்பயிற்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பெரும்பாலான இளம் வயதினர் மேற்குறிப்பிட்ட நேர அளவைவிட மிகக் குறைவான அளவிலேயே உடற்பயிற்சிகளைச் செய்கின்றனர். ஆனால் மெய்வல்லுனர் போட்டிகளுக்கு பயிற்சி பெறுவோர் சற்று அதிகமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

உடலுறுதியின் பல அம்சங்களை சரியாக புரிந்துகொள்வதற்காக முதலில் சில விடயங்களைப் புரிந்து கொள்வோம்.

உடல் செயற்பாடு என்றால் என்ன?

உங்கள் எலும்புகளும், தசைகளும் சேர்ந்தது செயற்படும் எந்தவொரு உடல் அசைவையும் உடல் செயற்பாடு என்று கூறலாம்.

உடற்பயிற்சி என்றால் என்ன?

உடற்பயிற்சி என்பது திட்டமிடப்பட்ட, கட்டமைக்கப்பட்ட மீண்டும் மீண்டும் உடல் இயக்கத்தை ஏற்படுத்தும் உடல்செயற்பாட்டைக் குறிக்கும்.

உடலுறுதி என்றால் என்ன?

உங்களிடம் உள்ள அல்லது அடைய நினைக்கும் உடலுறுதியின் அளவானது, நீங்கள் மேற்கொண்ட அல்லது மேற்கொள்ளவுள்ள உடற்பயிற்சியின் அளவால் தீர்மானிக்கப்படுகின்றது. உடலுறுதியானது பொதுவாக ஆரோக்கியம் தொடர்பான மற்றும் ஆற்றல் தொடர்பான தொகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

ஆரோக்கியம் தொடர்பான உடலுறுதிக் கூறுகள் எவை?

  • இதய சுவாச ஆற்றல் - உங்கள் உடலின் நீடித்த செயற்பாட்டின்போது உடலுக்கு தேவையான ஒக்ஸிஜனை வழங்கக்கூடிய திறன்கொண்ட சுழற்சி மற்றும் சுவாச அமைப்பு.
  • உடல் உள்ளடக்கம்: தசை, கொழுப்பு, எலும்பு மற்றும் ஏனைய முக்கிய பாகங்களின் மொத்த அளவு.
  • தசை வலிமை: சக்தியை செலுத்துவதில் உங்கள் தசையின் வல்லமை.
  • தசையின் ஆற்றல்: சோர்வின்றி தொடர்ந்து செயற்பட உங்களுக்கு உள்ள வல்லமை.
  • வளைந்துக்கொடுக்கும் தன்மை: உங்கள் ஒவ்வொரு மூட்டுக்களின் இயக்க வரம்பு.

ஆற்றல் தொடர்பான உடலுறுதிக் கூறுகள் எவை?

  • விரைவு: வேகமாகவும் துல்லியமாகவும் உங்கள் உடல் நிலையை மாற்றுவதில் உங்களுக்கு இருக்கும் திறன்.
  • ஒருங்கிணைப்பு: அறிவைப் பயன்படுத்துவதில் உங்கள் திறன்: பார்த்தல், கேட்டல் போன்ற உணர்திறனைப் பயன்படுத்தி உங்கள் உடலுடன் இணைந்து பணிகளைத் துல்லியமாக மேற்கொள்ளும் உங்கள் வல்லமை.
  • சமநிலை: சமநிலையை பராமரித்தல் உங்கள் நிலையான அல்லது நகர்வை சமப்படுத்துதல்.
  • சக்தி: உங்களால் நிறைவேற்றக்கூடிய விகிதம் அல்லது மட்டம்.
  • எதிர்வினை காலம்: தூண்டுதலுக்கும் அதற்கான எதிர்வினை ஆரம்பத்திற்குமான நேர அளவை இது குறிக்கும்.
  • வேகம்: குறைந்த காலத்திற்குள் ஒரு நகர்வை மேற்கொள்ளும் உங்கள் திறன்.

உடலுறுதியின் வெவ்வேறு அம்சங்களை இப்பொழுது நாம் விளங்கிக்கொண்டுள்ளோம். நமது வாழ்க்கை முறைக்கு ஏற்ற, நமது உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகள் என்னவென்று இப்பொழுது பார்ப்போம். மேலும் இந்தப் பகுதியில் உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உடற்பயிற்சிகள் என்னவென்பதை விபரிக்கும் வழிகாட்டியொன்றும்  வழங்கப்படுகிறது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி நடைமுறைகள்

    • நீங்கள் ஒரு வாரத்தில் 5 நாட்களுக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது அளவான ஏரோபிக் உடற்பயிற்சி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
    • அல்லது நீங்கள் ஒரு வாரத்திற்கு 3 நாட்களுக்கு 20 நிமிடங்கள் கடுமையான இன்டென்சிட்டி, ஏரோபிக் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
    • நீங்கள் கடுமையான உடற்பயிற்சியையும் அளவான உடற்பயிற்சியையும் இணைத்தும் செய்யலாம். அல்லது உங்கள் வாராந்த உடற்பயிற்சியை மாற்றலாம். மிதமான தீவிர ஏரோபிக் செயற்பாடுகள் 10 நிமிடங்களுக்கு ஒரு வட்டமாக மொத்தம் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் செய்யப்பட வேண்டும்.
    • நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் உடற்பயிற்சி செயற்பாடுகளை தசை வலிமை மற்றும் தாங்கும் சக்தி ஆகியவற்றை பராமரிக்கும் அல்லது அதிகரிக்கும் விதமாக மேற்கொள்ள வேண்டும்.
    • உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பு காரணமாக, தங்கள் உடலுறுதியை அதிகரிக்க விரும்புபவர்கள் நாட்பட்ட நோய்கள் மற்றும் உடற்பாதிப்புக்கள் போன்றவைகளினால் வரும் ஆபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பை தவிர்த்துக் கொள்ளுங்கள். நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச உடற்பயிற்சி செயற்பாடுகளை தொடர்ந்து செய்வதன் மூலம் நன்மையடையலாம். எனவே நீங்கள் அளவுக்கதிகமான உடற்பயிற்சிகளை செய்து உங்கள் உடலுக்கு துன்பம் கொடுக்கத் தேவையில்லை.
    • மேலும் உங்கள் தினசரி உடற்பயிற்சிகளில் பின்வரும் கட்டமைப்புகள் அடங்கியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
    • உடலைத் தயார்படுத்தும் உடற்பயிற்சி: நீங்கள் உடற்பயிற்சிகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முதல் 5 - 10 நிமிடங்களுக்கு மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக அதன் வேகத்தைக் கூட்டுதல் வேண்டும். அதன் மூலம் இதய - சுவாச மற்றும் தசைகளுக்கு தாங்கும் சக்தியை அதிகரிக்க இப் பயிற்சிகள் உதவும்.
    • சீரமைப்பு: அடுத்த 20 - 60 நிமிடங்களுக்கு ஏரோபிக், ரெசிஸ்டென்ட், நியூரோ-மோட்டர், அல்லது விளையாட்டுச் செயற்பாடுகள் (உடற்பயிற்சி செய்யும் நபர் குறைந்த பட்சம் 20 - 60 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வாராயின் ஒரு வட்டத்திற்கு 10 நிமிடம் அளவில் மேற்கொள்வது சிறந்ததாகும்)
    • அமைதியாகும் பயிற்சி: தீவிர உடற்பயிற்சிகள் முடிவடைந்தபின் குறைந்தது 5 - 10 நிமிடங்களுக்கு வேகத்தைக் குறைத்து மெதுவாக உடற்பயிற்சிகளைச் செய்து, உடலை வழமையான நிலைக்குக் கொண்டு வாருங்கள்.
    • நீட்சிப் பயிற்சி: மேற்குறிப்பிட்ட பயிற்சிகளுக்குப் பின் 10 நிமிடங்கள் வரை தசைகளை வழமை நிலைக்குக் கொண்டுவரும் நீட்சிப் பயிற்சி (stretching) செய்யவேண்டும்.

ஏரோபிக்ஸ்

ஏரோபிக்ஸ் (அல்லது இதய உடற்பயிற்சி) உங்கள் உடலின் ஒக்ஸிஜன் நுகர்வை சீராக்குகின்றது அல்லது அதிகரிக்கின்றது. உண்மையில் ஏரோபிக் என்பதன் பொருள் 'ஒக்ஸிஜன் உடன்' என்பதாகும். பல்வேறு வகையிலான ஏரோபிக்ஸ் உடற் பயிற்சிகளின் மிதமான அளவில் நீடிக்கப்பட்ட கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

  • வகை:  இவை ஓட்டம், விறுவிறுப்பான நடை, நடனம், நீச்சல் மற்றும் சைக்கிளோட்டம் போன்றவற்றைக் குறிக்கும்.
  • நேர அளவு: தினமும் 60 நிமிடங்கள்

தசைகளை வலுப்படுத்தல்

இது கட்டமைக்கப்படாத ஒரு உடற்பயிற்சியாகும். இதன் மூலம் சிறிய அளவாக அதிகரிக்கும் சக்திகூட உங்கள் செயற்பாடுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்வதற்கும், வேலைகளைச் செய்வதற்கும் மாடிப்படிகளில் ஏறுவது மற்றும் மளிகைச் சாமான்களை சுமந்து செல்வது போன்ற அன்றாட கடமைகளைச் செய்வதற்கும் இப்பயிற்சி உங்களுக்குப் பெரிதும் துணைபுரியும்.

  • வகை: மரத்தில் ஏறுவது, விளையாட்டு மைதான உபகரணங்களைப் பயன்படுத்துதல் அல்லது கயிறிழுத்தல், பளு தூக்குதல், ரெசிஸ்டன்ட் பேன்ட், புஷ் அப்ஸ் மற்றும் சிட் அப்ஸ் போன்ற உடற் பயிற்சிகள் அனைத்தும் இந்த வகையைச் சேர்ந்தவையாகும்.
  • நேர அளவு: ஒரு வாரத்திற்கு மூன்று முறை, ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் வீதம்.

எலும்பை வலுப்படுத்தல்

நீங்கள் இளமையாக இருப்பதால் எலும்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம், ஆனால் எந்த வயதிலும் எலும்புகள் பலவீனமாகலாம் என்பதை நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் உடலின் எலும்புகள் முதுகெலும்பு, இடுப்பு மற்றும் மணிக்கட்டு அடங்கலான எலும்புகளில் ஒஸ்டியோபொரோசிஸ் எனும் எழும்புருக்கி நோய் ஏற்படும் ஆபத்து அதிக அளவில் உள்ளது. இருப்பினும் முறையான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் உங்கள் எலும்புகளை நீங்கள் வலுப்படுத்திக் கொள்ளலாம்.

  • வகை: இவற்றில் கயிறடித்தல் (ஸ்கிப்பிங் ரோப்), நொண்டி விளையாட்டு, ஓட்டம், கூடைப்பந்து, டென்னிஸ், டியூபிங், டம்ப்பெல்ஸ், மெடிசின் போல்ஸ் போன்ற செயற்பாடுகள் அடங்கும்.
  • நேர அளவு: ஒரு வாரத்திற்கு மூன்று முறை, ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் வீதம்.

விளையாட்டின்போதும் அதற்கு முன்னரும் பின்னரும் நீர் அருந்துதல் என்பது நடைமுறை விஞ்ஞான ரீதியிலான விளையாட்டு ஊட்டச்சத்தாகும். பயிற்சியின்போது நீங்கள் என்ன சாப்பிடுகின்றீர்கள் என்பது உடற்பயிற்சி செய்வது போன்றே முக்கியமானதாகும். அதை மனதில் வைத்துக் கொண்டு, பயிற்சியின்போதும் விளையாட்டில் ஈடுபடும்போதும் ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு சத்துணவுகள் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நாம் முற்படுகின்றோம்.

பயிற்சிக்கு முன்னரான உணவுகள்

இவைதான் பயிற்சிக்கு முன்னராக நீங்கள் உண்ணவேண்டிய உணவு மற்றும் சிற்றுண்டிகளாகும். இவ்வுணவுகளுக்கான பிரதான காரணம், பசியை தவிர்த்தல், மன விழிப்புணர்வை உறுதிப்படுத்துதல் மற்றும் எதிர்வரும் உடற்பயிற்சியின்போது இரத்த ஓட்டத்தில் உடலுக்குத் தேவையான குளுக்கோசை வழங்குதல் போன்றவைகளாகும்.

பயிற்சியின்போது நீங்கள் உண்ண வேண்டியவை எவை?

நீங்கள் ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவாக உடற்பயிற்சி செய்வீர்களாயின், பயிற்சிக்கு முன்னர் நீங்கள் உண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மணித்தியாலம் அல்லது அதற்கு மேலாக உடற்பயிற்சியில் ஈடுபடும் நீங்கள் உங்கள் உடல் எடையின்படி ஒரு கிலோவுக்கு 0.7 கிராம் காபோஹைதரேட் என்ற வீதத்தில் உணவை உங்கள் செயற்திறனை அதிகரித்துக் கொள்ளும் பொருட்டு உட்கொள்ள வேண்டும். எப்பொழுது விளையாட்டு வீரர்கள் கார்போஹைதரேட் குறைபாட்டோடு இருக்கிறார்களோ, உடற்பயிற்சிக்கு முன் உணவு உண்ணாமல் இருக்கிறார்களோ, அல்லது எடை இழப்பதற்காக உணவைத் தவிர்த்திருக்கிறார்களோ அத்தகைய சூழ்நிலைகளில் நீண்ட நேர உடற்பயிற்சியின்போது காபோஹைதரேட் உணவினை உட்கொள்வது மிக முக்கியமாகும்.

உடற்பயிற்சி முடிந்ததும் எவ்வளவு நேரத்திற்குப் பின் மீண்டும் உணவு உட்கொள்ளலாம்?

உடற்பயிற்சியின் பின்னர் உங்கள் உணவுக்கான நேரம் மற்றும் அளவுகளானது நீங்கள் உடற்பயிற்சி செய்த நேரம் மற்றும் உடற்பயிற்சியின் தன்மையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும்.

பயிற்சியின் பின்னர், எப்பொழுது, எவற்றை உண்பது என்பது எந்தளவு க்ளைகோஜன் (glycogen) குறைந்துள்ளது, உங்கள் அடுத்த உடற்பயிற்சி எப்போது ஆரம்பமாகின்றது என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.

உதாரணத்திற்கு பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் தங்களது மரதன் ஓட்டத்தை முடிக்கும் போது க்ளைகோஜன் குறைந்த நிலையிலேயே முடிக்கின்றனர், ஆனால் இது 90 நிமிட பயிற்சி ஓட்டத்திற்கு ஒரு பிரச்சினையல்ல. எவ்வாறாயினும், பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் தங்கள் மரதன் ஓட்டத்தை ஓடி முடித்தபின் எஞ்சிய நாளில் வேறு ஓட்டத்தில் ஈடுபடுவதில்லை. எனவே உடற்பயிற்சிக்குப் பிந்திய உணவு இவ்வீரர்களுக்கு அவ்வளவு முக்கியமானதல்ல.

ஒரு முத்தரப்பு தடகள வீரர் காலை நேரத்தில் 90 நிமிட நேர ஓட்டப் பயிற்சியில் மற்றும் பிற்பகலில் சைக்கிளோட்டம் ஆகியவற்றில் ஈடுபடுவாராயின் பயிற்சியின்போது அதிகபட்ச சக்தி மீட்டலைப் பெறவேண்டும். இந்த இலக்கை அடைவதற்கு பயிற்சிக்கு முன்னரான உணவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

உடற்பயிற்சியின் பின்னர் உடனடியாக கார்போஹைட்ரேட் நுகர்தல் (பொதுவாக ½ மணித்தியாலத்திற்குள்) 6 மணி நேரத்தில் கிளைக்கோஜன் அளவுகளை அதிகரிக்கும். நுகர்வு 2 மணி நேரம் தாமதமாவதால் ஏற்படும் விளைவை விட இது அதிகமாகும்.

உணவுச் சொக்லட்கள் மற்றும் சக்தி பானங்கள் பயன் மிக்கவையா?

உணவுச் சொக்லட்கள் மற்றும் சக்தி பானங்கள் சீரான சமநிலை உணவுகளை ஈடுசெய்யாது! மேலும் அவற்றில் அளவுக்கதிகமான சர்க்கரை மற்றும் கலோரிகள் உள்ளதால் அவை உடல் எடை அதிகரிக்கவும், பல் சொத்தையாவதற்குமே பங்களிப்புச் செய்யும். இவற்றால் அவர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படாது.

அத்துடன் நீங்கள் சக்தி பானங்களை அடிக்கடி அருந்துவதால் ஒரு நாளைக்கு எடுக்கவேண்டிய கெபேனை விட அதிகம் உட்கொள்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது வயிற்றுக் கோளாறுகள், நித்திரைப் பிரச்சினைகள் மற்றும் தலைவலி என்பன ஏற்படக் காரணமாக அமைந்துவிடும். இவற்றை அளவுக்கு அதிகமாக நுகரும்போது சீரற்ற இதயத்துடிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் வலிப்பு போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.

உணவுச் சொக்லட்களை நுகர்வது முறையான உணவுக்கான மாற்றீடாக அமையாது. இவற்றில் தேவையற்ற இரசாயனப் பொருட்கள் அடங்கியிருக்கலாம். இவற்றால் பயிற்சியின்போது உங்களுக்கு தேவையான சக்தியைப் பெறுவதற்கு பங்களிப்பு செய்ய முடியாது.

சரியான சத்துணவுகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது?

சந்தையில் பல்வேறு சத்துணவுகள் கிடைக்கின்றன. இதைப்பற்றி உங்கள் பயிற்றுவிப்பாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதுடன், எப்போதும் அவற்றை வாங்குவதற்கு முன்னர் அவற்றில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள், சேர்க்கைப் பொருட்களை அவற்றின் லேபளை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றில் சரியான அளவு ஊட்டச்சத்து உள்ளடக்கம் உள்ளதா அல்லது தீங்குதரக்கூடிய பொருட்கள் அடங்கியுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

விளையாட்டின்போது எவ்வாறான பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன?

  • அனபோலிக் ஏஜன்ட்ஸ் (S1.1 உட்புற (a) மற்றும் வெளி (b) உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஸ்டெராய்டுகள் மற்றும் S1.2 மற்றும் உட்சேர்க்கைக்குரிய காரணி).
  • பெப்டைட் ஹோர்மோன்கள், வளர்ச்சிக் காரணிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொருட்களில் (உதா: இரத்தச் சிகப்பணுவைத் தூண்டும் காரணிகள், இன்சுலின்கள், வளர்ச்சி  ஹோர்மோன்கள்).
  • பீட்டா-2 அகோனிஸ்ட்ஸ்.
  • ஹோர்மோன் அன்டகொனிஸ்ட் மற்றும் மொடுயுலேட்டர்கள் (உதா: அரோமாடேஸ் மட்டுப்படுத்திகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஈஸ்ட்ரோஜன் ரிசெப்டர் மொடுயுலேட்டர்கள்).
  • நீர்ப்பெருக்கிகள் மற்றும் அது போன்றவை (உதா: டியூரெடிக்ஸ் அன்ட் பிளாஸ்மா எக்ஸ்பென்டர்ஸ்).
  • ஊக்கப்பொருட்கள்.
  • போதைப் பொருட்கள்.
  • கஞ்சா கொண்டு தயாரித்த பொருட்கள்.
  • குளுக்கோஸ் ஊக்கிகள்.

பயிற்சி செய்யும்போது தொடர்ச்சியாக தாகம் ஏற்படுவது ஏன்?

இதற்குக் காரணம் பயிற்சியின்போது உடலில் வெப்பநிலை அதிகரிக்கின்றது. அந்த வெப்பத்தை தணித்து உடலைக் குளிர்ச்சியடைய வைப்பதற்காக வியர்வை  வெளியேறுகின்றது. இதனால் உங்கள் உடலில் உள்ள நீரும் உப்பும் வியர்வையாக வெளியேறுகின்றன. இது இயற்கையாக இடம்பெறும் ஒரு எதிர்வினை செயலாக இருக்கும் அதேவேளை, நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது உடல் இழக்கும் நீரை சிறுநீரகத்தின் உணரிகள் கண்டறிந்து அதனை மீள் நிரப்புவதற்காக தாக உணர்வை ஏற்படுத்துகின்றன. எனவே இத்தகைய சந்தர்ப்பங்களில் நீங்கள் தேவையான அளவு நீர் மற்றும் திரவங்கள் அருந்துவதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

பலர் உடலுறுதி பற்றி வித்தியாசமான அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் உண்மையல்ல என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். பின்வரும் கருத்துக்களைக் கவனித்து, உங்களிடம் எவராவது அவ்வாறான கருத்துக்களை சொல்வார்களாயின், அவை உண்மையல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

  • கட்டுக்கதை 1:
    நடைபாதையில் ஓடுவதைவிட ஓடுகருவியில் (treadmill) ஓடுவது உங்கள் முழங்காலுக்கு குறைந்த அழுத்தத்தை கொடுக்கின்றது.
  • கட்டுக்கதை 2:
    உங்களால் உடனடியாக வயிற்றையும் கைகளின் உள்ள ஊழைச்சதையையும் குறைக்க முடியும்.
  • கட்டுக்கதை 3:
    எடையைக் குறைக்க நீச்சல் மிகச் சிறந்தது.
  • கட்டுக்கதை 4:
    வியர்க்கும் அளவுக்கு வேலை செய்யாவிடின், நீங்கள் போதுமான அளவு வேலை செய்யவில்லை.
  • கட்டுக்கதை 5:
    பயிற்சிக்கு முன்னதாக நீட்சிப் பயிற்சிகள் செய்யவேண்டும்.
  • கட்டுக்கதை 6:
    பிள்ளைகளுக்கு வலுப்பயிற்சி பாதுகாப்பற்றது.
  • கட்டுக்கதை 7:
    பளு தூக்கும் பயிற்சிகள் செய்வதால் பெண்கள் பருமனடைவார்கள்.
  • கட்டுக்கதை 8:
    நீங்கள் எந்த அளவு கடினமாக வேலை செய்கிறீர்கள் என்பதை இதயத் துடிப்பை கண்காணிப்பதன் மூலம் கண்டறியலாம்.
  • கட்டுக்கதை 9:
    தீவிரம் குறைந்த உடற்பயிற்சிகள் கொழுப்பை அதிகம் எரிக்கிறது.
  • கட்டுக்கதை 10:
    ஒரு உடற்பயிற்சி அட்டவனையை ஆரம்பிக்க வயதெல்லையொன்று உள்ளது.
FaLang translation system by Faboba