அனைத்து இளம் வயதினரும் களைப்படைந்துள்ளனர். இக்கூற்று உண்மையானது என்பது எமக்குத் தெரியும். ஏனெனில் நீங்கள் ஒரு சுறுசுறுப்பான, வேளைப்பளு மிகுந்த வாழ்க்கையை வாழ்கின்றீர்கள். இருப்பினும் சில நேரங்களில் நீங்கள் தெளிவற்ற காரணங்களுக்காக சோர்வையும் வெறுமையையும் உணரலாம். அவ்வாறு நீங்கள் உணர்வீர்களாயின், நீங்கள் ஒரு குருதிச்சோகை நோயாளியாகவும் இருக்கலாம். இரத்தச்சோகை நோயை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமாயின், முதலில் உங்கள் வளர்ச்சிக்கு ஹீமோகுளோபின் (HB) எவ்வாறு உதவுகிறது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். ஹீமோகுளோபின் உங்கள் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும், அனைத்து  உறுப்புக்களுக்கும் ஒக்ஸிஜனை எடுத்துச் செல்லும் சிவப்பு இரத்த அணுக்கள் அடங்கியுள்ள ஒரு பாகமாகும். உங்கள் உடலின் செயற்பாடுகள் அனைத்திற்கும் ஒக்ஸிஜன் தேவைப்படுவதால் இச் செயற்பாடு உங்கள் உடலில் நடைபெறுகின்றது. அவ்வாறாயின் உங்கள் இரத்தத்தில் தேவையான அளவு ஹீமோகுளோபின் முழுச்செறிவுடன் இருக்கவேண்டும் என்பது முக்கியமானதாகும்.

உங்களுக்கு இரத்தச்சோகை நோய் இருக்குமாயின் அதன் பொருள் உங்கள் உடலின் செங்குருதி அணுக்களில் ஹீமோகுளோபின் அளவு உங்கள் வயதிற்கும் பாலினத்திற்கும் ஏற்றவாறு முழுச்செறிவுடன் இல்லையென்பதே. இரத்தச்சோகை நோயானது இரத்தம் தொடர்பான குறைபாட்டினால் ஏற்படுவதாகும். அதனைச் சரியான நிறையுணவைக் கிரமமாகப் பெற்றுக்கொள்வதன் மூலம் குணப்படுத்த முடியும்.

இரத்தச்சோகை பின்வரும் காரணங்களால் ஏற்படுகிறது.

  1. இரும்புச்சத்துக் குறைபாடு விட்டமின் B12 குறைபாடு, போலேட்/ போலிக் அசிட் ஆகியவற்றின் குறைபாடு, எலும்பு மச்சைக் குறைபாடு போன்ற காரணங்களால்  இரத்தத்தில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி குறைகின்றது.
  2. அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு கொக்கிப் புளுக்களின் தாக்கம், இரத்த இழப்பு ஆகிய காரணங்களால் ஏற்படும் சிவப்பு இரத்த அணுக்களின் மிதமிஞ்சிய இழப்பு.
  3. பல்வேறு சிக்கலான காரணங்களால் சிவப்பு இரத்த அணுக்கள் அழிக்கப்படலாம் அல்லது சிதைவடையலாம். இவை மருத்துவரினால் கண்டறியப்பட வேண்டும்.

நீங்கள் ஒரு இரத்தச்சோகை நோய் உள்ளவரா என்பதை பின்வரும் அறிகுறிகளை ஆராய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம். கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் எனின் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.

பின்வருவனவற்றை நீங்கள் உணர்கின்றீர்களா?

  • சோர்வு அல்லது அதிக தூக்கம் உள்ளதா?
  • படபடப்பு உள்ளதா / இதயம் அதிகமாகத் துடிக்கின்றதா?
  • விரைவாகக் களைப்படைகின்றீர்களா?
  • மூச்சுத் திணறல் உள்ளதா?
  • உணவல்லாத பொருட்களை உண்ண விருப்பம் ஏற்படுகின்றதா?
  • உங்கள் உள்ளங்கை வெளுத்திருக்கின்றதா? வெளிறிய உள்ளங்கை

மருத்துவரினால் முதலில் பூரண இரத்த எண்ணிக்கைப் பரிசோதனை (ஃபுல் புளொட் கவுன்ட்) செய்யப்படும். இதன் முடிவுகளின் அடிப்படையில் சாத்தியமான மேலதிக பரிசோதனைகள் செய்யப்பட்டு, நோய் கண்டுபிடிக்கப்பட்டால் அவர் பின்வரும் சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுமாறு அறிவுரைகளை வழங்குவார்:

  • இரும்புச்சத்து மற்றும் விட்டமின் சேர்க்கைகளை (விட் சீ மற்றும் போலிக் அசிட்) சாப்பாட்டிற்குபின் அல்லது மருத்துவர் குறிப்பிட்டுள்ளவாறு முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இரும்புச்சத்து உங்கள் உடலுக்குள் உறிஞ்சப்படுவது பாதிக்கப்படும் என்பதால் இவ்விட்டமின் சேர்க்கைகளுடன், கல்சியம் மாத்திரைகள், தேநீர் மற்றும் கோப்பி போன்றவற்றை உட்கொள்ளவேண்டாம் என அறிவுறுத்தப்படுவீர்கள்.

ஒரு ஆலோசனையுடன் கூடிய அதிக இரும்புச்சத்துக்கள் அடங்கிய உணவுத் திட்டமென்று வகுக்கப்படும். இரும்புச் சேர்க்கைகளுக்கு முன் பூச்சி மருந்து சிகிச்சை வழங்கப்படும்.

இரத்தச்சோகை நோயைத் தவிர்க்க, உங்கள் சிவப்பு இரத்த அணுக்களில் போதுமான அளவு ஹீமோகுளோபினை அதிகரிக்க பின்வரும் உணவு வகைகளை முறையாக உட்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கப்படுகிறது:

  • சிவப்பு இறைச்சி / சூரை, பலயா, கெலவல்லா போன்ற மீன் வகைகள்
  • ஈரல்
  • எண்ணெய்த் தன்மையான மீன்கள்
  • பயறு வகைகள், போஞ்சி, பட்டாணி
  • தானியங்கள் அடங்கிய காலை உணவு
  • கடும் பச்சை காய்கறிகள் - கீரைகள்
  • பருப்பு வகைகள் மற்றும் விதைகள்

குறிப்பு 01: ஈரலில் விட்டமின் ஏ அதிகம் அடங்கியுள்ளது, எனவே கர்ப்ப காலத்தில் இரத்தச்சோகையும் இருப்பின் அதனை தடுக்க நீங்கள் பின்வரும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

  • கருப்பு மற்றும் பச்சை தேநீர்
  • கோப்பி

குறிப்பு 02: சாப்பாட்டிற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்னரும், பின்னரும் தேநீர் அல்லது கோப்பி அருந்துவரைத் தவிர்க்க வேண்டும்.

FaLang translation system by Faboba