இளம் வயதில் எடை அதிகரித்தால் அது ஒரு தர்ம சங்கடமான நிலைமையாக இருக்கும். சில வேளை நீங்கள் அதிகம் சாப்பிடாதவராகவும் இருக்கலாம். அப்படியிருந்தும் உடற்பருமன் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை தெரிந்துகொள்ள, முதலில் உடற்பருமன் பற்றியும் அதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமானதாகும்.

நாம் உடல் திணிவுச் சுட்டியின் (Body Mass Index (BMI) மூலம் எடையை பரிசோதித்து பார்க்கும் போது காலத்திற்கு ஏற்றவாறு எமது வயது, உயரம் மற்றும் பாலினத்திற்கு ஏற்ப எந்தளவு பருமனாக இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள முடிவதுடன், எந்தளவு பருமன் உங்களுக்கு இருக்க வேண்டும் என்பதையும், எந்தளவு கொழுப்பு அதிகப்படியாக இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம். 20 வயதிற்கு உட்பட்டவர்கள் இன்னும் வளரும் நிலையில் இருப்பதால் அவர்களின் நிறை ஒரு நிலையாக இருக்காது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் மூலம் நாம் எமது நிறையை அறிந்து கொள்ள முடிவதுடன் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா அல்லது நிறை அதிகமாக அல்லது குறைவாக இருக்கிறோமா என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

உ தி.சு = நிறை (கி.கி.)
                உயரம் (மீ)2

நீங்கள் பின்வரும் வெப்தளத்திற்கு சென்றும் உங்கள் உடல் திணிவுச் சுட்டியைக் கணிப்பீடு செய்துகொள்ளலாம்: http://www.nhlbi.nih.gov/health/educational/lose_wt/BMI/bmicalc.htm

உடற் பருமன் இரண்டு விதமாக ஏற்படுகிறது. நீங்கள் உங்கள் எடை அதிகரித்துள்ளதை உணர்வீர்களாயின், உங்கள் உடல் நிறை மற்றும் அது எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பின்வரும் குறிப்புகள் மூலம் அறிந்துகொள்வோம்.

சாதாரண பருமன்

இது சாதாரணமாக நீங்கள் அதிகமான கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்வதாலும், குறைவாக உடற்பயிற்சி செய்வதன் காரணமாகவும் உடல் எடை மற்றும் உயரம் அதிகரிக்கலாம். சாதாரண உடற்பருமன் என்பது இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது. அண்மையிலான ஆய்வின்படி கொழும்பில் உள்ள இளம் பருவத்தினர் மத்தியில் மூன்றில் ஒரு பங்கு பேர் அதிக எடை மற்றும் உடற்பருமன் கொண்டவர்களாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நோயியல் உடற்பருமன்

இது பெரும்பாலும் குட்டையானவர்களுக்கே ஏற்படுகிறது. இந் நிலைமை ஹோமோன் பிரச்சினை, மற்றும் மரபணுக் கோளாறு போன்றவற்றுடன் இணைந்து ஏற்படுகின்றது.

உடற்பருமன் உங்கள் முழு உடலையும் பாதிக்கின்றது. இது மனோரீதியாகவும், சமூகப் பிரச்சனையாகவும் தற்போது உருவெடுத்துள்ளது. நாம் இப்பகுதியின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் இது எந்த வயதிலும் ஏற்படலாம் என்பதுடன் இதனால் இளவயதில் ஏற்படும் ஏனைய பிரச்சனைகளையும் சமாளிப்பது கடினமாக இருக்கும். இதில் முக்கிய விடயம் யாதெனில் பல சந்தர்ப்பங்களில் உடற்பருமனை ஆரம்ப கட்டத்தில் சரியான முறையில் கட்டுப்படுத்தலாம் என்பதே. எவ்வாறாயினும் நீங்கள் ஆரம்ப கட்டத்தில் அதை கவனித்து சிகிச்சைப் பெறாவிடின், நீங்கள் கீழ் குறிப்பிட்டிருக்கும் ஏதாவது சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும், அப்பொழுது அது சமூக பிரச்சினைக்கும் அப்பால் சென்று விடும்.

இது இரத்தத்தில் அதிக  கொழுப்பு மற்றும் சர்க்கரை சேர்வதாலும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஒன்று சேர்ந்த உடற்பருமனாகும். (இடுப்பு சுற்றளவு அதிகரித்தல்) இது பக்கவாதம், மாரடைப்பு போன்ற நீண்டகால அபாயகரமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாகும். இப்பிரச்சனைக்கு மருத்துவரீதியாகச் சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

  • உங்கள் உள்ளூர் சுகாதார மருத்துவ அதிகாரி/ மருத்துவர் ஆகியோருடன் கலந்தாலோசியுங்கள். அவர்கள் உங்களுக்கு முழு உடற் பரிசோதனை மற்றும் எடை, உயரம் ஆகியவற்றை அளந்து, உடல் திணிவுச் சுட்டியினைக் (BMI) கணிப்பீடு செய்வார்.
  • நீங்கள் உடற்பருமன் உடையவர் என வைத்தியர் உறுதிப்படுத்தும் பட்சத்தில் தேவையான இரத்த பரிசோதனை கொழுப்பு அளவு, உண்ணாமல் எடுக்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவு, கல்லீரல் நொதி நிலை மற்றும் உடற் பருமன் காரணமாக ஈரலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் பரிசோதனை சில நேரங்களில் செய்யக்கூடும்.

உங்கள் வாழ்க்கை முறையில் அவதானம் செலுத்துவதால் இதைச் செய்ய முடியும். உங்களது வழமையான பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வதால் இதைச் செய்ய முடியும். அது எவ்வாறு உங்களது வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை அறிய பின்வரும் வழிகாட்டியை சற்றுப்பாருங்கள்.

உங்கள் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றுதல்

  • உங்கள் ஒவ்வொரு உணவு வேளையிலும் சமநிறைவான உணவினைத் தெரிவு செய்யுங்கள்.
  • கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை அளவு கொண்ட உணவுகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். (fast food/ junk food)
  • உங்கள் அன்றாட உணவில் நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகரியுங்கள்.
  • தொலைக்காட்சி அல்லது கணினியைப் பார்த்துக்கொண்டு உண்பதற்குப் பதிலாக குடும்பத்துடன் இருந்து உண்ணுங்கள்.
  • உங்களுக்கு வெகுமதியாக உணவுப் பொருட்கள் எதையும் கொடுக்காதீர்கள்.
  • எந்த வகையான சிற்றுண்டியையும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் உண்ணாதீர்கள்.
  • நீங்கள் எடையைக் குறைக்க ஆர்வமுடையவராக இருந்தால், சிறந்த பலாபலன்களைப் பெற உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஒருவரை  சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் உடல் செயற்பாடுகளை அதிகரித்தல்

  • தரப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி நிகழ்ச்சியொன்றில் இணைந்து செயற்பட முயற்சி செய்யுங்கள் - அவ்வாறான ஒன்றை இங்கே நீங்கள் அறிந்துகொள்ளலாம்: www.cpdtrainonline.com
  • வாகனத்தில் பயணம் செய்வதைவிட சாத்தியமான பொழுதெல்லாம் நடந்து செல்லுங்கள்.
  • நீச்சல், சைக்கிளோட்டம் மற்றும் நடனம் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.
FaLang translation system by Faboba