புற்றுநோய் என்றால் என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன்னர், முதலில் எமது உடல் எதனால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வோம்.

எமது உடல் பல மில்லியன் கணக்கான செல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இச் செல்கள்தான் எமது உடலின் கட்டுமானப் பொருட்களாகும். இவை தொடர்ச்சியாக பிரிந்து வித்தியாசமான பணிகளைப் புரிகின்றன. கலப்பிரிவு செயற்பாடானது சரியாக இடம்பெறவில்லையாயின் அசாதாரண  கலங்கள் என்று அழைக்கப்படும் புற்றுநோய் கலங்கள் உடலில் உருவாகத் தொடங்குகின்றன. இப் புற்றுநோய் செல்கள் தொடர்ந்து பிரிவடைவதன் மூலம் பெருகுகின்றன. இவை உங்கள் உடலிலுள்ள சாதாரன கலங்களைச் சுற்றி ஆக்கிரமிக்கின்றன. இவை தொடர்ந்து வளர்ச்சியடையும்போது உங்கள் இரத்த நாளங்களுக்குள்ளும் பிரவேசிக்கின்றன. அதேபோல் அவை உங்கள் உள்ளுறுப்புகளான நுரையீரல், எலும்புகள், ஈரல், மூளை மற்றும் மேலும் பல பாகங்களுக்கும் பரவுகின்றன. ஒரு தடவை அவை ஒரு உறுப்பை அடைந்ததும், தம்மைப்போன்ற 'செகன்டரீஸ்' என அழைக்கப்படும் புற்றுநோய் கலங்களை உருவாக்க ஆரம்பிக்கின்றன.

இலங்கை தேசிய புற்றுநோய் பதிவகத்தில் வருடமொன்றிற்கு 17,000 பேருக்கு புற்றுநோய் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் ஏற்பட்ட இலங்கையர் மத்தியில் மிகப் பொதுவான புற்றுநோய்களான வாய்ப்புற்றுநோய், கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் போன்றவற்றுக்கு அடுத்தபடியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.

என்றாலும் பல சந்தர்ப்பங்களில் புற்றுநோய்கள் வயது வந்தவர்களுக்கே அதிகம் ஏற்படுகின்றது. சில நேரங்களில் பருவ வயதினருக்கும் புற்றுநோய் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பல நிரூபிக்கப்பட்ட புற்றுநோய்களுக்கான ஆபத்துக்காரணிகள் வளரிளம் பருவத்திலேயே ஆரம்பிக்கின்றது. எனவே நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்கனவே ஆரம்பித்திருக்காவிடில் இப்போதே அதை ஆரம்பிப்பது மிக முக்கியமானதாகும்.

மேலதிக விபரங்களை பின்வரும் இணையத்தளத்தில் நீங்கள் பெறலாம் : National Cancer Control programme

புற்றுநோயை கண்டுபிடிக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதன் மூலம் புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டுபிடித்துவிடலாம். முன்கூட்டியே புற்றுநோயை கண்டு பிடித்தால் சரியான மருத்துவ முறைகளை கையாள்வதுடன், சரியான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம், முறையான சிகிச்சையளித்து குணப்படுத்துவது சாத்தியமாகும்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கிறது. இவ்வாழ்க்கை முறை பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது:

  • ஆரோக்கியமற்ற உணவுகள் - இவ்வுணவுகளில் அதிக மிருகக் கொழும்பும் குறைந்தளவான பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கியுள்ளன.
  • உடல் ரீதியான செயற்பாட்டுக் குறைவு
  • உடற்பருமன்
  • புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்
  • வெற்றிலை சாப்பிடுவது (புகையிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்புடன்) வாய்ப் புற்றுநோய் வரும் ஆபத்தை அதிரிக்கின்றன.

இதற்கு மேலதிகமாக முறைகேடான, ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, அத்துடன் புற்றுநோய் பரம்பரை வழியாகவும் ஏற்படுகின்றது. அதாவது உங்கள் குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பின், உங்களுக்கும் அந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அக்கறையோடு செயற்பட்டால் பல சந்தர்ப்பங்களில் உங்களுக்குப் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம். பின்வரும் விதிகளை பின்பற்றினால் புற்றுநோய்க்கான ஆபத்துக் காரணிகளை இன்றே குறைக்கலாம்.

ஆரோக்கியமாக உண்ணுங்கள்

  • காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் உண்ணுங்கள் (ஒரு நாளில் ஐந்து முறை உண்ணுங்கள்)
  • சிவப்பு இறைச்சி சாப்பிடுவதைக் குறையுங்கள்.
  • பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளான சொசேஜஸ், பேகொன், ஹாம் போன்றவற்றை குறையுங்கள் அல்லது தவிருங்கள்.

உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்

  • மிதமான உடற்செயற்பாடுகளை நாளொன்றுக்கு 30 நிமிடங்களாவது மேற்கொள்ளுங்கள்.
  • சிறந்த உடல் எடையை பேணுங்கள்.
  • புகைக்காதீர்கள் அல்லது இன்றே புகைப்பதை நிறுத்துங்கள்.
  • வெற்றிலை மெல்லாதீர்கள். புகையிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றை தவிருங்கள்.
  • மதுவைத் தவிருங்கள்.
  • புற்றுநோய் அறிகுறிகளையிட்டு விழிப்பாக இருங்கள். ஆரம்பத்திலேயே கண்டறியுங்கள்.

வாய்ப் புற்றுநோயைத் தவிர்ப்பது தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணையத்தளத்தில் நீங்கள் பெறலாம்: http://www.nccp.health.gov.lk/index.php/publications/leaflets

மார்பகப் புற்றுநோய் எந்தவொரு பெண்ணுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது பிரதானமாக வயது வந்த பெண்களுக்கு ஏற்படுகிறது. அதேவேளை இளம் பெண்களில் கண்டுபிடிக்கப்படும் மார்பகக் கட்டிகளும் சிலவேளைகளில் புற்றுநோய் கட்டிகளாக இருக்கலாம்.

நீங்கள் 20 வயதிற்கு மேற்பட்டவராயின் உங்கள் மார்பகங்களை மாதத்திற்கு ஒருமுறை ஒழுங்காக பரிசோதனை செய்வது மிக அவசியம். உங்கள் மார்பகத்தை நீங்களாகவே சுய பரிசோதனை செய்துகொள்ளலாம்.

அது தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணையத்தளத்தில் நீங்கள் பெறலாம்:  http://www.nccp.health.gov.lk/index.php/publications/leaflets

நீங்கள் 20 - 40 வயதிற்கு இடைப்பட்டவராயின், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் மார்பகத்தை வைத்தியர், தாதி  அல்லது பொது சுகாதார மருத்துவச்சியின் மூலம் கட்டாயம் பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

சிகிச்சை மற்றும் பரிசோதனையை செய்யக்கூடிய இடங்கள் பற்றிய மேலதிக விபரங்களை பின்வரும் இணையத்தளத்தில் நீங்கள் பெறலாம்: http://www.nccp.health.gov.lk/index.php/publications/leaflets

உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் உள்ள இரத்த உறவினர் எவராவது இருப்பின், உங்களுக்கும் அது ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருந்து ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அதை முழுமையாக குணப்படுத்தலாம்.

  • இப்புற்றுநோய் பெரும்பாலும் Human Papilloma Virus என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகின்றது. இந்த வைரஸ் பாலியல் ரீதியாக (உடலுறவு கொள்வதன் மூலம்) பரவுகிறது. உண்மையில், இத்தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் ஏற்படும் என்று சொல்ல முடியாது. எவ்வாறாயினும், HPV என அழைக்கப்படும் ஊசி மருந்து மூலம் இந்த நோயிலிருந்து குறிப்பிடத்தக்க பாதுகாப்பை நீங்கள் பெறலாம். 3 முறை பெறவேண்டிய இந்த ஊசி மருந்தின் விலை சற்று அதிகமானது. தனியார் துறை மருத்துவமனைகளில் மற்றும் மருந்தககங்களில் இந்த ஊசி மருந்தைப் பெறக்கூடியதாக இருக்கும். அதேவேளை இந்நோய் பாலியல் உறவை இன்னமும் ஆரம்பிக்காத மிக இளம் வயதுப் பெண்களிற்கே இது பொருத்தமானதென்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
  • இது தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணையத்தளத்தில் நீங்கள் பெறலாம்:
  • http://epid.gov.lk/web/images/pdf/Publication/Immunization_Guide_2012.pdf
  • மற்றும்
  • http://www.nccp.health.gov.lk/index.php/publications/leaflets

HPV வைரஸினால் ஏற்படும் தொற்றின் காரணமாக கர்ப்பப்பை வாசலில் உள்ள செல்களில்  மாற்றம் ஏற்படுகின்றது. இதுவே பின்னர் புற்றுநோயாக மாறுகிறது. Pap Smear பரிசோதனையொன்றை மேற்கொள்வதன் மூலம் இம்மாறுதல்களைக் கண்டறியலாம். ஆரம்ப கட்டத்திலேயே அது கண்டுபிடிக்கப்பட்டால், கர்ப்பப்பை வாயில் புற்றுநோயை தவிர்க்கலாம்.

இப் பரிசோதனை பொதுவாக 35 வயதான பெண்களுக்கு மகளிர் சிகிச்சை நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணையத்தளத்தில் நீங்கள் பெறலாம்: http://www.nccp.health.gov.lk/index.php/publications/leaflets

FaLang translation system by Faboba