இளம் வயதினர் என்ற வகையில் ஒவ்வாமை பற்றிய கவலை இல்லாமல் வாழ்வதென்பது கடினமான விடயமாகும். ஒவ்வாமை என்பது சில உணவுப் பொருட்கள் அல்லது தூசு, மகரந்தம் போன்ற பொருட்களினால் உங்கள் உடலின் ஏற்படும் எதிர்வினைச் செயற்பாடே ஒவ்வாமை ஆகும். ஒவ்வாமைப் பொருட்கள் உங்கள் உடலுக்குள் வாய், தோல் அல்லது சுவாசம் மூலமாக உட்செல்கின்றன. ஆஸ்த்மா, ஒவ்வாமை நாசியழற்சி, ஏடோபிக் தோல் நோய் (அரிக்கும் செதில் சொறி), உணவு ஒவ்வாமை மற்றும் பூச்சிகளின் விஷ ஒவ்வாமை ஆகியவையே ஒவ்வாமையால் ஏற்படும் பிரதான நோய்களாகும். ஒவ்வாமையால் அனாபிலக்ஸிஸ் (Anaphylaxis) போன்ற மிகக் குறைந்த அளவிலான உயிர் அச்சுறுத்தல்களே உள்ளன.

உங்களுக்கு குறிப்பிட்ட பொருட்களினால் ஒவ்வாமை ஏற்படுமாயின், உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு அதற்கு எதிராக செயற்படும். இதனால் நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. ஓவ்வாமை என்பது மிகவும் சகஜமான ஒன்றாகும். அது உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்.

ஓவ்வொருவரின் உடல் அமைப்பிற்கு ஏற்ப ஒவ்வாமை பல்வேறு உணவுகளால் ஏற்படுகின்றது. குறிப்பாக பால், கோதுமை, முட்டை, இறால் மற்றும் ஏனைய கடலுணவுகளைக் குறிப்பிடலாம். இவற்றுக்கான எதிர்வினைகள் சற்று கடுமையாக இருக்கும். கொட்டை வகைகளினால் ஏற்படும் ஒவ்வாமை (Nut allergy) பல நாடுகளில் சற்று கடுமையாக இருந்தாலும் இலங்கையில் மிக அபூர்வமாகவே காணப்படுகின்றது. மோசமான ஆஸ்த்மா மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக வீட்டிலுள்ள தூசிப் பூச்சிகள் மற்றும் moulds and pet dander போன்றவை இருக்கின்றன. பூச்சிக்கடியாலும் மக்களுக்கு கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்படலாம்.

உங்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படும்போது உங்கள் உடலில் ஒவ்வாமைக்கு எதிராக எதிர்விளைவு ஏற்படுகின்றது. காரணம் ஒவ்வாமை உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது. எனவே உங்கள் உடல் அதிலிருந்து விடுபட முனைகிறது. ஒவ்வாமைக்கான அறிகுறிகள் ஒவ்வாமையின் தீவிரத்தன்மையைப் பொருத்து வேறுபடுகின்றது.

லேசான ஒவ்வாமை

  • நாக்கு மற்றும் உதடுகளில் அரிப்பு மற்றும் குமட்டல்
  • உடலில் சொறி
  • மூச்சுத்திணறல்
  • தும்மல்
  • இவை அனைத்தும் ஒன்றாக ஏற்படுமாயின் அது கடுமையான ஒவ்வாமையாகும்.

கடுமையான ஒவ்வாமை

  • வாய் அரித்தல்
  • தும்மல்
  • மூச்சடைப்பு
  • வாந்தியைத் தொடர்ந்து சொறிச்சல்
  • வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம்
  • மூச்சுவிடுதலில் சிரமம் மற்றும் சுய நினைவிழத்தல்.

உங்களுக்கு ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்டிருப்பின், முதலில் நீங்கள்  செய்யவேண்டியது அமைதியாக இருப்பதேயாகும், நீங்கள் இறக்கமாட்டீர்கள். உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு விடயத்தை அறிவியுங்கள். நீங்கள் கட்டாயம் சரியான மருந்தை எடுக்கவேண்டும். பதட்டம் அடையவோ, ஓடவோ வேண்டாம் ஏனெனில் உடற்பயிற்சி எதிர்வினையை மோசமாக்கிவிடும். அளவுக்கு அதிகமாக கவலைப்படவேண்டாம். ஏனெனில் ஒவ்வாமைப் பாதிப்பு அதிக நேரம் இருக்காது. ஒருமுறை சரியான மருந்தை எடுத்தால் நீங்கள் ஒரு மணித்தியாலத்திற்குள் வழமைக்கு திரும்பிவிடலாம்.

தீவிரமான ஒவ்வாமையாக இருப்பின் உங்களுக்கு அட்ரினலின் ஊசியொன்று தேவைப்படலாம். 'அன் எபி பென்' இலகுவாக பயன்படுத்தக்கூடிய ஊசியாகும். மக்களுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வாமைக்கு அட்ரினலின் ஊசியை  வழக்கமாக அவர்களுடன் எடுத்துச் செல்லாம். இதை எவரும் சிரிய பயிற்சியின் பின்னர் எளிதாக பயன்படுத்தலாம். அதை கடுமையான ஒவ்வாமையின்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதைப் பயன்படுத்திய பின்னர், வைத்திய உதவியைக் கட்டாயம் பெற வேண்டும்.

ஒவ்வாமையை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை முன்னெச்சரிக்கைகள் மூலம் தவிர்க்கலாம்:

  • நீங்கள் உணவு ஒவ்வாமை உடையவராக இருப்பின் எப்பொழுதும் யாருடனாவது இணைந்து உங்கள் உணவில் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய ஏதாவது இருக்கிறதா என்று பரிசோதித்துப் பாருங்கள். உணவு சமைப்பதற்கு முன்னரே உங்களுக்கு ஒவ்வாமை உள்ள உணவுகளைப் பற்றி அவர்களுக்கு சொல்விடுங்கள். அப்பொழுது அவர்கள் உணவு சமைப்பதில் கவனமாக இருப்பர்.
  • நீங்கள் வீட்டுத் தூசு பூச்சிகள், எனிமல் டன்டர் மற்றும் மகரந்தம் ஆகியவற்றால் ஒவ்வாமை ஏற்படுபவராகவிருந்தால், உங்கள் வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் தலையணைகளை அடிக்கடி மாற்றுங்கள்.
  • உங்களுக்கு விலங்குகளின் கடியில் ஒவ்வாமை இருப்பின் (தேனி, குளவி, எறும்பு முதலியன) வெளியில் செல்லும்போது கவனமாக இருங்கள், உங்களுடன் மருந்துகளையும் எடுத்துச் செல்லுங்கள்.
  • உங்களுக்கு மருந்துகளால் ஒவ்வாமை இருப்பின், உங்கள் வைத்தியருக்கு அவர் சிகிச்சையளிப்பதற்கு முன்னர் அதுபற்றி அறிவித்துவிட வேண்டும்.
  • உங்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்களால் அல்லது துணிகளால் ஒவ்வாமை ஏற்படின் நீங்கள் அவற்றை தேர்ந்தெடுக்கும்போதும், அவற்றை அணியும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
FaLang translation system by Faboba