நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த மாற்றமானது உங்களுக்கு மட்டும் வரும் ஒன்றல்ல. உலகம் முழுவதிலுமுள்ள சகல பெண்களுக்கும் இந்த அனுபவமானது பொதுவான ஒன்றாகும். பருவமடைதல் அல்லது பூப்பெய்தல் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமான நிகழ்வாகும். அத்துடன் சிறுமியொருவர் யுவதியாக மாறிவிட்டார் என்பதற்கான அடையாளமாக அது திகழ்கின்றது.

எனவேதான் சிறுமியொருவர் பருவமடைந்ததும், பெற்றோர்கள் தங்கள் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து மிகப்பெரிய சடங்காக அதைக் கொண்டாடுகிறார்கள். இந்த மாற்றமானது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த மாற்றமானது உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் உங்களை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றது. உங்களை கூச்சமடைய வைக்கும் சுவாரசியமான இந்த மாற்றங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் இன்னும் பூப்பெய்தாவிட்டால் இக் கட்டுரையில் உள்ள விடயங்கள் எதிர்வரும் மாதங்களில் அல்லது வருடங்களில் உங்களுக்கு ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றிய அறிவை உங்களுக்குத் தரும்.

உங்கள் உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றமானது நீங்கள் பருவமடைதலைத் தூண்டுகிறது. உங்கள் உடலானது ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் உங்கள் மூளையானது GNRH எனப்படும் ஒருவகை ஹோர்மோனை சுரப்பதன் மூலம் உங்களை பருவமடையத் தூண்டுகிறது. இது உங்கள் உடலின் உள்ளேயும் வெளியேயும் பல வித மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உடலின் பாலியல் மாற்றங்களான மார்பக வளர்ச்சி, அக்குள் மற்றும் அந்தரங்க உறுப்புக்களில் முடி  வளர்தல் போன்றவை ஏற்படும்.

அத்துடன் கருப்பை, கருப்பைக்குழாய் மற்றும் யோனி என்பன வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. இந்த மாற்றமானது உங்களுக்கு மாதவிடாயை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் உதிரப்போக்கானது 3 அல்லது 4 நாட்களுக்குத் தொடரும். அதிகபட்சமாக 1 கிழமை வரை இருக்கும். இது ஒருவருக்கொருவர் வேறுபடலாம்.

நீங்கள் பருவமடைதலும் அதற்கான வயதும் வேறுபடலாம். எனவே எல்லா சிறுமியர்களும் ஒரே வயதில் பருவமடைவதில்லை.

உங்கள் உணவு, சுற்றுச்சூழல், எடை, உடற்பயிற்சி என்பன நீங்கள் பருவமடைதலில் பெரும் பங்கு செலுத்துகின்றன. நீங்கள் குறிப்பிடும்படியாக எடை குறைந்தவராக இருந்தால் அது உங்கள் பூப்படைதலை தாமதப்படுத்தும்.

இதைத் தொடர்ந்து படிப்பதன் மூலம் பருவமைடதலில் பல்வேறு கட்டங்களையும், இக் காலகட்டத்தில் உங்கள் உடலும், உள்ளமும் எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கின்றது என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பருவமடைதல் பொதுவாக 4 விதமான கால கட்டங்களாகத் நிகழ்கிறது.

  • அட்ரனார்ச்சே (Adrenarche) - இது நீங்கள் பருவமடைதலுக்கான முன் நிகழ்வாகும். இது உங்கள் Adrenal சுரப்பிகள் (சிறுநீரகத்துக்கு மேல் அமைந்துள்ள சிறிய பிரமிட் வடிவிலான சுரப்பிகள்) Androgens எனும் ஹோர்மோனை உற்பத்தி செய்ய தொடங்கும் காலமாகும். அன்ட்ரோஜன்ஸ் ஆனது பின்னர் ஈஸ்ட்ரோஜன் ஆக மாற்றமடையும். முகப்பருக்கள் தோன்றுவதற்கும் இந்த அன்டரோஜன்ஸ் தான் காரணமாகும். உங்கள் முகத்தில் தோன்றும் இந்த பருக்கள் தான் நீங்கள் பருவமடையும் கட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.
  • தெலரார்ச்சே (Thelarche) - உங்கள் மார்பகங்கள் வளர்ச்சியடைய ஆரம்பிப்பது இந்த காலகட்டத்தில்தான். இந்த உடல்நிலை மாற்றம் தான் ஒரு பெண் பருவமடையப்போகிறார் என்பதை காட்டும் முதலாவது கண்ணுக்கு தெரியும் மாற்றமாகும். இந்த காலகட்டத்தை தான் Thelarehe என்று அழைக்கின்றோம்.
  • பியூபார்ச்சே (Piuparche)  - பருவமடைதலின் மூன்றாம் கட்டம் தான் இது. அக்குள் மற்றும் அந்தரங்க பகுதிகளில் முடி வளர்வதை இக்கால கட்டத்தில் அவதானிக்கலாம்.
  • மெனார்ச்சே (Menarche) - முதலாவது மாதவிலக்கு Menarche என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. உங்கள் உடலில் பல விதமான ரசாயன மாற்றங்கள் நிகழ்வதால் விசேடமாக ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் இந்த மாதவிலக்கு ஏற்படுகிறது. முதன் முதலாக ஏற்படும் மாதவிலக்கானது சிறிதளவு இரத்தப்போக்கு அல்லது அதிகளவு இரத்தப்போக்கு என்று ஒழுங்கற்ற முறையில் இருக்கும். இந்த ஒழுங்கற்ற தன்மையானது உங்கள் உடலில் ஹோர்மோன் மாற்றங்கள் சரியான முறையில் செயற்படத் தொடங்கும் வரை தொடரலாம். இது ஒரு வருடம் வரை அல்லது அதற்கு மேலாகவும் தொடரலாம்..

உள் உறுப்புகள்

பெண்களின் பிறப்புற்பத்தி அமைப்பு முறையானது உள்ளுறுப்புகள் மற்றும் வெளியுறுப்பு என இரண்டு வகையாக அமைந்துள்ளன. உள்ளுறுப்புக்களான கருப்பை, பலோப்பியன் குழாய்கள், கருப்பைக் குழாய்கள் மற்றும் யோனிக்குழாய் என்பனவாகும்.

கருப்பை

கருப்பை தான் பெண்களின் பிரதான பிறப்புற்பத்தி சாதனமாகும். இது பேரிக்காய் வடிவிலான தசைப்பற்றுள்ள ஓர் உறுப்பாகும். கர்ப்பமடையும் பொழுது இது விரிவடைகிறது. கருவானது உற்பத்தியானதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை அதனைக் கருப்பைதான் பாதுகாக்கின்றது. பலோப்பியன் குழாய் கருப்பை வாசலில் இருபுறமும் அமைந்துள்ளது. கருப்பையின் உட்புற சுவர் மாதவிலக்கை ஏற்படுத்துவதில் பிரதான பங்கு வகிக்கின்றது. தசைப்பற்றுள்ள கருப்பை சுவர் Myometrium என அழைக்கப்படுகிறது. கருப்பை ஒவ்வொரு மாதமும் உற்பத்தியாக்கும் கருமுட்டை வளமற்றதாக இருக்கும்போது அவை இரத்தத்துடன் வெளியாகின்றன. இது தான் மாதவிலக்கு என அழைக்கப்படுகிறது.

சினைப்பை

இரண்டு சினைப்பைகள் இடுப்பு வளையத்தினுள் இருபுறமும் அமைந்துள்ளன. சினைப்பைகள் சேமித்து வைத்துள்ள முட்டைகள் அண்டவிடுப்பின் ஊடாக கருப்பையை அடைகின்றன. உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டேரன் ஹோர்மோன்கள் உற்பத்தியாவதற்கும் இந்த சினைப்பைகள் காரணமாக இருக்கின்றன.

பலோப்பியன் குழாய்கள்

நீண்ட வளைவு நெளிவுமிக்க இந்த குழாய்கள் ஒருபுறம் கருப்பையுடன் இணைந்துள்ளதுடன் மறுபுறம் திறந்த நிலையில் உள்ளது. திறந்த பகுதியில் விரல் போன்ற உருவமைப்பை கொண்ட விளிம்பில் மயிரிழைகளுடன்கூடிய உறுப்பு அமைந்துள்ளது. இது உற்பத்தியாகியுள்ள கருமுட்டைகளை கருப்பைக்குழாய்க்குள் தள்ளுகிறது. அதாவது கருப்பைக் குழாய் இதனை கருப்பைக்குள் இடமாற்றுகின்றது.

குறிப்பு - வளமிக்க பெண் கருமுட்டைகள் பலோப்பியன் குழாயில் ஆண் விந்துக்களுடன் ஒன்று சேர்கின்றன. அங்கு கருக்கட்டிய முட்டைகள் கருப்பைக்குக்  கொண்டுசெல்லப்பட்டு அங்கே குழந்தையாக வளர்ச்சியடைகின்றது.

யோனிக்குழாய்

தசை நார்களால் ஆன யோனிக்குழாய் உடலின் வெளிப்பகுதியில் இருந்து கருப்பையின் கழுத்துப் பகுதி வரை அமைந்துள்ளது. இது பொதுவாக யோனி/ பிறப்புறுப்பு அல்லது பிறப்புக் கால்வாய் என அழைக்கப்படுகிறது.

கருப்பைக் கழுத்து

கூம்பு வடிவிலான கருப்பையின் கழுத்து பகுதியானது யோனிக்குழாய்க்குள் முன் பிதுங்கிய நிலையில் இருக்கும். விந்தணுக்கள் கருப்பைக் கழுத்துப் பகுதியூடாக கருப்பையை சென்றடைகின்றது.

வெளி உறுப்புகள்

பிறப்புறுப்பு அல்லது யோனிவாய் என்பது பெண்களின் வெளிப்புற அங்கமாகும். இது பின்வரும் பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

பெரிய இதழ்கள்

இதனைப் பெண் குறியின் இதழ்கள் என்று கூறுவார்கள். பெண்குறியின் இருபுறமும் இவை பெரிய இதழ்கள் போன்று மடிப்புக்களை கொண்டிருக்கும். இது யோனிக்குழாயின் முன் பகுதியில் தொடங்கி அதன் பின் பகுதி வரை இருக்கும். இதன் வெளிப்புறமாக மடிப்பு கடுமையான வர்ணத்துடனும் அடர்ந்த உரோமங்களைக் கொண்டதாகவும் இருக்கும். இதன் உட்புற மடிப்பானது மிருதுவானதாக இருக்கும்.

சிறிய இதழ்கள்

பெண்குறியின் பெரிய இதழ்களுக்குள்ளே இருக்கும் சிறிய இரண்டு இதழ்களை லாபியா மினோரா என்று அழைப்பார்கள். இது யோனிக்குழாய் மற்றும் சிறுநீர்க்குழாய் என்பவற்றின் வாயில்களைப் பாதுகாக்கின்றது.

சிறுநீர்க்குழாய் வாசல்

சிறுநீர்க்குழாய் வாசலானது பெண்குறியின் மேல் பகுதியின் இருக்கும் சிறு முத்துப்போன்ற (கிளிடோரிஸ்) பகுதிக்குக் கீழேயும், யோனி வாசலுக்கு மேலேயும் உள்ள இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மிகச் சிறிய வாசலாகும். இது சிறுநீர்ப்பையுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் சிறுநீர் வெளியேறுவதையும் எளிதாக்குகின்றது.

யோனி வாசல்

யோனி வாசலை வெளிப்படையாகத் தெரியாதபடி Labia எனப்படும் பெண் குறியின் இதழ்கள் பாதுகாக்கின்றன. பெண்குறியானது கருப்பையை வெளியுலகுடன் இணைக்கிறது. யோனி வாசலானது மெல்லிய திசுக்களால் ஆன Hymen என அழைக்கப்படும் ஒருவகை  மெல்லிய சவ்வினால் மூடப்பட்டுள்ளது. இது முதன் முதலாக பாலுறவில் ஈடுபடும்போது சேதமாக்கப்படுகிறது. இதனால் சிறிதளவு இரத்தக்கசிவு ஏற்படலாம்.

மகளிர் கந்து அல்லது கிளிடோரிஸ்

கிளிடோரிஸ் என்பது பெண்குறியின் மேல் முனையில் இருக்கும் மெல்லிய சவ்வினால் ஆன ஒரு முத்துப் போன்ற பகுதியாகும். இது புறத்தூண்டுதலுக்குரிய மிகவும் கிளர்ச்சியூட்டும் ஒரு அங்கமாகும்.

மாதவிலக்கு என்பது மாதந்தோறும் உங்கள் உடலில் நிகழ்கிற சுழற்சி முறையிலான தொடர் நிகழ்வாகும். இது உடலில் நிகழ்வதன் மூலம் உங்களை கருக்கட்டலுக்கு தயார்படுத்துகின்றது. ஒவ்வொரு மாதமும் கருமுட்டைகள் அண்ட விடுப்பின் ஊடாக உங்கள் கருப்பையை அடைகிறன. அதேவேளை உடலில் நிகழும் ஹோர்மோன் மாற்றமானது உங்கள் கருப்பையை கருக்கட்டலுக்குத் தயார் நிலைக்கு கொண்டு வருகிறது. விந்தணுவும், கருமுட்டையும் வீரியம் இல்லாத நிலையில் இருந்தால் கருப்பை சுவரானது அவற்றை யோனிக் குழாய் வழியாக வெளியேற்றுகிறது. இதையே நாம் மாதவிலக்கு என்று அழைக்கின்றோம். கருப்பைச் சுவர்கள் ஊட்டச்சத்துக்களினால் பலமுள்ளதாக இருக்குமாயின் உருவாகும் கருமுட்டைகள் வீரியம் மிக்கதாக உருவாகும்.

பெண் பிள்ளை பிறக்கும்பொழுதே எதிர்காலத்தில் கருமுட்டைகளை உருவாக்கக்கூடிய உடல் அமைப்புடன் பிறக்கின்றனர். கருமுட்டைகள், கருப்பையின் உள்ளே இருக்கும் உட்பை அறையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். பெண் வளர்ந்து பருவமடைந்தவுடன் பலவித ஹோர்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களினால் சினை முட்டைகள் முதிர்ச்சியடைகின்றன.

உங்கள் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன் ஆனது உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் பெண்கள் பருவமடைதலையும் தூண்டுகிறது. ஈஸ்ட்ரோஜன் ஆனது கருப்பை சுவர்கள் உறுதியாக வளர்வதற்கும் கர்ப்பப்பை வாசலில் சளி போன்ற பொருள் உற்பத்தியாவதற்கும் உதவுகிறது. கருமுட்டைகள் முதிர்வடையும்பொழுது ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரக்கிறது.

இரத்தத்தில் அளவுக்கதிகமான ஈஸ்ட்ரோஜன் சுரக்கும்பொழுது, உடனடியாக கருக்கட்டல் ஊக்க இயக்கு நீர் எனப்படும் Luteinising ஹோர்மோன்கள் பொங்கியெழுகின்றன. அதனை சுருக்கமாக LH SURGE என்று அழைப்பார்கள். இது கருமுட்டை சுரப்பியிலிருந்து முதிர்வடைந்த கருமுட்டைகள் உருவாகுவதற்கு தூண்டுகின்றது. மாதவிடாயின் நடுப்பகுதியில் அதாவது 14 நாட்களுக்கிடையில் தோன்றும் இக் காலப்பகுதியைக் கருத்தரிக்கும் காலம் என்று அழைப்பர்.

குறிப்பு - பெண் ஒருவர் பருவடைந்த ஆரம்ப காலகட்டத்தில் கருமுட்டைகள் வெளிவரும். ஆனால் இது தொடர்ந்து நிகழ்வதில்லை. மாதவிடாய் கிரமமாக ஏற்படாதவிடத்து கருமுட்டைகள் ஒழுங்காக வெளிவராது. இதைப் பற்றிய மேலதிக விபரங்களை அறிய Menstrual Irregular என்ற  பக்கத்தைப் பாருங்கள்.

கருப்பையிலிருந்து கருமுட்டைகள் வெளிவரும் காலங்களில் அடிவயிற்றில் வலி ஏற்படும். மாதவிடாய் தொடங்கும் காலங்களில் ஏற்படும் வலியானது மிகவும் கடுமையாக இருக்கும். இதனை Menstrual Cramp என்று அழைப்பர்.

வெளியாகும் கருமுட்டைகள் பலோப்பியன் குழாயை அடைகின்றது. இங்கிருந்து இவைகள் சிறிய மயிர்க்கால்கள் ஊடாக கருப்பையை அடைகின்றன. இதனுடன் ஆண் விந்தணுக்கள் ஒன்று சேருமாயின் கருக்கட்டல் நிகழும்.

கருப்பையை அடையும் முன் கருமுட்டையானது பலோப்பியன் குழாயில் சினைப்படுத்தப்பட வேண்டும். சிலவேளை கருக்கட்டலானது கருப்பைக்கு வெளியே நிகழுமாயின் அது கருச்சிதைவை ஏற்படுத்தலாம். இப்படியான சந்தர்ப்பங்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு உயிராபத்தையும் ஏற்படுத்தலாம்.

கருத்தரித்தபின் கருமுட்டைச் சுரப்பியில் உள்ள முட்டைகள் வெடிப்பதால் கருப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றன. அதற்கு சிகிச்சையளிக்கும்போது ஈஸ்ட்ரோஜனும் புரோஜெஸ்ரோனும் சுரக்க தொடங்குகின்றன.

புரோஜெஸ்ட்ரோன் ஹோர்மோன் தான் கருத்தரிப்பதற்கு பிரதான காரணமாக இருக்கிறது. புரோஜெஸ்ட்ரோன் ஆனது கருப்பை சுவரில் சளி போன்றதொரு திரவம் சுரப்பதனை தூண்டுகிறது. இது கருப்பைச் சுவரை பாதுகாக்கின்றது.

FaLang translation system by Faboba