• நீங்கள் பஸ்ஸில் தனியாக பிரயாணம் செய்யும்போது, சாரதிக்கு அருகில் அமருங்கள். அப்பொழுது எவராவது உங்களுக்குத் தொல்லை கொடுப்பின் முறைப்பாடு செய்யலாம்.
  • எப்பொழுதும் நன்கு வெளிச்சமுள்ள, ஜனநடமாட்டமுள்ள பகுதிகளில் நடந்து செல்லுங்கள். குறுகிய வீதிகள், புதர்கள் மிக்க வழிகளில் அல்லது குறுக்குப் பாதைகளில் செல்வதை தவிருங்கள். ஆள் நடமாட்டமற்ற இடங்களில் உள்ள பஸ் நிறுத்துமிடங்கள் மற்றும் வெளிச்சம் குறைவான வீதிகளில் பயணிப்பதைத் தவிர்க்க முயலுங்கள்.
  • நீங்கள் டாக்ஸிகள்,  முச்சக்கர வண்டிகளை எடுக்கும்போது, பாய்ந்து ஏறுவதற்கு முன்னர் அது உண்மையில் கட்டண வண்டிதானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
  • பிரயாணம் செல்ல வண்டியில் ஏறுவதற்கு முன்னர் எவ்வளவு கட்டணம் என்பதைக் கேட்டுக்கொள்ளுங்கள். அப்போது உங்களிடம் போதுமான பணம் உள்ளதா என்பதையும் பரிசோதித்துக்கொள்ளுங்கள். உங்களிடம் பணம் இல்லாவிட்டால் அவர்களிடம் உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி சொல்லுங்கள் அப்பொழுது உங்களுக்கு அங்கு சென்று பணத்தை யாரிடமாவது வாங்கிக் கொடுத்துவிடலாம்.
  • எப்பொழுதும் வீட்டிலிருந்து செல்லும்போது உங்களிடம் தேவையான பணம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
  • மது அருந்தியிருக்கும் ஒருவரிடம் லிப்ட் கேட்காதீர்கள்.
  • நீங்கள் நன்கு அறியாத நபர்களிடம் லிப்ட் கேட்காதீர்கள்.
  • வீதியில் நடக்கும்போது வாகனம் வரும் திசைக்கு எதிர் திசையாக நடக்கவும். இரவு நேரத்தில் தனியாக நடக்காதீர்கள். உங்களுக்கு வீடு செல்ல வழி இல்லாவிடின் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு விடுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். 
  • உங்களை யாராவது பின்தொடர்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தீர்களாயின், அருகிலுள்ள வெளிச்சம் நிறைந்த மற்றும் மக்கள் நடமாட்டமுள்ள இடத்தை அடைந்துவிடுங்கள்.
  • முகவரி கேட்பதற்காக கார் ஒன்று உங்கள் அருகில் நிறுத்தப்படுமாயின் அதை நெருங்காதீர்கள். உங்களை காருக்குள் இழுத்துப்போட முடியாதவாறு பாதுகாப்பான தூரத்திலிருந்து அதற்குப் பதிலளியுங்கள்.
  • எப்போதும் விழிப்பாக இருங்கள். உங்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பளியுங்கள். வித்தியாசமாக எதையாவது பார்ப்பீர்களாயின் அல்லது கேட்பீர்களாயின் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள துரிதமாகச் செயற்படுங்கள்.
  • போதை மருந்துகளுடன் ஒருபோதும் தொடர்புபட வேண்டாம். நீங்கள் பிடிபடுவீர்களாயின் மிகப்பெரிய தொகையை தண்டப்பணமாக செலுத்தவேண்டி வரலாம், நீண்டகால சிறை தண்டனை மற்றும் மரண தண்டனையும் கூட விதிக்கப்படலாம்.
  • இன்னும் ஒருவருடைய பொருளை சுங்கப்பரிசோதனையூடாகக் கொண்டு செல்வதற்கு ஒப்புக்கொள்ளாதீர்கள், உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மூலமாக சட்ட விரோத கடத்தல் மேற்கொள்ளப்படலாம்.
  • நீங்கள் விஜயம் செய்யும் நாடுகளின் உள்ளூர் சட்டதிட்டம் தொடர்பாக விழிப்பாக இருங்கள். உதாரணமாக சில நாடுகளில் மது அருந்துவது சட்ட விரோதச் செயலாகும்.
  • உள்ளுர் சட்டதிட்டங்களை மதித்து உடையலங்காரம் செய்யுங்கள்.
  • பயணிகள் காசோலைகள் மற்றும் பணத்தை வங்கிகளில் மற்றும் அதிகாரம் பெற்ற வெளிநாட்டு நாணயமாற்று அலுவலகங்களில் மாற்றுங்கள்.
  • யாருமில்லாத இடங்களில் விசேடமாக விமான நிலையங்களில், ரயில் நிலையங்களில் அல்லது பஸ் நிறுத்தங்களில் ஒருபோதும் உங்கள் பொதிகளை விட்டுச் செல்லாதீர்கள்.
  • உங்கள் பொருட்கள் ஏதாவது களவாடப்பட்டிருப்பின் உடனடியாக உள்ளுர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள்.
  • தொலைபேசி அல்லது ஈமெயில் மூலமாக நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எப்பொழுது திரும்ப உத்தேசம், உங்கள் திட்டத்தில் ஏதாவது மாற்றம் செய்துள்ளீர்களா என்பதை தெரிவியுங்கள்.
  • நீங்கள் இரவு நேரத்தில் ஒரு புதிய நாட்டை அல்லது நகரத்தை அடைந்திருப்பீர்களாயின், விமான நிலையத்தில் இருந்தவாறு போக்குவரத்தை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். தங்குமிட ஏற்பாடுகளை இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் செய்துகொள்வதே சிறந்தது.
  • நீங்கள் செல்லவேண்டிய இடத்தைத் தெரிந்திருந்தும் பாதை தவறியிருப்பீர்களாயின் கடையொன்றிற்குள் சென்று அல்லது வாசற்படியில் இருந்தவாறு (Map) வழிகாட்டிக் கையேட்டைப் பாருங்கள்.
  • ஆபத்துக்கள் தொடர்பில் விழிப்பாக இருங்கள். எப்பொழுதும் குறைந்தளவான பணத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
  • பிரயாணத்தின்போது ஏற்படக்கூடிய சுகாதார பாதிப்புகள் மற்றும் நோய்கள் பற்றி அறிந்துகொள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள, இலங்கையின் தொற்றுநோய்ப்பிரிவு இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள்:
  • http://www.epid.gov.lk/web/index.phpoption=com_content&view=article&id=146&Itemid=459&lang=en
FaLang translation system by Faboba