உங்கள் இருதயம் ஒரு தசைக் குழாயாகும். அதில் 4 அறைகள் உள்ளன. இரண்டு அறைகள் இதயத்தின் இடது பக்கத்திலும், இரண்டு அறைகள் வலது பக்கத்திலும் அமைந்துள்ளன. வலது பக்கம் உள்ள அறைகள் உடலின் ஏனைய உறுப்புக்களிலுமிருந்து பிராணவாயு நிரப்பப்பட்ட இரத்தத்தை பெற்றுக்கொள்கின்றது. அதே வேளை இடது பக்க அறைகள் உங்கள் நுரையீரலில் இருந்து மீள் பிராணவாயு நிரப்பப்பட்ட இரத்தத்தை பெற்றுக்கொள்கின்றது.

உங்கள் இருதயம் வழக்கமாக ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 தடவைகள் துடிக்கின்றன. ஆனால் தேவையேற்படும்போது அதைவிட அதிக வேகத்துடன் துடிக்கும். அத்துடன் ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும், ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளுக்கும் மேல், உங்கள் வாழ்க்கையில் ஏறத்தாழ 2.5 பில்லியன் தடவைகள் உங்கள் இருதயம் துடிக்கின்றது.

இது இருதயத் தசைகள் செய்யும் மிகப் பெரிய வேலையாகும். எனவே அதன் முக்கியத்துவத்தை அறிந்து நமது இருதயத்தை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.

உங்களுக்குத் தெரியுமா? இருதயம் உடலிலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டு உங்கள் உடலின் தேவைக்கேற்ப குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இரத்தத்தை பம்ப் பண்ணுவதற்கு அறிவித்தல் விடுக்கின்றது. உதாரணமாக, நீங்கள் உறங்கும்போது அதன் ஓய்வுக்கேற்ற வகையில் போதுமானளவு பிராணவாயுவை பம்ப் பண்ணுகின்றது. நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது அல்லது வேலை செய்யும்போது உங்கள் உடலின் தேவைக்கேற்ப மேலதிக பிராணவாயுவை வழங்குவதற்காக மிக வேகமாக இரத்தத்தைப் பம்ப் பண்ணுகின்றது.

படம்: இரத்த மேலாண்மைக்கு உதவும் வால்வுகள்

இருதயம் தொடர்பான பல்வேறு நோய்கள், பிரச்சினைகள் பற்றி இங்கே பார்ப்போம்:

கொன்ஜெனிடல் சயனோடிக் இருதய நோய் / கொம்ப்ளெக்ஸ் கொன்ஜெனிடல் இருதய நோய்

இந்த நோய்க்கு உட்பட்டிருப்பவரின் உடல் நீல நிறமாக மாறும். இந்நோய் பொதுவாக குழந்தைப்பருவத்திலேயே கண்டறியப்படும். இந்நிலைமையை சீராக்க நோயாளிக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியும் ஏற்படலாம்.

இருதய வால்வு நோய்

இருதய வால்வு நோய்க்கான ஒரு உதாரணமாக வாதக் காய்ச்சலைக் குறிப்பிடலாம். உங்கள் தொண்டையில் தொடர்ச்சியாக தொண்டைப்புண் காணப்பட்டால் உங்களது இருதய வால்வுகள் தடிப்படைவதுடன் தடைப்படுதலும் ஏற்படுகிறது. உங்கள் வாயைத் திறப்பதற்கும் கடினமாக இருக்கும். உங்கள் நான்கு இதய வால்வுகளும் பாதிக்கப்பட்டால் மிட்ரல் ஸ்டெனோசிஸ் (Mitral Stenosis - MS) தொடர்பான வால்வு பாதிக்கப்படும். இதன்போது மிட்ரல் வால்வு அல்லது மிட்ரல் ரெகுர்கிடேசன் (Mitral Regurgitation - MR) என்பனவை சுருக்கமடைந்து, தடைப்பட்ட வால்வில் கசிவும் ஏற்படுகிறது.

கொன்ஜென்டியல் வல்வுலர் கண்டிஷன்ஸ் / மிட்ரல் வால்வு புரோலோஸ் (Congential Valvular Conditions/Mitral valve prolapse)

மிட்ரல் (Mitral) வால்வுகளில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இந்நோய் நிலைமையின் போது, இவ்விரண்டு பிரிவுகளினதும் வித்தியாசமான செயற்பாட்டால் ஒரு வகையான ஓசை வருவதை இதயத் துடிப்பைக் கண்டறியும் கருவியின் மூலம் (Stethescope) அறிந்துகொள்ளலாம். பிரச்சினைகளுக்கேற்ப மிட்ரல் வால்வு புரோலோஸின் (MVP) தீவிரம் மாறுபடுவதுடன், இதன் மூலம் தீங்குகள் குறைவாகவும் இருக்கலாம்.

இருதயத்தில் ஓட்டை

இந்நிலைமையின்போது நோயாளியின் இதயத்திலிருந்து மர்மர் (Murmur) என அழைக்கப்படும் ஒரு வகையான ஒலி கேட்கும். இதை மருத்துவர் கண்டறிவார்.

அரித்மியா

இருதயம் துடிக்கும் விதம் வழமைக்கு மாறாக மாறுபடும் சாத்தியம் உண்டு. அது சாதாரண நிலைமையைவிட மெதுவாக, வேகமாக அல்லது ஒழுங்கற்ற விதமாக இருக்கலாம். விசேடமாக இரவில் ஓய்வில் இருக்கும்போது, வழமையான லயத்துடன் கூடிய துடிப்புக்கு பதிலாக இருதயம் ஒழுங்கற்ற விதத்தில் துடிக்கும். இதன்போது தொண்டையில் வீக்கம் போன்ற உணர்வு ஏற்படும். இந்நிலைமை நோயாளி தைரொய்ட் பிரச்சினைகளுடன் ஆஸ்த்துமாவுக்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் பொழுதும், கோலா அல்லது கோப்பி கலந்த பானங்களை அருந்துவதாலும் ஏற்படலாம். சுப்ரா வென்டிரிகுலர் சுப்ரா வென்டிரிகுலர் டச்சிகாடியா SVT (Supra ventricular tachycardia) என்றழைக்கப்படும் மற்றுமொரு நிலையின்போது இதயத்துடிப்பைத் தவிற மேலதிக துடிப்புகள் தொடர் வரிசையில் கேட்கும். உடல்ரீதியாக ஆரோக்கியமாக உள்ளவர்களினதும், மெய்வல்லுநர்களினதும் இதயத்துடிப்பு சற்று மெதுவாக இருக்கலாம். மிக மெதுவான மற்றும் மிக வேகமான இதயத்துடிப்பானது இருதயம் இரத்தத்தை பம்ப் செய்வதில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதனால் மூளைக்கான இரத்த விநியோகம் குறைவடைந்து தலைச்சுற்று அல்லது மயக்கம் ஏற்படலாம்.

கொரொநோரி குருதிக்குழாய் நோய்

உங்கள் கொரொநோரி குறுதிக்குழாய் இருதயத்திற்கு இரத்தத்தை விநியோகிக்கின்றது. அது ஏனைய உடற்பகுதிகளின் சீரான இயக்கத்திற்கு அத்தியாவசியமாகும். உங்கள் குறுதிக் குழாய்களில் ஏதாவது தடை ஏற்படின், உங்களுக்கு கடுமையான வலியுடனான Angina/MI (Myocardial Infarction) என்றழைக்கப்படும் நிலை ஏற்படும். குறுதிக்குழாய்களில் கொலஸ்ட்ரோல் படிவதாலேயே இவ்வடைப்பு ஏற்படுகின்றது. கொலஸ்ட்ரோல் உருவாக தீய பழக்க வழக்கங்களான புகைப்பிடித்தல், கொழுப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்ணுதல், குறைவான உடற் பயிற்சி, மன அழுத்தம் அத்துடன் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது குடும்ப வரலாற்றில் இருதயநோய் இருந்தமை போன்றவை காரணங்களாக அமைகின்றன. மிக அரியதான சந்தர்ப்பங்களில் மட்டுமே இரத்த குழாய்களில் பிறப்பிலேயே ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக சிக்கல்கள் தோன்றலாம்.

கார்டியோமையோபதி

இது பரம்பரையாக ஏற்படும் ஒரு நோய் ஆகும். அதாவது உங்கள் குடும்ப வரலாற்றில் இந்நோய் இருப்பின் உங்களுக்கும் ஏற்படும் சாத்தியம் உள்ளது. எனினும் சில பிரச்சினைகளில் அசாதாரணமாக இதயத் தசைகளின் திண்மம் அதிகரித்து இதயத்தின் இடையிலான உற்குழிவுக்கு தடையை ஏற்படுத்துகிறது. உங்கள் இருதயத் தசை மெலிதாவதனால் இதயம் வீக்கமடைந்து பம்பிங் நடவடிக்கை குறைவடைவதல், மூச்சு விடுதலில் சிரமம், கடின உழைப்பின்போது ஏற்படும் மூச்சு விடுதலில் சிரமம், இவற்றை எக்கோ ஸ்கேன் அல்லது (Echo Scan or E.C.G.) பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். இவ்வாறான உடல் நிலையுள்ளவர்கள் கடினமான உடற்பயிற்சி மற்றும் கடினமான வேலைகளில் ஈடுபடுவதால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணத்திற்கும் காரணமாக அமையலாம்.

நெஞ்சுவலி

இளம் வயதினருக்கு பெரும்பாலும் இது ஏற்படுவதில்லை. அதற்குப் பதிலாக உங்களுக்கு நெஞ்சுவலி அல்லாத இடது கை வலி அல்லது வலது கை வலி போன்றவைகள் ஏற்படலாம். அந்த வலி உங்கள் கைகளை வளைக்கும் பொழுதோ, மூச்சு விடும்பொழுதோ அதிகரிக்கலாம். மாரடைப்பு ஏற்படுமானால் நீங்கள் நடக்கும்பொழுது அல்லது படியில் ஏறும்பொழுது நெஞ்சுவலி ஏற்படும். பெரும்பாலும் மார்பின் நடுப்பகுதி அல்லது கீழ்ப்பகுதியில் ஏப்பத்துடன் சேர்ந்து அந்த வலி ஏற்படும். அது நீங்கள் படுத்திருக்கும்பொழுது அதிகரிக்கும். வாயுத்தொல்லை அல்லது அமிலத்தன்மை போன்ற உணர்வுகள் ஏற்படும். அது நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் பொழுது அல்லது தவறான பழக்க வழக்கங்களான பெப்பர் மின்ட் சாப்பிடுவது அல்லது கார்பனேட்டட் ஊட்டப்பட்ட குளிர்பானங்களை அருந்தும் பொழுது நிலமை மிக மோசமாவிடும்.

படபடப்பு

இது எரித்மியா (Arrhythmia) நோய் நிலையின்போது ஏற்படும் பொதுவான அறிகுறியையும், அவ்வப்போது ஏற்படும் மேலதிக இதயத் துடிப்பையும் குறிக்கும். இது அதிகமான caffeine அடங்கிய உணவுப் பொருட்களை உண்பதாலும், கவலை, ஆஸ்த்துமாவுக்கான சிகிச்சை மற்றும் தைரொய்ட் கோளாறு என்பவற்றால் ஏற்படும்.

மீண்டும் மீண்டும் நிகழும் வேகமான இதயத் துடிப்பு

உங்களுக்கு அதிக வியர்வையுடன் படபடப்பு, மயக்கம் உண்டாதல், மற்றும் திடீரென இதயத்துடிப்பின் வேகம் குறைதல் போன்ற அறிகுறிகளில் ஏதாவதொன்று அல்லது அனைத்தும் காணப்படின் உடனடியாக மருத்துவர் ஒருவரைப் பார்ப்பது நல்லது. வெசோ வேகல் அட்டாக் (Vaso Vagal Attack) என அழைக்கப்படும் மற்றுமொரு நிலையான, நீண்ட காலம் தொடரும் இருதய வேகம் கடுமையாக குறைவதன் காரணமாக அது உங்களை முழுமையாக இருட்டடிப்பு நிலைக்கு தள்ளிவிடும். அதாவது உங்கள் கண்கள் திடீரென இருண்டுபோய் மீண்டும் பார்வை வரும் நிலையைக் குறிக்கும்.

மூச்சு விடுதலில் சிரமம்

உங்களுக்கு திடீர் மூச்சுத்திணரல் உணர்வு அல்லது மூச்சுவிடுதலில் சிரமம் ஏற்படின் அதை டைஸ்பொனியா (Dyspnoea) என்று அழைப்பர். இது நீங்கள் கடுமையாக விளையாடும்போது, வேகமாக நடக்கும்போது, படிகளில் ஏறும்போது அல்லது திடீர் ஆஸ்த்மா நோய்த் தாக்கம் காரணமாக ஏற்படலாம்.

அண்மைக்காலமாக இளவயதினர் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும்பொழுது திடீர் மரணங்கள் ஏற்படுவதைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம். இது ஒரு மோசமான பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த மரணங்களுக்கு தங்கள் இருதய நிலை பற்றி அவர்கள் அறியாமல் இருந்ததே முக்கிய காரணமாகும். எனவே இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபடுத்துவதற்கு முன்னர் தகுந்த மருத்துவ பரிசோதனைகளைச் செய்து அவர்களின் இருதய ஆரோக்கியத்தை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் தேசிய வழிகாட்டல் செயற்பாட்டுக்கமைய, பிள்ளைகள் விளையாட்டில் ஈடுபடுவதற்கு முன்னர் தகுந்த மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.

FaLang translation system by Faboba