வயதானவர்களிடம் தைரொயிட் பிரச்சினைகள் இருப்பதை நாம் அடிக்கடி காண்கிறோம், ஆனால் அது இளம் வயதினரையும் பாதிக்கும் என்பதை நாம் உணர்வதில்லை. எனவே இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு உண்மையான அச்சுறுத்தலாகும். அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

தைரொயிட் ஒரு சிறிய சுரப்பியாகும். உங்கள் கழுத்தின் முன்புறம் கீழ் பகுதியில் அது அமைந்துள்ளது. நீங்கள் மிகவும் மெலிந்தவராக இருந்தால் மட்டுமே இச்சுரப்பி சற்றுத் தென்படும். தைரொயிட் சுரப்பியினால் தைரொக்ஸின் ஹோமோன் சுரக்கப்படுகிறது. இது உடலின் பல உறுப்புக்களை சரியாக இயங்க வைப்பதற்குத் தேவையான ஒரு இரசாயனப் பொருளாகும்.  

தைரொயிட் சுரப்பியினால் மிகக் குறைவாக அல்லது மிக அதிகமாக தைரொக்ஸின் உற்பத்தி செய்யப்படும்போது உங்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தைரொயிட் கோளாறின்போது தைரொயிட் சுரப்பி பெரிதாகத் தோற்றமளிக்கும். அதிகமாக அல்லது சாதாரண தைரொக்ஸின் அளவிலும் கூட,  விசேடமாக உங்கள் திடீர் வளர்ச்சியின்போது கூட தைரொயிட் சுரப்பி பெரிதாகலாம். எனவே நீங்கள் எதிர்காலத்தில் ஆரோக்கியமாக வாழ தைரொயிட் நோய் பற்றி நன்கு அறிந்துகொள்வது அவசியமானதாகும்.

இளம் வயதினரைப் பாதிக்கக்கூடிய பல்வேறு வகையான தைரொயிட் கோளாறுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

இது உங்கள் உடலில் தைரொக்ஸின் குறைவாக இருக்கும்போது ஏற்படும் ஒரு நிலையாகும். நீங்கள் பிறந்தபொழுது இப்பிரச்சினை (Congenital Hypothyroidism) இருந்திருக்கலாம் அல்லது அதன் பின்னர் குழந்தையாக / இளம் வயதினராக அல்லது வயது வந்த பின்னும் இந்நிலை ஏற்படலாம்.

பிந்திய வகையானது உங்கள் தைரொயிட் சுரப்பி பாதிக்கப்படும்போது ஏற்படுவதாகும். சாதாரணமாக வைரஸ் தொற்று இதற்குக் காரணமாக அமையலாம். இவ் வகையான தொற்றுக்கள் எந்த வயதிலும் ஏற்படலாம். பெரும்பாலும் இளம் வயதிலும், பருவ வயதிலுமே ஏற்படுகின்றன. ஆண்களைவிட பெண்கள் 4 முதல் 7 மடங்கு அதிகமாக இப்பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

மேலும் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு தைரொயிட் சுரப்பியிலுள்ள செல்கள் மீது தாக்குதல் நடத்தும்போது, அது தைரொயிட் ஹோர்மோன் சுரப்பதைப் பாதிக்கும். எனவே தைரொயிட் சுரப்பியானது தேவையான அளவு ஹோர்மன்களை சுரப்பதற்குக் கடுமையாக செயற்படவேண்டி ஏற்படுகின்றது. இதன் காரணமாக அது பெரிதாவதுடன், சுரப்பிக் கட்டி ஏற்படவும் காரணமாக அமையலாம்.

உங்களுக்கு தைரொயிட் சுரப்பிக் கோளாறு இருப்பின் நீங்கள் பின்வரும் அறிகுறிகளை உணரலாம்,

  • களைப்பு
  • சோர்வு
  • குறைந்த கல்விச் செயற்திறன்
  • எடை அதிகரிப்பு
  • மலச்சிக்கல்
  • அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு
  • உலர்ந்த, கனமான மற்றும் வெளிரிய தோல்
  • முடி உதிர்தல்
  • ஞாபக மறதி
  • குளிர் தாங்க முடியாமை
  • கழுத்தில் கட்டிகள் அல்லது தழும்புகள் கழுத்து வீக்கம்
  • உங்களுக்கு மேலே குறிப்பிட்ட ஏதாவது இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அறிகுறிகள் தோன்றுமாயின், உங்கள் பெற்றோருடன் கலந்தாலோசித்து உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்.
  • மருத்துவர் உங்கள் இரத்த மாதிரியொன்றைப் பரிசோதனை செய்து தைரொயிட்டின் நிலைமையை உறுதிப்படுத்துவார்.
  • சிகிச்சை முறையில் உங்களுக்கு தைரொக்ஸின் மாத்திரைகள் வழங்கப்படலாம். அவை வாழ்க்கை முழுவதும் தொடரவேண்டி ஏற்படலாம். மாத்திரைகளை  காலையில் சாப்பாட்டுக்கு முன்னர் / வெறும் வயிற்றில் எடுக்கவேண்டியும், அத்துடன் அவை நேரடி சூரிய வெளிச்சத்திலிருந்து பாதிக்காதவாறு களஞ்சியப்படுத்தி வைக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்படலாம்.
  • நீங்கள் வேறு ஏதாவது வைத்திய தேவைக்காக வைத்தியரை அனுகும்போது அவர் வேறு மருந்து தருவதற்கு முன்னர் நீங்கள் தைரொக்ஸின் மாத்திரைகள் பாவிப்பதைப்பற்றி அவரிடம் சொல்ல வேண்டும்.

உயர் தைரொய்டிஸம் என்பது உங்கள் தைரொயிட் சுரப்பியினால் இரத்தத்தில் அதிகளவு தைரொக்ஸின் உற்பத்திசெய்யப்படும்போது ஏற்படுவதாகும். அது தைரொய்டிஸத்துடன் ஒப்பிடுகையில் மிக அபூர்வமாகவே ஏற்படும். ஆனால் இன்னும் காணப்படுகிறது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் நோயாகவும். பரம்பரையாக ஏற்படும் நோயாகவும் காணப்படுகிறது. இந்நிலையில் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பானது அசாதாரண அணுக்களை உற்பத்தி செய்கிறது.

இதனால் உங்கள் தைரொயிட் சுரப்பி வீக்கமடைந்து தைரொயிட் கட்டியை உருவாக்குகிறது.

பின்வரும் அறிகுறிகள் உங்களுக்குத் தென்படுமாயின் அது உயர் தைரொய்டிஸம் நோய் உள்ளது என்பதையே குறிக்கின்றது. இந்நிலையில் உடனடியாக ஒரு மருத்துவ நிபுணரைச் சந்தித்து தகுந்த சிகிச்சையைப் பெறுவது அவசியமானதாகும்.

  • நிறை குறைதல்
  • படப்படப்பு - வேகமான இதயத்துடிப்பு
  • அதிகமாக வியர்த்தல் / சூடு தாங்க முடியாத நிலைமை
  • பிதுங்கிய கண்கள்
  • நீங்கள் மேல் குறிப்பிடப்பட்டுள்ள நோய் அறிகுறிகளுடன் மருத்துவரைச் சந்திக்கச் சென்றால், அவர் உங்கள் உடலின் தைரொக்ஸின் அளவை அறிந்துகொள்ள சாதாரண இரத்தப் பரிசோதனையொன்றை செய்யச் சொல்வார்.
  • உயர் தைரொய்டிஸம் இருப்பதை உறுதி செய்தால், உங்களுக்கு தைரொய்டுக்கு எதிரான கார்பிமொஷொல் போன்ற மருந்துகளை வழங்கி உங்கள் உடலில் அதிகமாக சுரக்கப்படும் தைரொயிட் ஹோர்மோனை குறைக்க சிகிச்சையளிப்பார்.
  • அத்துடன் உங்களுக்கு ப்ரொப்ரனொலோல் என்ற மாத்திரையை வழங்கி படப்படப்பு, பதட்டம் போன்ற பல நோய் அறிகுறிகளைக் குறைப்பார்.
  • தீவிரமான உயர் தைரொய்டிஸம் உள்ளவர்களுக்கு கதிரியக்க சிகிச்சை அல்லது சத்திரசிகிச்சை என்பன மேற்கொள்ளப்பட ஆலோசனை வழங்கப்படும்.
FaLang translation system by Faboba