புழுத் தாக்கம் என்பது சிறுவர், இளைஞர், வயோதிபர் என்று வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் தாக்கும் ஒரு நோய் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவை பெரும்பாலும் நாம் உண்ணும் உணவு மற்றும் ஈக்கள், நுளம்புகள் போன்றவற்றால் நம் உடலுக்குள் நுழைகின்றன. நம் உடலுக்குள் புகும் அவைகள் பல கட்டங்களாக தமது வாழ்க்கை வட்டத்தை அமைத்துக்கொள்வதுடன் பல வழிகளில் எமது உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகின்றன. எனினும் பெரும்பாலான நோய்களை சிறந்த சுகாதார பழக்க வழக்கங்களினால் தடுத்து நிறுத்தலாம். அத்தோடு முழுக்குடும்பமும் புழுக்களுக்கான சிகிச்சையை ஒரே தடவையில், ஒன்றாகப் பெறுவதன் மூலம் புழுத்தொல்லையை முற்றாக அழிக்கலாம்.

  1. கொக்கிப்புழு அல்லது கொழுக்கிப்புழு
  2. வட்டப்புழு
  3. ஊசிப்புழு
  4. மாட்டிறைச்சி நாடாப்புழு
  5. பன்றி இறைச்சி புழு
  6. சாட்டைப்புழு
  7. யானைக்கால் நோயை ஏற்படுத்தும் புழு

கொக்கிப்புழு என்பது ஒரு ஒட்டுண்ணியாகும். இவை பெரும்பாலும் எமது சிறுகுடலில் தங்கியபடி எமது இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. அவை வளர்ந்து பெரியவை ஆனவுடன் நம் சிறுகுடல் சுவரை பல மடங்கில் ஆக்கிரமிப்பதுடன் தங்கள் தாக்கத்தையும் அதிகரிக்கின்றன. அதன் விளைவாக சிறுகுடலின் சகல பகுதிகளிலும் இரத்தக்கசிவு ஏற்படுகின்றது.

காரணிகள்

கொக்கிப்புழுக்கள் வெதுவெதுப்பும் ஈரத்தன்மையுமுள்ள சூழலில் சிறப்பாக தங்கள் குஞ்சுகளைப் பொரிக்கின்றன. இந்த குஞ்சுகள் பாதத்தின் தோல்கள் ஊடாக உடலுக்குள் ஊடுறுவுகின்றன. விசேடமாக கால் விரல்கள் மற்றும் உள்ளங்கால் இப்படியான இடங்களில் நீங்கள் வெறுங்காலுடன் நடப்பதால் இந்த நோய் தொற்றுக்கு ஆளாவீர்கள்.

அறிகுறிகள்

ஆரம்பத்தில் நோயின் தாக்கம் சிறியதாக இருந்தால் எந்த அறிகுறிகளும் தெரியாது. கொக்கிப்புழு குஞ்சுகள் நம் பாதத்தின் ஊடாக ஊடுறுவுவதன் மூலம் அந்த பகுதியில் அரிப்பு ஏற்படுவதுடன் கொப்புளங்களும் உண்டாகும். நோய்த்தாக்கம் அதிகரித்தால் அதன்மூலம் இரும்பு குறைபாடு, இரத்தசோகை என்பன ஏற்படும். இதனால் உங்களுக்கு சோம்பல், தூக்கம், கவலை, நெஞ்சு படபடப்பு என்பன ஏற்படும். இதனால் மேலும் பல அறிகுறிகளான அடிவயிற்றில் வலி, குமட்டல், வீக்கம் என்பன ஏற்படும். நீங்கள் உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் இந்த புழுக்களால் உறிஞ்சப்படுவதால் உங்களுக்கு சக்தி குறைபாடு ஏற்படும். நாள் செல்ல செல்ல எடை குறைவடைவதுடன் இதயகோளாறு வரை கொண்டு போய்விடும் அபாயம் உள்ளது.

சிகிச்சை முறை

நோயாளியின் மல மாதிரியை நுண்ணுயிர் காட்டியூடாக விசேடமாக பரிசோதிப்பதன் மூலம் நோயைக் கண்டறியலாம். முழுமையான குருதி பரிசோதனை மூலம் இரத்தச்சோகையை தடுக்கலாம். பின்வரும் மருந்துகள் இதற்காக கொடுக்கப்படுகின்றன (PyrantelPalmoate, Alhendazole, Mehendazole) என மருத்துவ பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் இரத்தசோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு என்பவற்றை நிவர்த்தி செய்ய சிகிச்சை அளிக்கப்படும்.

தவிர்த்துக்கொள்ளும் முறை

எப்போதும் சுத்தமான மலசலகூடத்தை பாவிப்பதுடன் எப்போதும் கைகள் கழுவி சுகாதார முறைகள் பின்பற்றுவதனூடாகவும் இதனை தவிர்த்துக்கொள்ளலாம். தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளில் வெறுங்காலுடன் நடப்பதை தவிர்த்துக்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் மனித மலக்கழிவுகளை உரமாக உங்கள் வீட்டுத்தோட்டத்தில் பயன்படுத்தாதீர்கள்.

வாழ்நாள் முழுவதும் மனித உடலில் வாழும் மிகச்சிறிய புழுக்கள் இவை. பெருங்குடலின் பிற்பகுதியிலும் மலவாசலிலும் பெரும்பாலும் காணப்படும். இரவு நேரங்களில் மலவாசலின் வெளிப்பகுதிக்கு வருவதுடன் மலவாசலின் விளிம்புகளில் அது முட்டைகளை இடும்.

காரணிகள்

பெண் ஊசிப்புழுக்கள் ஆயிரக்கணக்கான முட்டைகளை இடும். இவைகள் நோயினால் பாதிக்கப்பட்டவரின் மலவாசல் வழியாக மற்ற இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. உதாரணமாக படுக்கை விரிப்புகள், இரவு உடைகள், கைகள், விரல் நகங்கள் என்பவற்றின் ஊடாக வீட்டுத்தளபாடங்கள், குளியலறை, உணவுப்பண்டங்கள், குடிவகைகள், வீட்டின் தூசுக்கள் என்று பல இடங்களுக்கும் பரப்பப்படுகின்றன. விரல் நகங்களில் இருக்கும் இந்த முட்டைகள் வாய் வழியாக உள்ளே சென்று இரைப்பை குடல் சார்ந்த பகுதிகளில் தங்கள் புதிய வாழ்க்கை வட்டத்தை ஆரம்பிக்கின்றன. சில சமயங்களில் இந்த முட்டைகள் தொற்று ஏற்பட்ட ஒருவரின் மல வாசல் பகுதியில் இடப்பட்டு கடுமையான விளைவுகளை உண்டாக்குகின்றன.

அறிகுறி

கடுமையான அரிப்பு, முள்ளால் குத்துவது போன்ற வலி என்பன ஆசனவாயிலிலும்  ஏற்படும். குறிப்பாக இரவு மற்றும் காலை நேரங்களில் இவை ஏற்படுவதால் தூக்கம் பாதிக்கப்படும், அடிவயிற்றில் வலி, உணவில் நாட்டமின்மை என்பனவும் ஏற்படும். ஆனால் ஒரு சிலருக்கு எந்தவித அறிகுறியும் காட்டாது.

சிகிச்சை

ஊசிப்புழுக்களை நுண்ணியிர்க்காட்டியில் அடையாளம் காணமுடியும். அதன் மாதிரியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் நோயாளியின் குதத்தின் உள் வெளிப்புறங்களில் சிறியதொரு ஒட்டும் டேப்பை ஒட்டுவதன் மூலம் அடையாளம் காணலாம். ஆனால் இதனை அதிகாலையில்  குறிப்பிட்ட பகுதியை கழுவுவதற்கு முன் செய்ய வேண்டும். ஒரு முறை நோயை அடையாளம் கண்டுகொண்டதும் Anthelmintics Mehendazole pyrantel pamoate அல்லது Alhendazole மருந்து வகைகளை குறைந்தது மூன்று வேளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிகிச்சை பெற்றுக்கொள்வதன் மூலம் இதனை தடுக்கலாம். ஏனெனில் அவர்கள் எவ்வளவு சுகதேகியாக காட்சித்தந்தாலும் அந்த புழுக்கள் மிக இலகுவாக எவரிடமும் பரவக்கூடும்.

தவிர்த்துக்கொள்ளும் முறை

உணவு உட்கொள்ள முன்பும் மலசல கூடம் சென்று வந்த பின்பும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். விசேடமாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டவரின் படுக்கை விரிப்புக்கள் ஆகியவற்றை ஏனையோர் பாவிக்க கூடாது. சிறுகுழந்தைகள் தங்கள் மலவாசலை சொரிவதையும் அதன் பின் கை சூப்புவதையும் தவிர்த்துக்கொள்ளும்படி நாம் அவர்களை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தப் புழுக்கள்தான் மனிதருக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய புழுக்கள் ஆகும். இவை 30செ.மீ நீளம் வரை வளரும். இந்தப் புழுக்கள் பொதுவாக உணவுக்குழாயிலேயே வாழும். ஆனால் சில சமயங்களில் இரத்தக்குழாய் மற்றும் நுரையீரல் பகுதியிலும் காணப்படும். உச்சக்கட்டமாக இந்த வட்டப்புழுக்கள் உள்ளுறுப்புக்களிலும் நுளைகின்றன. ஈரல் மற்றும் இதயத்தில் கூட இவை வாழ்கின்றன.

காரணிகள்

வட்டப்புழுக்களின் முட்டைகள் கலந்துள்ள உரவகைகளினால் உருவாக்கப்படும் தாவர உணவுகளை உட்கொள்ளும் மனிதன் அவற்றால் நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகின்றான். வட்டப்புழுக்களின் முட்டைகளிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் சிறுகுடலை துளைத்துக்கொண்டு இரத்தக்குழாய்க்குள் நுழைகின்றன. பின்னர் அவை நுரையீரலுக்கு செல்கின்றன. பின்னர் சிறுகுடலுக்கு திரும்பும் புழுக்கள் பெரிதாக வளர்கின்றன.

அறிகுறி

அனேகமாக மனிதர்களுக்கு நோய் அறிகுறிகள் தெரியாது. இந்த புழுக்கள் நுரையீரலுக்குள் வளர்ச்சியடைவதன் மூலம் நோய் மேலும் கடுமையாவதற்கான சூழ்நிலை உருவாகின்றது. இதன் காரணமாக மனித உடலில் ஒவ்வாமை தன்மை அல்லது அலர்ஜி ஏற்படுகின்றது. இதன் விளைவாக பின்வரும் அறிகுறிகள் தோன்றுகின்றன.

  • வரட்டு இருமல்
  • காய்ச்சல்
  • மூச்சு விடுவதில் சிரமம்
  • இளைப்பு
  • அடிவயிற்றில் வலி
  • தலைச்சுற்றல்
  • தொண்டை கரகரப்பு
  • குடல்முனை அலற்சி

சிகிச்சை முறை

மலத்தின் மாதிரியை நுண்ணுயிர்க்காட்டியினூடாக பரிசோதிப்பதன் மூலம் வட்டப்புழுவை கண்டறியலாம். ஆனால் ஆரம்ப நிலையில் இதனைக் கண்டறிவது சிறிது கடினம். முழுமையான குருதி எண்ணிக்கையை பரிசோதிப்பதன் மூலம் ஒருவர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளாரா என்பதை கண்டறிய முடியும். இந்த தொற்றுக்கு நோய் எதிர்ப்பு மருந்தாக Mebedazole அல்லது Albendazole கொடுக்கப்படுகின்றது.

தவிர்த்துக்கொள்ளும் முறை

மலசலகூடத்தைப் பயன்படுத்திய பின்பும், சாப்பாட்டுக்கு முன்பும், உணவுப்பொருட்களை கையாள்வதற்கு முன்பும் கைகளை சவர்க்காரமிட்டு நன்றாக கழுவவேண்டும். பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வதற்கு முன்பு அவற்றை நன்றாக கழுவ வேண்டும்.

மனிதக்கழிவுகளை ஒரு பொழுதும் உரமாக பாவிக்கக்கூடாது. அவற்றை தண்ணீர் ஊற்றும் மலசலகூடத்திலேயே அகற்றவேண்டும்.

படுக்கை விரிப்புக்களை நன்றாக கழுவிய பின் அவற்றை சூரிய ஒளியிலேயே காயவிடவேண்டும்.

இந்த புழுக்கள் பெருங்குடலில் காணப்படுகின்றது. சாட்டை வடிவில் இருப்பதால் இதனை சாட்டைப்புழுவென அழைக்கின்றனர்.

காரணிகள்

சாட்டைப்புழுக்களின் முட்டைகள் இருக்கும் உணவுப்பொருட்களை உண்பதால் இந்த நோய்தொற்று ஏற்படுகின்றது.

அறிகுறிகள்

உங்கள் உடலுள்ள சாட்டைப்புழுக்களின் எண்ணிக்கையை பொருத்து உங்களின் நோய்த்தாக்கம் அமையும். அவை சிறு எண்ணிக்கையில் இருக்கும் வரை எந்தவிதமான நோய் அறிகுறியையும் காட்டாது. ஆனால் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தால் பின்வரும் நோய் அறிகுறிகளை காட்டும்.

  • தலைச்சுற்று
  • அடிவயிற்றில் வலி
  • மலச்சிக்கல் அல்லது வயிற்றோட்டம்
  • மலத்துடன் இரத்தம் வெளியேறுதல்
  • அடிக்கடி வாய்வு வெளியேறுதல்

சிகிச்சை முறை

மலத்தின் மாதிரியை நுண்ணுயிர்க்காட்டியில் பரிசோதிப்பதன் மூலம் சாட்டைப்புழுக்களின் முட்டையின் தன்மையை அறிந்து கொள்ளலாம். நோய் எதிர்ப்பு மருந்தாக Mebendazole மற்றும் Albendazole என்பவை அளிக்கப்படுகின்றது.

தவிர்த்துக்கொள்ளும் முறை

உணவுக்கு முன்பும், உணவுப்பொருட்களைக் கையாள்வதற்கு முன்பும், மலசலகூடத்தை பாவித்த பின்பும் சவர்க்காரம் இட்டு கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு முன்பு அவற்றை நன்றாக கழுவ வேண்டும். மனித கழிவுகளை ஒருபோதும் விவசாய உரமாக பயன்படுத்த வேண்டாம்.

நாடாப்புழுக்கள் தங்கள் வாழ்க்கை வட்டத்தை பன்றியினதும், மாட்டினதும் உடலில் தொடங்குகின்றன. மனித உடலிலும் இவை இருக்கும். இரைப்பை பகுதியிலேயே இவை பெரும்பாலும் இருக்கும். இவை இங்கிருந்து குருதிக்கலங்களை சென்றடைகின்றன. பின் இவை மனித உள்ளுறுப்புக்களின் பல பகுதிகளையும் அடைகின்றன. நாடாப்புழுவானது சில மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது.

காரணிகள்

நன்றாக வேகவைக்காத இறைச்சியை உண்பதால் ஆரம்பக்கட்டத்திலுள்ள நோய்க்கிருமிகள் தொற்றுகின்றன.

அறிகுறி

சிறிதளவு தொற்றுள்ள மனிதர்களுக்கு எந்தவிதமான அறிகுறியையும் காட்டாது. நோய் கடுமையானால் எடை குறைதல், மயக்கம், அடிவயிற்றில் வலி, வயிற்றோட்டம், தலைவலி, தலைச்சுற்று, வயிறு காய்தல், பசியின்மை என்பன ஏற்படும்.

சிகிச்சை முறை

மலத்தின் மாதிரியை நுண்ணியிர்க்காட்டியில் பரிசோதிப்பதன் மூலம் கிருமியின் தன்மையையும் நோயின் தாக்கத்தையும் அறிந்து கொள்ளலாம்.

இந்த நோய்த்தாக்கத்துக்கு மருந்தாக Albendazole அல்லது Praziquantal என்பன கொடுக்கப்படுகின்றன.

தவிர்த்துக்கொள்ளும் முறை

  • உண்ணும் இறைச்சி முழுவதுமாக சமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பின் உண்ணுங்கள்.
  • எப்போதும் சரியான சுகாதாரமான மலசல கூடத்தையே பாவியுங்கள்.
  • மலங்கழித்தலில் சரியானநடைமுறைகளைக் கையாளுங்கள்.
  • சரியான முறையில் கைகளை கழுவுங்கள்.

ஆரம்ப கட்டத்திலுள்ள நோய்க்கிருமிகள் நுளம்புகள் கடிக்கும்போது மனித உடலில் இரத்ததுடன் கலக்கின்றன.

இவை குறிப்பாக மந்தமான, சோம்பலான உடலுடையவர்களிடமே தங்கியுள்ளன. ஆனால் சில வகையானவை உடல் துவாரங்களிலும் கொழுத்த உடலின் தோலுக்கடியிலும் முட்டையிடுகின்றன.

இதன் தாக்கத்தின் காரணமாக மனித உடலில் அழற்சி சார்ந்த வீக்கம் ஏற்படுகின்றது. இந்த புழுக்களின் குஞ்சுகளை Microfilariae என்று அழைக்கின்றனர்.

காரணிகள்

மேலே குறிப்பிட்டதுபோல் நோய்க் காவிகளை கொண்டுள்ள நுளம்புகள் உங்களை கடிப்பதன் மூலம் கிருமிகள் இரத்த ஓட்டத்துடன் கலந்து விடுகின்றன.

அறிகுறி

ஆரம்ப கட்டங்களில் நுளம்புத்தாக்கத்தால் கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றும்.

  • காய்ச்சல்
  • இடுப்பு மற்றும் புயம் போன்ற இடங்களில் நிணநீர் கட்டிகள் தோன்றும்.
  • Microfilariae தாக்குவதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்க்கு ஒருவர் எளிதாக ஆளாக்ககூடிய நிலைமை ஏற்படும். இதனால் குறிப்பிட்ட சிலருக்கு வரட்டு இருமல் அறிகுறியாக இருக்கும்.
  • தோல் அழற்சி, அரிப்பு என்பன தோலின் அடிப்பகுதியில் இருக்கும்.
  • சில வகையானவை கண்ணில் பாதிப்பை ஏற்படுத்துவதால் குருட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

நோய் முற்றிவிட்டால் பிறப்புறுப்புக்கள் மற்றும் மூட்டுக்களில் வீக்கம்  உண்டாகும். நோயின் தாக்குதல் தொடர்ந்து ஏற்படுமானால் அழற்சி, குணப்படுத்த முடியாத வீக்கம் ஏற்பட்டு இறுதியாக எல்லோராலும் Elephantiasis என அழைக்கப்படும் யானைக்கால் நோயாக மாறிவிடும்.

சிகிச்சை

இரத்த சிறுநீர் மாதிரிகளை நுண்ணுயிர் காட்டியில் பரிசோதிப்பதன் மூலம் கண்டறியலாம்.

இரத்த மாதிரிகள் இரவு நேரங்களிலேயே எடுக்கப்படுகின்றன. இந்த நேரத்திலேயே உடலின் ஆழமான பகுதியில் திசுக்களில் இருந்து குஞ்சுகள் குருதிக்கலங்களுடன் கலக்கின்றன. இவை ஓப்பிட்டு பார்க்கப்படுகின்றன.

இந்த நோய்க்கு மருந்தாக Alhendazole மற்றும் Ivermetacin  என்பவை மிக நீண்ட நாட்களுக்கு கொடுக்கப்படுகின்றன. நோய்த்தாக்கம் உடம்பிலிருந்து  முற்றாக குணமடையும் வரை இந்த சிகிச்சை தொடரும். சிலருக்கு பாதிக்கப்பட்ட மூட்டுக்கள் மற்றும் பிறப்புறுப்புகளில் சத்திரசிகிச்சை கூட செய்யவேண்டி வரலாம்.

நோய் குணமாகினாலும் மிக நீண்ட நாட்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டி வரலாம். இரத்த பரிசோதனை மூலம் நோய் முற்றாக குணமாகிவிட்டதை கண்டறிய வேண்டும்.

மூட்டுக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான விசேட பயிற்சிகளையும் சிகிச்சைகளையும் அளிப்பதன் ஊடாக காயமேற்படுவதை தடுக்கலாம்.

தவிர்த்துக்கொள்ளும் முறை

பைலேரியா பூச்சிகள் தொற்றுவதை தடுப்பதற்கான மிகச்சிறந்த வழி நுளம்புகள் பரவுவதை தடுப்பது தான். அதற்கு கீழ் கண்ட வழிவகைகளை பின்பற்ற வேண்டும்.

நுளம்புகள் பரவும் இடங்களை கண்டறிந்து அழிக்கவேண்டும். விசேடமாக அசுத்த நீர் சேராமல் அகற்ற வேண்டும். நுளம்பு முட்டைகளை அழிக்க வேண்டும். மீன்கள் வளர்ப்பதன் மூலம் இதனை செய்யலாம் .நுளம்பு உங்களை கடிப்பதை தடுப்பதற்காக உங்களால் முடிந்தவரை பயன்படுத்த வேண்டும்.

இதனை முற்று முழுதாக தடுக்கவேண்டுமாயின் பொது சுகாதார சேவையுடன் இணைந்த பாரிய அளவிலான சிகிச்சை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

FaLang translation system by Faboba